அம்மா அமுதினும் இனியவளே அமலியாய் உதித்தவளே ***

அம்மா அமுதினும் இனியவளே அமலியாய் உதித்தவளே
அகமே மகிழ்வாய் மரியே

1. தேவனாம் ஆண்டவரைப் பூவினில் ஈன்றவளே
அருளினிலே உறைந்தவளே
அடியவர் நாவில் நிறைந்தவளே

2. அமலியாய் அவதரித்தாய் அலகையின் தலைமிதித்தாய்
அவனியிலே அருள்பொழிவாய்
அடியவர் தாயாய் அமைந்திடுவாய்

3. அருள்நிறை மாமரியே அமல உற்பவியே
கறைபடா கன்னிகையே காத்திடுவாயே எம்மையே