இறைவா என் இறைவா காக்கும் கற்பாறையே ***

இறைவா என் இறைவா காக்கும் கற்பாறையே
ஏங்கும் என் குரலை கேளாய் போய் விடாதீர்

1. அமைதி காத்திருந்தால் பாழ்குழி வீழ்ந்தவனானேன்
தூயகம் நோக்குகின்றேன் கைகள் தூக்குகின்றேன்
உதவிகள் கேட்டு ஓடிவந்தேன்
புதியதோர் பதிலைத் தேடுகிறேன்
பொல்லாரோடு ஒழிப்பீரோ தீயவரோடு அழிப்பீரோ

2. கெஞ்சும் போது கேட்டால் கேடயம் வலிமை ஆனார்
நெஞ்சம் உம்மை நம்பும் போற்றி தேவன் போற்றி
உதவிப் பெற்றேன் நான் உளம் மகிழ்ந்தேன்
இசை தொடுத்தேன் நன்றி கூறுகின்றேன்
விடுதலை தாரும் இறைவனே ஆசி வழங்கும் ஆயனே