இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

யாத்திராகமம் - அதிகாரம் 39

பணிவிடை வஸ்திரங்களையும் - பரிசுத்த ஆடையாபரணங்களையுங் குறித்து.

1. மீளவுங் கர்த்தர் மோயீசனுக்குக் கற்பித்தபடியே திருப் பணிவிடைச் செய்யும் போது ஆரோன் உடுக்கவேண்டிய ஆடைகளைப் பெசெலேயல் இளநீலம், தூமிரம், இரத்தாம்பரம், மெல்லிய சணற்பு நூலாலே நெய்தான்.

2. முதல் ஏப்போத்தைப் பொன், இள நீலம், இருமுறை சாயந்தீர்ந்த இரத்தாம்பரம், திரித்த மெல்லிய சணற்பு இவைகளின் நூலாலே, 

3. பலவர்ண நெசவு வேலையாய்ச் செய்யத் தொடங்கினான். எப்படியென்றால்: பொன்னை மெல்லிய தகடாயடித்து, அதனைச் சரிகையாக்கி மேற்படி நானாவர்ணச் சீலையின் நூலோடு சேர்த்து முறுக்கினான்.

4. இரண்டு தோள்களின் மேலுள்ள ஏப்போத்தின் முனைகள் ஒன்றுடனொன்று சேர்ந்திருந்தன.

5. கச்சையையும் கர்த்தர் மோயீசனுக்குக் கற்பித்திருந்தபடி பல வர்ணங்களோடு செய்தான்.

6. பின்னும் மணிவெட்டும் வித்தைப் படி இரண்டு கோமேதகக் கற்களை வெட்டி, அவைகளைப் பொன் குவளைகளில் கெட்டியாய்ப் பதியவைத்து அவைகளின்மேல் இஸ்றாயேல் புத்திரர்களின் நாமதேயங்களை வெட்டி எழுதினான்.

7. கர்த்தர் மோயீசனுக்குக் கற்பித்திருந்தபடி அவைகளை இஸ்றாயேல் புத்திரரின் ஞாபகக் குறியாக ஏப்போத் (என்னும் தோள் போர்வையின்) புறங்களிலே வைத்தான்.

8. மறுபடியும் மார்பதக்கத்தைத் (தோள் போர்வையாகிய) ஏப்போத்தின் வேலைக் கொப்பாக விசித்திர வேலையாய்ச் செய்து, பொன், இளநீலம், தூமிரம் இருமுறை சாயந் தீர்ந்த இரத்தாம்பரம், திரித்த மெல்லிய சணற்பு இவைகளின் நூலால் வினோதமாய் நெய்தான்.

9. அதைச் சதுரமும் இரட்டையுமாய் ஒரு சாண் அளவாயிருக்கும்படி செய்தான்.

10. அதனில் நாலுபத்தி இரத்தினங்களை பதித்தான். முதல் வரிசையில் பதும ராகமும், புஷ்பராகமும், மரகதமும்,

11. இரண்டாம் வரிசையில் மாணிக்கமும் நீலமணியும், இரவாக்கல்லும்,

12. மூன்றாம் வரிசையில் இலிகுரிக் கல்லும், வைடூரியமும், செவ்வந்திக்கல்லும்,

13. நாலாம் வரிசையில் கிறிசொலித் கல்லும், கோமேதகமும், படிபச்சைக்கல்லும், இவைகளை தம் வரிசைகளின்படி பொன் குவளைகளிலே பதித்துவைத்தான்.

14. அந்தப் பன்னிரண்டு கற்களிலும் இஸ்றாயேல் பன்னிரண்டு கோத்திரங்களுடைய பெயர்கள் முத்திரை வெட்டாய் வெட்டினான். ஒவ்வொரு கல்லிலே ஒவ்வொரு கோத்திரத்தின் நாமம் எழுதியிருக்கும்.

15. மார்பதக்கத்தில் ஒன்றோடொன்று சேரும் சிறு சங்கிலிகளையும் சுத்தப் பசும் பொன்னினால் செய்தார்கள்.

16. மறுபடியும் இரண்டு கொக்கிகளையும் இரண்டு வளையங்களையும் பொன்னால் உண்டாக்கினார்கள். மேற்படி வளையங் களை மார்பதக்கத்தின் இருபக்கத்திலும் வைத்தார்கள்.

17. இவைகளினின்று இரண்டு பொன் சங் கிலிகள் தொங்கிக்கொண்டிருந்தன. அந்தச் சங்கிலிகளை ஏப்போத்தின் முனையிலுள்ள கடைப்பூட்டுகளிலே மாட்டினார்கள்.

18. இவைகள் சரியாக இசைந்திருக்கும் விதம் பார்த்தால் ஏப்போத்தும் மார்ப்பதக் கமும் ஒன்றோடொன்று இணைக்கப்படும்.

19. அவ்விரண்டும் கச்சைத் திசையில் நெருங்கி இறுகியவைகளுமாய்த் தொள தொளப்பாயிராதபடிக்கு நீல நாடா போட்ட வளையங்களால் பலமாய்ச் சேர்க்கப் பட்டவைகளுமாயிருக்கும். அதினாலே கர்த் தர் மோயீசனுக்குக் கற்பித்தபடி அவ் விரண்டும் ஒன்றைவிட்டு ஒன்று அகலவே கூடாது. 

20. அன்றியும் ஏப்போத்துக்கடுத்த அங் கியை முழுவதும் இளநீல நூலால் உண்டு பண்ணி,

21. அதின் மேற்பக்கத்து நடு மையத் திலே தலையை நுழைப்பிக்கத் தக்காப்போல ஒரு துவாரத்தைப் பண்ணி அதன் ஓரத்திற் குச் சுற்றிலும் ஒரு நாடாவை தைத்து,

22. அங்கியின் கீழ்பக்கத்து ஓரத்திலே, இளநீலம், தூமிரம், இரத்தாம்பரம், திரித்த மெல்லிய சணற்பு இவைகளின் நூலாலே செய்த மாதுளம்பழங்களைச் சித்திரத் தை யல் வேலையாய்ப் பண்ணி,

23. சுத்தப் பசும்பொன்னான கிண்கிணி களையும், மாதுளம் பழங்களையும் இடை யிடையாய் வைத்து அங்கியின் கீழ் ஓரத்தைச் சுற்றிலும் ஜோடித்தார்கள்.

24. ஒரு பொன் கிண்கிணியும் ஒரு மாது ளம் பழமுமாக (வைத்தார்கள்.) கர்த்தர் மோயீசனுக்குக் கற்பித்திருந்தபடியே தேவ ஆராதனையைப் பண்ணப் போகும்போது பெரிய ஆசாரியன் மேற்படி அங்கியை அணிந்துகொண்டு நடப்பான்.

25. ஆரோனுக்கும் அவன் குமாரர்களுக் கும் நெடுஞ் சட்டைகளையும், மெல்லிய சணற்பு நூலாலே உண்டுபண்ணினதுந் தவிர, 

26. சிறிய முடிகளால் அலங்கரிக்கப்பட்ட தலைப்பாகைகளையும் மெல்லிய சணற்பு நூலாலே உண்டுபண்ணி,

27. மெல்லிய சணற்பு நூலால் நெய்து செய்யப்பட்ட சல்லடங்களையும் உண் டாக்கி,

28. கர்த்தர் மோயீசனுக்குக் கற்பித்திரு ந்த படி திரித்த மெல்லிய சணற்பு நூலா லும், இளநீலம், தூமிரம், இருமுறை சாயந் தீர்ந்த இரத்தாம்பரம் இவைகளின் நூலாலும் வினோத தையல் வேலையாய் இடைக் கச்சையையும் உண்டுபண்ணினார்கள்.

29. மகா பரிசுத்தமாகிய சொர்ணப் பட் டத்தைச் சுத்தப் பசும்பொன்னால் செய்து இரத்தினம் வெட்டும் வெட்டாய்: கர்த்த ருக்குப் பரிசுத்தமென்னும் வார்த்தையை அதிலே வெட்டி எழுதினார்கள்.

30. கர்த்தர் மோயீசனுக்குக் கற்பித்திருந்தபடியே அதை அலங்காரத் தலைப்பாகையோடு இளநீல நாடாவினாற் கட்டினார்கள்.

31. இவ்வண்ணமே சம்பூரணமாய் உடன்படிக்கைக் கூடாரத்தின் வேலையும் அதின் மேற்கட்டுதலின் வேலையும் நிறைவேறிற்று. கர்த்தர் மோயீசனுக்குக் கற்பித்திருந்தபடியெல்லாம் இஸ்றாயேல் புத்திரர் செய்து முடித்தனர்.

32. அவர்களே வாசஸ்தலத்தையும், அதின் மேற்கட்டுதலையும், எல்லாப் பணிமுட்டு களையும், வளையங்களையும், பலகைகளை யும், தண்டுகளையும், தூண்களையும், அவற்றின் பாதங்களையும் காணிக்கை யிட்டார்கள்.

33. செகப்புத் தீர்ந்த ஆட்டுக்கடாத் தோல்களை மேல்மூடியாகவும், ஊதா தீர்ந்த தோல்களை இதற்கு மூடியாகவும் பராமரித்து ஒப்புக்கொடுத்தார்கள்.

34. திரையையும் திருப் பெட்டகத்தை யும் கிருபாசனத்தையும்

35. மேஜையையும் மேஜைக்கடுத்த பாத் திரங்களையும், காணிக்கை அப்பங்களையும்,

36. குத்துவிளக்கையும், அதன் அகல்க ளையும், அவைகளின் கருவிகளையும், எண்ணையையும்,

37. பொன் பீடத்தையும், (அபிஷேகத்) தைலத்தையும், சுகந்த தூபவர்க்கத்தையும்,

38. கூடார வாசலின் தொங்கு திரையையும், 

39. வெண்கலப் பீடத்தையும், அதின் சல் லடையையும், தண்டுகளையும், எல்லாத் தட்டுமுட்டுகளையும், தொட்டியையும், அதின் பாதத்தையும் பிராகாரத்து தொங்குத் திரையையும், தூண்களையும், அவற்றின் பாதங்களையும்,

40. மண்டப வாசலின் தொங்குத் திரை யையும், அதன் கயிறுகளையும், முளைகளை யும் கொடுத்தார்கள். ஆசாரக் கூடாரத்துப் பணிவிடைக்கும், சாட்சியக் கூடாரத்து ஆராதனை உபசேவனத்துக்கும் கர்த்தர் கற்பித்தவைகளில் எல்லாம் குறையவில்லை.

41. அதுவுமன்றிப் பரிசுத்த ஸ்தலத்தில் ஆசாரியராகிய ஆரோனும், அவன் குமாரர் களும் அணிந்துகொள்ளவேண்டிய திரு வஸ்திரங்களையும்,

42. கர்த்தர் கற்பித்திருந்தபடி இஸ்றா யேல் புத்திரர் கொண்டுவந்து ஒப்புக் கொ டுத்தார்கள்.

43. மோயீசன் அவையெல்லாம் நிறை வேறிற்றென்று கண்டு அவைகளை ஆசீர் வதித்தனன்.

* 43-ம் வசனம். கடவுள் பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்தபோது சகலமான சிருஷ்டிகளும் நலமாயிருக்கிறதென்று கண்டுணர்ந்து அவையவைகளை எல்லாம் ஆசீர்வதித்தனர். (ஆதி. 1-2-ம் அதி.) அவ்வாறே மோயீசன் கர்த்தரால் அதிகாரம் பெற்றுத் தேவாலயத்தைச் சேர்ந்த வேலைகளெல்லாம் அந்தந்த வேலையை நலமாயின என்று சந்தோஷங் கூர்ந்து கர்த்தருடைய அதிகாரத்தினாலே அந்தந்த வேலைகளைச் செய்தவர்களையும் ஆசீர்வதித்தார்.