ஆகட்டும் இறைவா ஆகட்டுமே ***

ஆகட்டும் இறைவா ஆகட்டுமே
உம் சித்தம் என் வாழ்வில் ஆகட்டுமே
தருகின்றேன் தருகின்றேன்
என்னையே பலியாய் தருகின்றேன்

1. கருவில் என்னை அறிந்தவா - உம்
கையில் என்னை உம் சாயலிலே
உண்டாக்கிய என் இறைவா
அறிவும் திறனும் நிறைந்தவா - உம்மைப்
பணிந்த வாழ்வில் நிறைந்தவா - உம்மைப்
பணிந்த வாழ்வில் தாழ்வுண்டா

2. உரிமை வாழ்வை நான் பெற
அருமை மகனை பலி தந்தீர்
உவமை இல்லா உம் பேரன்பை
அப்பா அடியேன் பணிகின்றேன்
கருணையே என் இறைவனே - உமைச்
சரணடைந்தேன் ஆட்கொள்ளும்