உன்னதங்களிலே இறைவனுக்கு ***

உன்னதங்களிலே இறைவனுக்கு
மாட்சிமை உண்டாகுக
உலகினிலே நல் மனத்தவர்க்கு
அமைதியும் உண்டாகுக
புகழ்கின்றோம் யாம் உம்மையே
வாழ்த்துகின்றோம் இறைவனே
உமக்கு ஆராதனை புரிந்து
உம்மை மகிமைப்படுத்துகின்றோம் யாம்
உமது மேலாம் மாட்சிமைக்காக
உமக்கு நன்றி நவில்கின்றோம்
ஆண்டவராம் எம் இறைவனே
இணையில்லாத விண்ணரசே
ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும்
தேவதந்தை இறைவனே
ஏகமகனாக ஜெனித்த ஆண்டவர்
இயேசு கிறிஸ்து இறைவனே
ஆண்டவராம் எம் இறைவனே
இறைவனின் திருச்செம்மறியே
தந்தையினின்று நித்தியமாக
ஜெனித்த இறைவன் மகனே நீர்
உலகின் பாவம் போக்குபவரே
நீர் எம்மீது இரங்குவீர்
உலகின் பாவம் போக்குபவரே
எம் மன்றாட்டை ஏற்றருள்வீர்
தந்தையின் வலத்தில் வீற்றிருப்பவரே
நீர் எம்மீது இரங்குவீர்
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே
நீர் ஒருவரே தூயவர்
நீர் ஒருவரே ஆண்டவர்
நீர் ஒருவரே உன்னதர்
பரிசுத்த ஆவியுடன் தந்தை இறைவனின்
மாட்சியில் உள்ளவர் நீரே - ஆமென்