இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கிறிஸ்துவின் பலியிதுவே இதில் கலந்திட வாருங்களே ***

கிறிஸ்துவின் பலியிதுவே இதில் கலந்திட வாருங்களே
இறைகுலமே எழுந்திடுக இறைவளமே அடைந்திடுக

1. உயரும் மனிதனின் துயர் தணிக்க
நல்ல தோழனாய் உயர்ந்திடவே
புனிதனின் பாதையில் நடந்திடவே
ஒரு புனிதனாய் மாறிடவே
இயேசுவின் வழியினை இகம் கொள்வோம்
இனிதுடன் அதனை நிதம் தொடர்வோம்

2. மனிதனின் மாண்பினை உணர்ந்திடவே
புது மகத்துவம் அடைந்திடவே
மன்னவன் இயேசுவை அறிந்திடவே
முழு மனிதனாய் மாறிடவே
மலர்ந்திடும் மலரினை முகர்ந்திடுவோம்
புலர்ந்திடும் பலியினில் பலம் பெறுவோம்