இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

யாத்திராகமம் - அதிகாரம் 37

சாட்சியப் பெட்டியும் - கிருபாசன மும் - மேஜையும் அதின் பாத்திரங்களும் - விளக்குத்தண்டும் - விளக்குகளும் அவைகளின் கருவிகளும் - தூபதீப பலிபீடமும்.

1. மீளவும் பெசெலேயல் சேத்தீம் மரத்தால் பெட்டகத்தையும் செய்தான். அதற்கு நீளம் இரண்டரை முழமும், அகலம் ஒன்றரை முழமும், உயரம் ஒன்றரை முழமுமாம்; அதை உள்ளும் புறமும் சுத்தப் பசும் பொன்னி னால் மூடி,

2. சுற்றிலும் அதற்குத் தங்கத் திரணையை உண்டாக்கி,

3. அதின் நான்கு மூலைகளில் நான்கு பொன் வளையங்களை வார்த்து, ஒரு புறத்துக்கு இரண்டு வளையங்களையும் மற்றைய புறத்துக்கு இரண்டு வளையங்களையும் போட்டு,

4. சேத்தீம் மரத்தினால் தண்டுகளைச் செய்து தங்கத்தால் மூடி,

5. பெட்டகத்தைச் சுமந்துகொண்டு போவதற்காக அதின் பக்கங்களிலுள்ள வளையங்களில் அவைகளைப் புகுத்தினான்.

6. மூலஸ்தானமென்கிற கிருபாசனத்தையும் சுத்தப் பசும் பொன்னினால் பண்ணினான். அது இரண்டரை முழ நீளமாகவும் ஒன்றரை முழ அகலமாகவும் இருந்தது.

7. தகடாய் அடிக்கப்பட்ட பொன்னினாலே இரண்டு கெருபீன்களையும் உண்டு பண்ணிக் கிருபாசனத்திற்கு இருபுறத்திலும் வைத்தான்.

8. ஒரு புறத்தோரத்து முனையில் ஒரு கெருபீம், மறுபுறத்தோரத்து முனையில் வேறு கெருபீம் ஆக இரண்டு கெருபீன்களைக் கிருபாசனத்தின் ஒவ்வொரு ஓரத்தின் முனையிலும் வைத்தான்.

9. அக்கெருபீன்கள் தங்கள் செட்டைகளை உயர விரித்துக் கிருபாசனத்துக்கு நிழலிட்டவைகளாய் ஒன்றுக்கொன்று எதிர் முகமுள்ளவைகளாய்க் கிருபாசனத்தை நோக்கிக் கொண்டிருந்தன.

10. மேஜையையும் சேத்தீம் மரத்தால் உண்டுபண்ணனான். அது இரண்டு முழ நீளமும் ஒரு முழ அகலமும் ஒன்றரை முழ உயரமுமாயிருக்கும்.

11. அதைச் சுத்தப் பசும் பொன்னினால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன் விளிம்பை உண்டாக்கி,

12. அதற்குச் சுற்றிலும் நாலு விரற்கடையானதும் கண்ணறை வேலையானதும் (ஒரு திரணை.) ஒரு திரணையையும் அதன் மேல் வேறொரு திரணையையும் வைத்தான்.

13. நான்கு பொன் வளையங்களையும் வார்த்து, அவைகளை மேஜையின் நான்கு காலுக்கிருக்கும் நாலு மூலைகளிலும்,

14. திரணைக்கருகில் தைத்து, மேஜை யைச் சுமக்கும்படி தண்டுகளை அவைகளில் புகுத்தினான்.

15. இந்தத் தண்டுகளையும் சேத்தீம் மர த்தாற் செய்து பொன் தகட்டால் மூடி,

16. மேஜையில் நானாவிதமாய் உபயோ கித்துக்கொள்ளும் பணிமுட்டுக்களையும், தட்டுகளையும், குப்பிகளையும் தூபக் கல சங்களையும், பானபலி பாத்திரங்களையும் சுத்தப் பசும்பொன்னினால் செய்தான்.

17. குத்துவிளக்கையும் சுத்தப் பசும் பொன்னைத் தகடாக்கி உண்டாக்கினான்; அதினுடைய தண்டினின்று கிளைகளும், மொக்குகளும், குமிழ்களும், லீலிப் புஷ்பங்க ளும் புறப்பட்டிருந்தன.

18. அதாவது: ஒரு பக்கத்தில் முன்றாக வும் மறுபக்கத்தில் மூன்றாகவும் இருபக்கத் திலும் ஆறு கிளைகளுமிருக்கும்.

19. ஒரு கிளையில் வாதுமைக்கொட்டை களுக்கொப்பான மூன்று மொக்குகளும், குமிழ்களும், லீலிப் புஷ்பங்களும் இருந்தன. மறுகிளையிலும் வாதுமைக்கொட்டை யைப் போன்ற மூன்று மொக்குகளும், குமிழ் களும் லீலிப் பூக்களும் இருந்ததுபற்றி, குத்துவிளக்குத் தண்டினின்று பிதுங்கிக் கொண்டிருந்த ஆறு கிளைகளிலும் ஒரே வித வேலை செய்யப்பட்டிருந்தது.

20. விளக்குத் தண்டில் வாதுமைக் கொட் டைக்கொப்பான நான்கு மொக்குகளும், குமிழ்களும், லீலிப் புஷ்பங்களும் இருந்தன. 

21. இரண்டு கிளைகளின் கீழே மூன்று இடங்களில் குமிழ்கள் இருந்தன. ஆகை யால் ஒரே தண்டினின்று ஆறு கிளைகளும் புறப்படும்.

22. குமிழ்களும் கிளைகளும் எல்லாம் சுத்தப் பசும் பொன்னினால் ஒரே அடிப்பு வேலையாய் உண்டுபண்ணப்பட்டிருந்தன.

23. மேலும் சுத்தப் பசும் பொன்னி னால் ஏழு தகளிகளையும், அவைகளின் கத்திரிகளையும் கத்தரிக்கப்பட்டவை அணைவதற்கேற்ற தட்டங்களையும் உண்டுபண்ணினான்.

24. குத்து விளக்கும், அதன் சகல கருவி களும், தட்டுமுட்டுகளும், பொன் ஒரு தலே ந்து நிறையுள்ளவைகள்.

25. சேத்தீம் மரத்தால் பரிமளவர்க்கப் பீடத்தையும் உண்டுபண்ணினான். அது நீளத்திலும் அகலத்திலும் ஒரு முழ சதுரமாகவும், உயரத்திலே இரண்டு முழ உயர்த்தியாகவும் இருந்தது. அதன் மூலைகளிலே நாலு கொம்புகள் புறப்படும். 

26. அதனையும் அதின் சல்லடையை யும் அதின் சுற்றுப்புறங்களையும் அதின் கொம் புகளையும் சுத்தப் பசும் பொன்னால் செய்து,

27. அதின் சுற்றிலும் கதிரையுடைய திரணையைப் பண்ணித், திரணைக்குக் கீழி லுள்ள பக்கங்களிலே பீடஞ் சுமக்கும் தண்டுகளைப் பாய்ச்சும்படியான இரண்டு பொன் வளையங்களையும் பண்ணினான்.

28. அத்தண்டுளையும் சேத்தீம் மரத்தாற் செய்து, அவைகளைப் பொன் தகட்டி னாலே மூடினான்.

29. அபிஷேகத் தைலத்துக்கு வேண் டிய எண்ணையையும், அதி பரிசுத்த சுகந்த வர்க்கங்களையும் கூட்டி பரிமளத்தையும் தைலக்காரர் வித்தைப்படி உண்டுபண்ணினான்.