உந்தன் பாதம் பணிந்து நான் வாழ வேண்டும் இயேசுவே ***

உந்தன் பாதம் பணிந்து நான் வாழ வேண்டும் இயேசுவே
பலியிலே கலந்திட வேண்டி நின்றேன் தெய்வமே

1. அன்பில் நிலைக்கும் இதயமே ஆற்றல் மிகுந்ததே
பண்பில் உயர்ந்து வாழுமே புதிய உறவிலே
பிறரின் நலனில் மகிழ்ந்திட
தந்தேன் என்னை உந்தன் பாதம் என்னை நீ ஏற்றிடுவாய்

2. மனிதநேயம் மலரவே என்னைத் தருகின்றேன்
உண்மை அன்பு உயர்ந்திட உறுதி கொடுக்கின்றேன்
உந்தன் ஆட்சி மலர்ந்திட
தந்தேன் என்னை உந்தன் பாதம் என்னை நீ ஏற்றிடுவாய்