ஆண்டவர் வழியை ஆயத்தம் செய்வோம் ***

ஆண்டவர் வழியை ஆயத்தம் செய்வோம்
அவரின் பாதைகளை செம்மையாய் ஆக்குவோம்
செல்லுவோம் அவர் வழியில் நாம் செல்லுவோம்

1. பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரவச் செய்வோம்
மலைகள் குன்றுகள் எல்லாம் தாழ்த்தி வைப்போம்
கோணலானவற்றை நேராக ஆக்குவோம்
கரடு முரடானவற்றை சமமான வழி செய்வோம்

2. மனிதர் எல்லாரும் தமது மீட்பைக் காண
கடவுள் வந்துவிட்டார் நம்மைக் கண்டுவிட்டார்
மனம் திரும்புவோம் நற்செய்தி நம்புவோம்
விண்ணரசு நெருங்கி விட்டது நம்மிடை வந்துவிட்டது