இரக்கம் மிகுந்த கரத்திலே என்னை முழுதும் அர்ப்பணமே ***

இரக்கம் மிகுந்த கரத்திலே என்னை முழுதும் அர்ப்பணமே
வாழ்வது என்னில் நீயாக வாழ்க்கை எல்லாம் உமக்காக
எல்லாம் தந்தேன் என்னைத் தந்தேன்

1. குயவன் கையில் களிமண்ணாய்
கொடுத்தேன் என்னை உன்னிடத்தில்
எடுத்து உமது விருப்பம் போல்
வடிவம் கொடுத்து வனையுமே
உனக்காய் வாழும் ஒரு கணம்
அதுவே வாழ்வின் பேரின்பம்
நீயில்லாத வேறிடம் அனைத்தும் இருந்தும் ஏதின்பம்
என்னிறைவா அர்ப்பணமே
என்னை முழுதும் ஆட்கொள்ளுமே

2. உமது அன்பு தீபமாய் எரிய என்னை எரித்திடும்
உமது உண்மை நாதமாய்
ஒலிக்கக் குரலை வளர்த்திடும்
எனது சிறிய விளக்கிலே எரியும் தீபம் நீயன்றோ
எனது சொல்லும் செயல்களும் உமது தீப ஒளியன்றோ
என்னிறைவா எரித்திடும் உமது ஒளியைப் பரப்பிடும்