என்ன தருவேன் என்ன தருவேன் ***

என்ன தருவேன் என்ன தருவேன்
என் இறைவா நான் என்ன தருவேன்
எனக்கு பிடித்த ஒன்றைத்தான்
உனக்குத் தரவே நினைத்தேன்
எனக்குப் பிடித்த உன்னைப் போல்
ஏதுமில்லை உலகில் அன்பே

1. எனக்கென நீ தந்த உறவுகள் உனக்களித்தேன்
மனதிலே நிகழ்ந்திடும் மாற்றங்கள் உனக்களித்தேன்
சுமைகளாய் தெரியும் சோகங்கள் தருகின்றேன்
சுமக்கையில் நீ தரும் சுகங்களைத் தருகின்றேன்
எல்லாம் உனது என்றால் எதை நான் கொடுப்பேன் உனக்கு

2. உழைத்திட விளைந்திடும் யாவையும் தருகின்றேன்
உள்ளத்து வேதனை உன் பதம் படைக்கின்றேன்
பகிர்ந்திடும் போதிலே உள்ளங்கள் நிறையுதே
விடியலின் பாதைகள் விழிகளில் பார்க்கின்றேன்
எல்லாம் உனது என்றால் எதை நான் கொடுப்பேன் உனக்கு