இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

492 புனித பார்பரம்மாள் ஆலயம், மின்னாம்பள்ளி

  

புனித பார்பரம்மாள் ஆலயம்

இடம் : மின்னாம்பள்ளி, வையப்பமலை அஞ்சல், 637410

மாவட்டம் : நாமக்கல்
மறைமாவட்டம் : சேலம்
மறைவட்டம் : நாமக்கல்

நிலை : கிளைப்பங்கு
பங்கு : தூய லூர்து அன்னை ஆலயம், இராசிபுரம்

பங்குத்தந்தை : அருட்பணி. இரா. ஜெயசீலன்

குடும்பங்கள் : 6
அன்பியம் : 1

புதன்கிழமை மாலை 06.30 மணிக்கு திருப்பலி நடைபெறும்.

திருவிழா : டிசம்பர் மாதம் 4 -ஆம் தேதி.

வழித்தடம் : இராசிபுரத்திலிருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் 10கி.மீ தொலைவில் மின்னாம்பள்ளி உள்ளது.


வரலாறு

கி.பி.1937 ஆம் ஆண்டு காலகட்டத்தில் மின்னாம்பள்ளி இறைமக்கள் புனித பார்பரம்மாளை பாதுகாவலியாகக் கொண்டு குடிசையால் வேயப்பட்ட ஆலயம் ஒன்று எழுப்பி, இறைவனை வழிபட்டு வந்தனர் என்று கூறப்படுகிறது.

பின்னர் 1965 ஆம் ஆண்டில் காக்காவேரி பங்குத்தந்தை அருட்பணி. அருள் பிரகாசநாதர் அவர்களால் புதிய ஆலயம் கட்டப்பட்டது.

அருட்பணி. இருதயநாதன் (1995-2001) அவர்களின் பணிக்காலத்தில் இவ்வாலயம் புதுப்பிக்கப்பட்டது.

அருட்பணி.சி. மைக்கேல் (2002-2006) அவர்களின் பணிக்காலத்தில் ஆலயத்தைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது.

இன்றைய பங்குத்தந்தை அருட்பணி. இரா. ஜெயசீலன் அவர்களின் முயற்சியால் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, ஆலயத்திற்கு புதிய சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.

தற்போது பங்குத்தந்தை அருட்பணி. இரா. ஜெயசீலன் அவர்களின் வழிகாட்டுதலில் ஆன்மீகப் பாதையில் சிறப்பாக பயணித்து வருகிறது மின்னாம்பள்ளி இறைசமூகம்.

தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி. இரா. ஜெயசீலன் அவர்கள்.