இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஆண்டவரைப் பாடுவது நன்று ***

ஆண்டவரைப் பாடுவது நன்று
உன்னதரைப் புகழ்வது நன்று
உமக்கு நன்றி உரைப்பது நன்று
உம்மை நினைந்து மகிழ்வது நன்று

1. காலையிலே உம் பேரன்பையும்
இரவினிலே வாக்குப் பிறழாமையும்
வீணையோடும் இசைக் கருவியோடும்
எடுத்துரைப்பது நன்று
வியத்தகு உம் செயலால் என்னை மகிழ்விக்கின்றீர்
வலிமை மிகும் உம் செயல்களை
மகிழ்ந்து பாடிடுவேன்

2. தீமை செய்வோர் அனைவரையும்
உம் கரத்தால் சிதறடித்தீர்
புது எண்ணெய் என் மீது
நிதம் பொழிந்து வலிமை தந்தீர்
ஆண்டவர் இல்லத்திலே நடப்படும் மரங்களைப் போல்
செழித்திடுவேன் கனி தருவேன்
பசுமையாய் என்றும் இருப்பேன்