இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

96 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், சூழால்


புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம்

இடம் : சூழால்.

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை

திருத்தந்தை : பிரான்சிஸ்
ஆயர் : மேதகு ஜெறோம் தாஸ்
பங்குத்தந்தை : அருட்பணி. மார்ட்டின்.

நிலை : பங்குத்தளம்
கிளை : குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலயம், மணலி, கொல்லங்கோடு.

குடும்பங்கள் : 235
அன்பியங்கள் : 12

ஞாயிறு திருப்பலி : காலை 09.00 மணிக்கு.

திருவிழா : மே மாதம் முதல் வாரத்தில் எட்டு நாட்கள் நடைபெறும்.

ஆலய வரலாறு :

சூழால் தலத் திருச்சபையானது சுமார் நூறாண்டுகள் பழைமை வாய்ந்தது.

தற்போது ஆலயம் அமைந்துள்ள இடமானது முற்காலத்தில் பிலாவிளை என்று அழைக்கப்பட்டது. கி.பி 1905 ஆம் ஆண்டு முதல் கி.பி 1930 ஆம் ஆண்டு வரை கொல்லம் மறை மாவட்டத்தைச் சேர்ந்த உச்சகடை பங்கின் கிளைப் பங்காக இருந்தது.

கி.பி 1930 ஆம் ஆண்டு கோட்டார் மறை மாவட்டம் உருவான பின்னர் சிலுவைபுரம் பங்கின் கிளைப்பங்காக 'சுடர்கடை' என்னும் பெயரில் செயல்பட்டு வந்தது.

பின்னர் இந்த சுடர்கடை என்ற பெயர் சூழால் என மாற்றம் பெற்றது.

25.05.1999 அன்று குளப்புறம், மணலி, சந்தனபுரம் ஆகிய கிளைப் பங்குகளோடு தனிப் பங்காக உயர்த்தப் பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. மரியதாசன் அடிகளார் பணியாற்றினார். இவரது பணிக்காலத்தில் தற்போதைய ஆலயம் மற்றும் பங்குத்தந்தை இல்லம் ஆகியவை கட்டப்பட்டது.

தற்போது பங்குத்தந்தை அருட்பணி. மார்ட்டின் அவர்களின் வழிகாட்டுதலில் பங்கு மக்களின் ஒத்துழைப்புடன் புதிய ஆலயத்திற்கு 29.09.2019 அன்று அருட்தந்தை இயேசுரத்தினம் அவர்களால் அடிக்கல் போடப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்றது வருகிறது.