எங்கும் புகழ் யேசு ராசனுக்கே எழில் மாட்சிமை வளர் வாலிபரே ***

எங்கும் புகழ் யேசு ராசனுக்கே
எழில் மாட்சிமை வளர் வாலிபரே! 
உங்களையல்லவோ உண்மை வேதங் காக்கும் ,
உயர்வீரரெனப் பக்தர் ஓதுகிறார்

1. ஆயிரத் தொருவர் ஆவிரல்லோ நீரும்
அதை அறிந்து துதி செய்குவீர் ;
தாயினும் மடங்குசதம் அன்புடைய
சாமி யேசுவிக்கிதயம் தந்திடுவீர்

2. கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்குக்
கடன்பட்டவர்கள் கண்திறக்கவே ;
பல்வழி அலையும் பாதை தப்பினோரைப்
பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவீர்

3. தாழ்மை சற்குணமும் தயை காருண்யமும்
தழைப்பதல்லோ தகுந்த கல்வி?
பாழுந்துர்க்குணமும் பாவச் செய்கையாவும்
பறந்தோடப் பார்ப்பதுங்கள் பாரமன்றோ?

4. சுத்த சுவிசேஷம் துரிதமாய்ச் செல்ல
தூதர் நீங்களே தூயன்வீரரே ;
கர்த்தரின் பாதத்தில் காலைமாலை தங்கிக்
கருணை நிறை வசனம் கற்றிடுவீர்