இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இறை இயேசுவின் அரசினிலே இந்த நாள்தரும் இனிமையிலே ***

இறை இயேசுவின் அரசினிலே இந்த நாள்தரும் இனிமையிலே
இணைவோம் பலி செலுத்திடவே அமர்வோம் திருவிருந்தினிலே

1. மலர்ச்சோலைகள் மணம் தருதே - குயில்
பாடிடும் இசை வருதே
மலையருவியிலே தென்றல் காற்றினிலே
தேவ பேரன்பு ஒளிவீசுதே
இந்தப் பூமகள் தேவனின் கொடையல்லவோ
நன்றி புகழ்பாடி சிரம் தாழ்த்துவோம்

2. வயல் மலர்களை அழகு செய்தார்
வான் பறவைக்கும் உணவளித்தார்
எதை உண்பதென்றும் எதை உடுப்பதென்றும்
ஏன் கவலை உள்ளத்திலே
இறைத் தந்தையின் பிள்ளைகள் நாமல்லவோ
இனி எந்நாளும் பேரின்பமே