இதய காணிக்கை இறவாத காணிக்கை ***

இதய காணிக்கை இறவாத காணிக்கை
இறை மனித உறவின் சின்னமாம் அன்பின் காணிக்கை
இறையே இதை ஏற்றிடுவாய் உனதாய் எனை மாற்றிடுவாய்

1. மேகங்கள் கூடிடவே வான்மழை அருவியாகுமே
உன் அருளுக்கு சான்றாகுமே
இறைவா உனைப் போல் வார்த்தையை வாழ்வாக்கி
வழிகாட்டி சென்றிட வரம் ஒன்று தா

2. எண்ணங்கள் உயர்ந்திடவே உள்ளங்கள் கோவிலாகுமே
நல்வாழ்வு அதன் பரிசாகுமே
கருணா உனைப் போல் மாறாத அன்பினால்
அயலாரை நேசிக்கும் நல் உள்ளம் தா