இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

திருப்பலி பீடம் குருவுடன் செல்வோம் ***

திருப்பலி பீடம் குருவுடன் செல்வோம்
அருளலை பாயும் ஆற்றிலே வீழ்வோம்
செல்வோம் வீழ்வோம்

1. திருச்சபை அளிக்கும் மலைப்பலி வாய்ப்பை
விருப்புடன் ஏற்று பொறுப்புடன் நடத்த
கருத்துடன் கூடி கரங்களைக் குவித்து
கலையில் ஒளியில் கடவுளைப் பாட

2. மரமதில் கரமதனை விரித்து
மண்ணுயிர் வாழ தன்னுயிர் ஈந்து
பரணடி நின்றால் பாவ இருள் நீங்கும்
பகலவன் முன்னே பனித்துளி போல

3. மனுக்குலம் மீட்க மனுவுரு எடுத்து
மனு உடலான இறைமகன் இயேசு
உணவினை உண்டு உயிரினில் கலந்து
உலகொடு ஒன்றாய் நாம் உறவாட