இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

யாத்திராகமம் - அதிகாரம் 38

தகனப் பலிபீடமும் - வெண்கலத் தொட்டியும் - பிராகாரமும் - ஜனங்கள் கொடுத்த பொருட்களின் தொகையும்.
1. அன்றியும் தகன பலிபீடத்தையும் சேத்தீம் மரத்தினாலே செய்தான். அது நீளத்திலும் அகலத்திலும் ஐந்து முழ சதுரமாவும் உயரத்திலே மூன்று முழ உயர்த்தியாகவும் இருந்தது.

2. அதின் மூலைகளிலே கொம்புகள் புறப்பட்டுக் கொண்டிருந்தன. அதையும் வெண்கலத் தகடுகளால் மூடி,

3. அதில் உபயோகித்துக் கொள்ள வேண்டிய பற்பல பணிமுட்டுகளாகிய சாம்பற் சட்டிகளையும், குறடுகளையும், சூலங்களையும் துறடுகளையும் நெருப்புச் சட்டிகளையும் வெண்கலத்தால் உண்டாக்கினான்.

4. அதற்கு வலைப்பின்னலைப் போன்ற வெண்கலச் சல்லடையையும், அதன் கீழே பீடத்தின் நடுமையத்திலே அடுப்பையும் வைத்து,

5. அந்த வெண்கலச் சல்லடையின் நான்கு மூலைகளிலும் பலிபீடத்தைச் சுமப்பதற்கான தண்டுகளைப் பாய்ச்சுகிறதற்கு நாலு வளையங்களையும் உண்டுபண்ணினான்.

6. இந்நாலு தண்டுகளையும் கூடச் சேத்தீம் மரத்தினாலே செய்து வெண்கலத் தகடுகளால் முடி,

7. பீடத்தின் பக்கங்களின்மேலுள்ள வளையங்களில் அந்தத் தண்டுகளைப் பாய்ச்சினான். அந்தப் பலிபீடமோ கெட்டிமரமல்ல, உள்வெளிவிட்டுக் குடைந்த பலகைகளால் செய்யப்பட்டிருந்தது.

8. ஆசாரக் கூடாரத்து வாசலிலே காத்துக்கொண்டிருந்த ஸ்திரீகளுடைய தர்ப்பணங்களைக்கொண்டு வெண்கலத் தொட்டியையும் அதின் பாதத்தையும் வார்ப்பித்துப் பிறகு

9. பிராகாரத்தையும் உண்டுபண்ணினான். அதன் தென்திசைக்கெதிரே திரித்த மெல்லிய சணற்பு நூலால் நெய்யப்பட்டு நூறு முழ விஸ்தாரமான தொங்குத் திரைகள் வைத் திருந்தன.

10. அவைகளின் தூண்கள் இருபதும், இவைகளின் பாதங்கள் இருபதும் வெண் கலத்தால் உண்டாக்கப்பட்டவைகள். தூண் களின் போதிகைகளும் இவைகளின் பூண்களு மோ வெள்ளி.

11. தென்புறத்திலிருந்தது எப்படியோ அப்படியே வடபுறத்திலும் செய்யப்பட் டிருந்தது. தொங்கு திரைகள், தூண்கள், இவைகளின் பாதங்கள், போதிகை முதலிய வைகள் ஒரே விதமான அளவும் வேலையும் தாதுமாயிருந்தது.

12. மேற்கு மேல்திசையை நோக்கும் பக்கத்திலோவெனில் தொங்கு திரைகள் ஐம்பது முழம்; அவைகளின் வெண்கலத் தூண்களும் பாதங்களும் பத்துத் தூண்களின் போதிகைளும் பூண்களும் வெள்ளி.

13. கீழ்த்திசையிலோ ஐம்பது முழமுள்ள தொங்குத் திரைகளிருந்தன.

14. இந்த ஐம்பது முழமுள்ள தொங்குத் திரையிலே மூன்று தூண்களையும் அவைகளின் மூன்று பாதங்களையும் கொண்டிருந்த ஒரு புறத்தே பதினைந்து முழங்கள் உபயோகித்துக் கொள்ளப்படும்.

15.மறுபுறத்தே (ஏனெனில் பிராகார வாசல் அதுக்கும் இதுக்கும் நடுவேயிருந்தது.) மூன்று தூண்களும் அவைகளின் மூன்று பாதங்களும் கொண்டிருந்த அந்தரத்திலே (ஐம்பது முழமுள்ள மேற்படி தொங்குத் திரையில்) வேறே பதினைந்து முழங்கள் உபயோகித்துக் கொண்டிருந்தன.

16. பிராகாரத்திலிருந்த தொங்கு திரைகளெல்லாம் மெல்லிய சணற்பு நூலால் நெய்யப்பட்டிருந்தது.

17. தூண்களின் பாதங்கள் வெண்கலம், அவற்றின் போதிகைகளும் பூண்களும் வெ ள்ளி, பிராகாரத்திலுள்ள தூண்களோ அவைகளை வெள்ளியாலே மூடினான்.

18. அதன் பிரவேசத்திலே இளநீலம், தூமிரம், இருமுறை சாயந் தோய்ந்த இரத்தாம்பரம், திரித்த மெல்லிய சணற்பு இவைகளின் நூலால் நெய்யப்பட்ட தொ ங்குத் திரையை விசித்திர தையல் வேலை யாய் உண்டுபண்ணினான். பிராகாரத்துச் சகல தொங்கு திரைகளைப்போல் அதுவும் நீளத்திலே இருபது முழமுள்ளதாயிருந்தது. ஆனால் உயரத்திலே ஐந்து முழமுள்ள தாயிற்று.

19. அவைகளின் தூண்கள் நாலும், இவை களின் பாதங்கள் நாலும் வெண்கலத்தால் உண்டாக்கி, அவைகளின் போதிகைகளும் இவற்றின் பூண்களும் வெள்ளியால் செய்யப் பட்டிருந்தது.

20. வாசஸ்தலத்திற்கும், பிராகாரத்திற் கும் சுற்றிலுமிருந்து முளைகள் எல்லாம் வெண்கலம்.

21. மோயீசன் கட்டளைப்படி ஆசாரிய னான ஆரோன் குமாரனாகிய இத்தாமார், லேவியர்களின் பணிவிடைக்கென்று எண்ணி எழுதிய சாட்சியக் கூடாரத்துப் பொருட் களின் தொகை இதுவேயாம்.

22. மோயீசனின் மூலமாய்க் கர்த்தர் கற்பித்திருந்த அவைகளை யூதாவின் கோத் திரத்து ஊருடைய குமாரனான உரியின் மகன் பெசெலேயல் என்பவனே உண்டு பண்ணினான்.

23. அவனோடுகூட வேலையைச் செய்தவன் யாரென்றால், டான் கோத்திரத்து அக்கி சாமேக்கின் குமாரனான ஒலியாப் என்பவன். இவன் மர வேலைகளில் மகா கெட்டிக்காரனன்றி, நானா வர்ணச் சீலை நெய்யும் வேலைகளிலும், இளநீலம், தூமிரம், இரத்தாம்பரம், மெல்லிய சணற்பு இவைகளின் நூலால் வினோத தையல் வேலைகளிலும் வெகு சாமர்த்தியமானவன்.

24. தேவ ஆலயத்தின் வேலைகளுக்குங் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டுச் செலவான பொன் எல்லாமும் தேவஸ்த லத்து நிறைப்படி இருபத்தொன்பது தலே ந்து, எழுநூற்று முப்பது சீக்கல் எடையா யிருந்தது.

25. அந்தப் பொன் கொடுத்தவர்கள் யா ரென்றால், இருபது பிராயமுதல் அதற்கு மேற்பட்ட ஆறு இலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்றைம்பது பேர்கள் (இஸ்றாயேல் சபையில் எண்ணப்பட்டிருந்தார்களே) அவர் கள்தான்.

* எபிரேய நூலில் 25-ம் வசனம் பிந்தின வசனத்துடன் சேர்ந்திருக்கிறது. அதில் அடங்கிய அர்த்தம் ஏதெனில்: வெள்ளியானது அந்த 603,550 பேராலே கொடுக்கப்பட்டது. அதாவது 100 தலேந்தும் 1775 சீக்கல் வெள்ளியாம். ஒரு தலேந்து என்பது 100 பவுண்டு எடையும், ஒரு சீக்கல் ஒரு பவுண்டு எடையுமாகும்.

26. அன்றியும் நூறு தலேந்து எடை வெள்ளியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது. அந்த வெள்ளியால்தானே பரிசுத்த ஸ்தலத் துத் தூண்களின் பாதங்களும், பிரவேசத்திலுள்ள தொங்கு திரைத் தூண்களின் பாதங்களும் வார்ப்பிக்கப்பட்டன.

27. ஒவ்வொரு பாதத்திற்கு ஒவ்வொரு தலேந்து விழுக்காடு நூறு பாதங்களுக்கு நூறு தலேந்து செலவாயின.

28. ஆயிரத்து எழுநூற்று எழுபத்தை ந்து (வெள்ளி சீக்கலிலே) தூண்களின் போ திகைகள் செய்யப்பட்டனவன்றி அத்தூண் கள் வெள்ளித் தகட்டால் மூடப்பட்டன.

29. மேலும் வெண்கலத்திலே எழுபத்தீ- ராயிரம் தலேந்து நானூற்று சொச்ச சீக்கல் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

30. அதினாலே சாட்சியக்கூடாரப் பிர வேசத்திலுள்ள தூண்களின் பாதங்களும், வெண்கலப் பலிபீடமும், அதின் சல்லடை யும், பலிபீடத்திற்கு உபயோகிக்கப்படும் சகல பாத்திரங்களும்,

31. பிராகாரத்துக்குச் சுற்றிலும் அதன் பிரவேசத்திலும் இருந்த தூண்களின் பாதங் களும், வாசஸ்தல கூடாரத்து முளைகளும், பிராகாரத்துச் சுற்றிலுமுள்ள முளைகளும் வார்ப்பிக்கப்பட்டன.