இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இறை அன்பில் வாழ எழும் இறைகுலமே ***

இறை அன்பில் வாழ எழும் இறைகுலமே
நிறை அருள் பெறவே இணைந்திடுவோம்
இறைவனின் அரசு இகம் எங்கும் பரவ
இனிதாய் இணைவோம் திருப்பலி செய்வோம்
எழுவோம் இணைவோம் தருவோம் நமைத் தருவோம்

1. மனிதனின் உரிமையை மதித்திடவும்
மனிதனின் மாண்பினைப் போற்றிடவும்
எளியவர் ஏற்றங்கள் பெற்றிடவும்
இறைமகன் பலி செய்ய அழைக்கின்றார் - நாம்

2. சுயநல அவலங்கள் ஒழித்திடவும்
சுதந்திர வாழ்வினை அடைந்திடவும்
சுமைகளைச் சுகமாய் மாற்றிடவும்
திருமகன் நமைத் தினம் அழைக்கின்றார் - நாம்