இறைவனின் புகழ்பாட இங்கு இதயங்கள் பல கோடி ***

இறைவனின் புகழ்பாட இங்கு இதயங்கள் பல கோடி
குறையெல்லாம் கடந்தவனே உன் துணை ஒன்றே நாம் தேடி

1. மறைபொருள் ஆனவனே - உன்னை
மனங்களில் சிறை வைத்தோம்
குறையுள்ள கோவிலிலே - உன்னை
கொண்டு நாம் குடிவைத்தோம்

2. அன்பு உன் பேர் அறிவோம் - தூய
அறிவென்றும் நாம் தெரிவோம்
இன்பம் நீ எனத் தெளிவோம் - நல்ல
இரக்கம் நீ என மொழிவோம்