புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஆண்டவரே என் ஆற்றலாய் உள்ளவரே ***

ஆண்டவரே என் ஆற்றலாய் உள்ளவரே
உமக்கே நான் அன்பு செய்கின்றேன்
அவரே என் கற்பாறை அரணும் மீட்பும்
அவரே என் கேடயம் வலிமையும் துணையும்

1. என் துன்பநாளில் பகைவர்கள் தாக்க
என் அன்பு தேவன் அடைக்கலமானார்
நெருக்கடியில்லா இடத்திற்கு அழைத்தாரே
நேரிய அன்பு கூர்ந்தென்னைக் காத்தாரே

2. வலிமையைக் கச்சையாய் அளித்தவர் அவரே
வலியையும் நலமாய் ஆக்கினார் அவரே
எந்தன் கற்பாறை ஆண்டவர் வாழ்க
எந்நாளும் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக