இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

யாத்திராகமம் - அதிகாரம் 40

கூடாரத்துப் பிரதிஷ்டை உற்சவமும் - ஆரோனும் அவன் குமாரர்களுடைய பட்டாபிஷேகமும் - மேகம் கூடாரத்தை மூடினதும்.

1. பின்னும் கர்த்தர் மோயீசனை நோக்கி: 

2. நீ முதலாம் மாதம் (அம்) மாதத்தின் முதலாந்தேதியிலே உடன்படிக்கைக் கூடாரத்தை ஸ்தாபகம் பண்ணி,

3. அதில் பெட்டகத்தை வைத்து அதைத் திரையினாலே மறைத்து,

4. மேஜையையும் கொண்டுவந்து அதின் மீது கற்பிக்கப்பட்டவைகளைக் கிரமமாய் வைத்துக் குத்துவிளக்கையும் அதன் தகழிகளையும் ஏற்றி, 

5. பொன் தூபப்பீடத்தைச் சாட்சியப் பெட்டகத்துக்கு முன் நிறுத்திவைப்பாய். கூடாரப் பிரவேசத்திலே திரையையும் தொங்குவிப்பாய்.

6. பிறகு இதற்கு முன்பாகத் தகனபலி பீடத்தை ஸ்தாபித்து,

7. பீடத்துக்கும் கூடாரத்துக்கும் நடு வே தொட்டியை வைத்து அதில் நிறையத் தண்ணீர் வார்ப்பாய்.

8. மேலும் பிராகாரத்துக்கும் அதன் வாசலுக்கும் முன் தொங்குத் திரைகளைச் சுற்றிலும் போட்டபின்பு,

9. அபிஷேகத் தைலத்தை எடுத்துக் கொண்டு கூடாரத்தையும் அதின் பாத்தி ரங்களையும் பூசிப் பரிசுத்தப்படுத்துவாய்.

10. தகன பலிபீடத்தையும் அதின் சகல பாத்திரங்களையும்,

11. தொட்டியையும் அதின் பாதத்தையும் அவைகளையெல்லாம் மகா பரிசுத்தமான பொருட்களாகும்படி அபிஷேகத் தைலத்தால் பூசுவாய்.

12. அதன்பின் ஆரோனையும் அவன் குமாரர்களையும் உடன்படிக்கைக் கூடார வாசலிடத்திற்கு அழைத்து அவர்களைத் தண்ணீரில் ஸ்நானம் பண்ணுவித்து, 

13. அவர்கள் நமக்கு ஊழியஞ் செய் யும்படிக்கும், அவர்களின் (அபிஷேகப்) பூசுதல் நித்திய குருத்துவத்திற்குச் செல்லும்படிக்கும் அவர்களுக்குத் திரு ஆடை களை உடுத்துவாய் என்றருளிச் செய்தார்.

14. கர்த்தர் தனக்குக் கற்பித்திருந்த எல்லாவற்றையும் மோயீசன் செய்தான்.

15. ஆகையால் இரண்டாம் வருஷத்தின் முதலாம் மாதத்திலே, மாதத்தின் முத லாந் தேதியில் ஆசாரக் கூடாரம் ஸ்தாபகம் பண்ணியாயிற்று.

16. மோயீசனே அதை ஸ்தாபித்தான்; பலகைகளையும் பாதங்களையும் தண்டுகளையும் வைத்துத் தூண்களையும் நிறுத்தி,

17. கர்த்தர் கற்பித்திருந்தபடி, கூடாரத்தின்மீது மேற்கட்டுதலையும் விரித்து அதின் மேலே மூடியையும் பரப்பினான்.

18. சாட்சியப் (பலகைகளைப்) பெட்ட கத்தினுள் வைத்து, அதின் கீழ் தண்டுகளையும் அதின்மேல் தேவவிடையாசனத்தையும் அமைத்துக்கொண்டான்.

19. பெட்டகத்தைக் கூடாரத்தினுள்ளே கொண்டுவந்த பின்பு, கர்த்தருடைய கற்ப னையை நிறைவேற்றும்படி அதின் முன்பா கத் திரையைத் தொங்கக் கட்டிவிட்டான்.

20. சாட்சியக் கூடாரத்திற்கு வடபுறத் தில் திரைக்கு வெளியே மேஜை வைத்து,

21. கர்த்தர் மோயீசனுக்குக் கற்பித்திருந்த படியே காணிக்கை அப்பங்களையும் (அவர் சமுகத்தில்) ஒழுங்காய் வைத்தான்.

* 21-ம் வசனம். காணிக்கை அப்பங்கள் புளிப்பேறாத பரிசுத்த மெல்லிய மாவினால் ஆக்கப்பட்டு, நமது ஆராதனைக்குரிய தேவ நற்கருணை அப்பங்களுக்கு அடையாளமாயிருந்தவைகளாம்.

22. உடன்படிக்கைக் கூடாரத்திலே தென் புறமாக மேஜைக்கு எதிரிடையாய்க் குத்து விளக்கையும் ஸ்தாபித்து,

23. கர்த்தருடைய கற்பனைப்படி தகளி களையும் வரிசை மேரையாய் அமைத்து ஏற்றினான்.

24. உடன்படிக்கைக் கூடாரத்தினுள் திரைக்கெதிராகத் தங்கப் பீடத்தையும் ஸ்தாபித்து, 

25. கர்த்தர் மோயீசனுக்குக் கற்பித்தி ருந்தபடியே அதின்மீது பரிமள தூபத்தை யுங் காட்டினான்.

26. சாட்சியக் கூடாரத்தின் வாசலிலே தொங்குத் திரையைத் தூக்கிவைத்தான். 

27. அன்றியும் கர்த்தர் கற்பித்தபடி அவன் சாட்சிய மண்டபத்திலே தகனபலி பீடத்தை ஸ்தாபித்து, அதன்மேல் சர்வாங் கத் தகனப்பலியையும் மற்றுமுள்ள பலிகளை யும் செலுத்தினான்.

28. பிறகு சாட்சியக் கூடாரத்துக்கும் (அந்தப்) பீடத்துக்கும் நடுவே தொட்டி யை வைத்து அதிலே நிறையத் தண்ணீர் வார்த்தான்.

29. அவ்விடத்தில் மோயீசனும் ஆரோ னும் இவன் குமாரர்களும் கைகளையும் கால் களையும் கழுவுவார்கள்.

30. அவர்கள் கூடாரத்துக்குள்ளே பிர வேசிக்கும்போதும், பலிபீடத்தண்டை யில் சேரும்போதும் (அவ்வாறே கழுவிக் கொள்ளவேண்டும்) என்று கர்த்தர் மோயீ சனுக்குக் கற்பித்திருந்தார்.

31. பிறகு (மோயீசன்) உடன்படிக்கைக் கூடாரத்தையும் பீடத்தையும் சுற்றிப் பிராகாரத்தை நிறுத்தி அதன் வாசலிலே தொங்குத் திரையைத் தொங்கவைத்தான். இவையெல்லாம் முடிந்தானபோது,

32. ஒரு மேகம் சாட்சியக் கூடாரத்தை மூடினதுமன்றி கர்த்தருடைய மகிமை அதனை நிரப்பிற்று.

33. மேகம் எல்லாவற்றையும் மூடிக் கொண்டு கர்த்தருடைய மகிமை மின்னி யெரிவதினாலே மோயீசன் உடன்படிக்கைக் கூடாரத்துக்குள்ளே பிரவேசிக்கக் கூடாதிருந்தான். ஏனென்றால் அம்மேகமானது எல்லாவற்றையும் மூடிக்கொண்டிருந்தது.

34. திரு வாசஸ்தலத்திலிருந்து எப்போது மேகம் எழும்புமோ அப்போது இஸ்ராயேல் புத்திரர் புறப்பட்டுப் போவார்கள்;

35. மேகம் எழும்பாமல் மேலே தங்கிக் கொண்டிருக்கும்போதோ அவர்கள் பிரயா ணம் பண்ணாமல் அவ்விடத்தில்தானே இருப்பார்கள். 

36. ஏனென்றால், இஸ்றாயேல் சகல வம்சத்தாரும் தங்கள் இல்லிடங்களிலிருந்து பார்த்துக்கொண்டிருக்க, பகலிலே கர்த்த ருடைய மேகமும், இராக்காலத்திலே அக் கினிச் சுடரும் உடன்படிக்கைக் கூடாரத்தின் மேல் தங்கிக்கொண்டிருந்தது.

* 36-ம் வசனம். எந்த மனிதனும் கடவுளைக் கண்ணினால் தரிசித்து உயிரோடிருக்கக் கூடாது; அதினாலே சுவாமி தம்மை முகமுகமாய்த் காண்பிக்காமல் பகலிலே தூண் வடிவமான கார் மேகத்திலும், இரவிலே சுடர் மேகத்திலும் தம்முடைய மகிமையை மறைத்து இஸ்றாயேலியருக்கு வழிகாட்டிக் கானான் தேசத்திற் சேருமட்டும் அவர்களை ஆதரித்துக் காப்பாற்றினார்.


யாத்திராகமம் முற்றிற்று