உலகைப் படைத்த இறைவனே ***

உலகைப் படைத்த இறைவனே
நல்லுவகையோடு தருகின்றோம்
எம் இதயம் அளிக்கும் காணிக்கை
இறைவா ஏற்பீர் அன்புடனே

1. அனைத்து உலகின் ஆண்டவரே
உம் அருளால் விளைந்த பொருட்களால்
அப்பமும் இரசமும் தருகின்றோம்
உம் உணவாய் இரத்தமாய் மாற்றுவீரே

2. ஆறுதல் அளிக்கும் ஆண்டவரே
யாம் அன்புடன் தருவோம் காணிக்கை
வாழ்வின் சுமைகள் சோகங்களை
நல் சுவையாய் இன்பமாய் மாற்றுவீரே