அர்ப்பணப் பூவாக அர்ச்சனையாய் அளிக்க ***

அர்ப்பணப் பூவாக அர்ச்சனையாய் அளிக்க
தேவனே வருகின்றோம் உம் அருட்பாதம் படைக்கின்றோம்

1. கதிரவன் அளிக்கின்ற காணிக்கை ஒளியாகும்
மலர்களும் அளிக்கின்ற காணிக்கை மணமாகும்
ஏழையளிக்கும் காணிக்கை இதுவாகும்
எம் இறையவனே எம் இனியவனே
எம் இதயத்தைத் தருகின்றோம் ஏற்றிடும் எம் தேவா

2. எண்ணங்கள் எல்லாம் உனதாக மாற வேண்டும்
வாழ்வெல்லாம் உன்னிலே நிலையாக மாற வேண்டும்
அன்பின் தேவா எந்நன்றி கூறிடுவேன்
எம் இறையவனே எம் இனியவனே
யாம் எம்மையே தருகின்றோம் ஏற்றிடும் எம் தேவா