இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அலைகடலின் ஓசையிலே அன்புமொழி கேட்குதம்மா ***

அலைகடலின் ஓசையிலே அன்புமொழி கேட்குதம்மா
அன்னையவள் ஆலயத்தில்
அருள் நிறைந்து காணுதம்மா

1. நொண்டி முடம் கூன் குருடு
நோய்களெல்லாம் தீர்ந்திடவே
அண்டி வந்த அனைவருக்கும்
அருள்வழங்கும் அன்னையம்மா

2. கண்கவரும் ஆலயமும் காணிக்கைப் பொருளறையும்
எண்ணில்லாக் கவிதைகளை என்றென்றும் கூறுதம்மா

3. வேளைநகர் திருத்தலத்தில் வீற்றிருக்கும் அன்னையிவள்
வேண்டும் வரம் தந்திடுவாள் வேதனைகள் தீர்த்திடுவாள்