எளியோர் எங்கள் காணிக்கை ஏற்றருள்வாயே ***

எளியோர் எங்கள் காணிக்கை ஏற்றருள்வாயே
இறைவனே நல்வாழ்வினை எமக்கருள்வாயே

1. அரியதொன்றும் இல்லை நெஞ்சில்
அன்பு ஒன்றே உண்டு
நெறியில் வாழ்ந்த நேர்மை என்னும்
நலனும் சிறிதே உண்டு

2. இறைவன் வகுத்த வாழ்வு என்னும்
இனிய வரமும் வேண்டும்
இருளின் உறக்கம் தீர உள்ளம்
அருளில் மலர வேண்டும்

3. பலியின் உணவு வேண்டும் உண்டு
புனிதராக வேண்டும்
படைப்பெல்லாம் உம் திருமுன் கொணர்ந்து
படைத்து மகிழ வேண்டும்