இறைவா இறைவா உம் பீடம் வந்தோம் ***

இறைவா இறைவா உம் பீடம் வந்தோம்
இணைந்த கரத்தில் பலி தர வந்தோம்
உடைந்து கொடுக்க உரு கொடுக்க எம்மைத் தந்திடவும்
தோழமை கண்டிட தொடர்ந்து தந்திட நிறைவு காணவும்

1. பெற்றுக்கொண்ட நன்மைக்காக நன்றி பாடவும்
நடக்கும் செயலும் நலன் பயக்க ஆசீர் வேண்டியும்
காத்திருக்கும் எம் கண்கள் விடிவு காணவும்
உம்மோடு நானும் மகிமை செலுத்தவும்

2. விண்ணகம் வாழ் நல்லவரைப் புகழ்ந்து போற்றவும்
உண்மை தரும் திருவிருந்தில் பங்கு கொள்ளவும்
யாமிருக்கும் உலகம் இன்று அமைதி காணவும்
நலமுடனே மக்களும் செழித்து வாழவும்