இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

95 புனித சவேரியார் ஆலயம், ஏற்றகோடு


புனித சவேரியார் ஆலயம்

இடம் : ஏற்றகோடு.

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை

திருத்தந்தை : பிரான்சிஸ்
ஆயர் : மேதகு ஜெறோம் தாஸ்
பங்குத்தந்தை : அருட்பணி சேவியர் சுந்தர்.

நிலை : பங்குதளம்
கிளை : புனித சின்னப்பர் ஆலயம், மாத்தார்.

குடும்பங்கள் : 175
அன்பியங்கள் : 9

ஞாயிறு திருப்பலி : காலை 08.00 மணிக்கு.

திருவிழா : டிசம்பர் மாதத்தில் ஐந்து நாட்கள்.

ஏற்றகோடு வரலாறு :

கி.பி 1935 ஆம் ஆண்டில் அன்றைய புத்தன்கடை பங்குத்தந்தை மற்றும் ஊர் பெரியவர்களின் முயற்சியால் புனித பிரான்சிஸ் சவேரியார் ஐ பாதுகாவலராகக் கொண்டு ஓலைக்குடில் ஆலயம் கட்டப்பட்டு, புத்தன்கடை பங்கின் கீழ் இருந்தது.

பின்னர் திரு. வேதக்கண் என்பவர் ஒரு ஏக்கர் நிலத்தை இனாமாகவும், மேலும் 80 சென்ட் நிலத்தை விலைக்கும் கொடுத்தார். இதில் முதலில் ஒரு பள்ளிக்கூடம் கட்டப்பட்டது.

அருட்பணி. அம்புறோஸ் அவர்களின் முயற்சியால் 1954 ஆம் ஆண்டு புதிய ஆலயம் கட்டப்பட்டு மேதகு ஆயர் ஆஞ்ஞிசாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டு, மாதத்திற்கு ஒரு திருப்பலி நடத்தப்பட்டு வந்தது.

அருட்பணி. பெல்லார்மின் அவர்கள் புத்தன்கடை பங்குத்தந்தையாக இருந்த போது ஞாயிறு திருப்பலியும், வாரத்தின் இடைநாளில் ஒரு திருப்பலியும் நிறைவேற்றப்பட்டு வந்தது.

அருட்பணி. இயேசுரத்தினம் அவர்களால் பாலர் பள்ளி ஒன்று துவக்கப்பட்டது.

அருட்பணி. மரியஜேம்ஸ் அவர்கள் பணிக்காலத்தில் கலையரங்கம் கட்டப்பட்டது.

அருட்பணி. ஜெரால்டு ஜஸ்டின் பணிக்காலத்தில், ஆயர் பதிலாள் பேரருட்பணி தேவசகாயம் அவர்களால் 18.01.2004 அன்று புதிய ஆலயத்திற்கு அடிக்கல் போடப்பட்டது. ஆலயப் பணிகள் நிறைவு பெற்று 2007 ஆம் ஆண்டு அர்ச்சிக்கப் பட்டது.

பின்னர் தனிப்பங்காக உயர்த்தப்பட்டது.

மண்ணின் மைந்தர்கள் :
அருட்பணி. பென்சர் சேவியர்
அருட்பணி. சேவியர் ராஜ்

அருட்சகோதரி மேரி ரோலட்