இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

யாத்திராகமம் - அதிகாரம் 36

ஆசாரக்கூடாரம் கட்டப்பட்ட விதத்தின் வரலாறு.

1. அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்துத் திருப்பணிகளுக்கடுத்த தட்டுமுட்டுகளையும் ஆண்டவர் கற்பித்திருந்த மற்றுமுள்ள யாவையும் சிற்ப சாஸ்திரப்படி உண்டு பண்ணுவதற்குக் கர்த்தர் எவர்களுக்கு ஞானத்தையும் புத்திக் கூர்மையையுந் தந்தருளியிருந்தாரோ அவர்கள், அதாவது: பெசெலேயல், ஓலியாப் முதலிய புத்திசாலிகள் அனைவரும் மேற்படி வேலையைச் செய்யத் தொடங்கினார்கள்.

2. அவர்களிருவரையும் அவர்களோடு சாமர்த்தியத்தைக் கர்த்தரால் பெற்றுக் கொண்டு வேலைகளைச் செய்துவரும்படி மன உற்சாகமாய்க் கேட்டுக்கொண்டிருந்த விவேகிகளெல்லோரையும் மோயீசன் வர வழைத்து,

3. இஸ்றாயேல் புத்திரர் கொடுத்திருந்த காணிக்கைப் பொருட்களையெல்லாம் கொடுத்தான். பிறகு அவர்கள் முழு இருதயத்தோடு வேலைசெய்து வருமளவும் ஜனங்கள் காலைதோறும் தங்களுக்கு இஷ்டமான காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்.

4. ஆனபடியினாலே வேலைசெய்யும் அந்த மனிதர்கள் அகத்தியமாய்,

5. மோயீசனிடத்தில் வந்து: ஐயா, வேலை க்கு வேண்டியதை மாத்திரமல்ல, அதற்கு அதிகமான பொருட்களையும் ஜனங்கள் கொடுத்து வருகிறார்களே என்றார்கள்.

6. அதைக் கேட்டு மோயீசன் இனி புருஷர்களாவது ஸ்திரீகளாவது பரிசுத்த ஸ்தலத்தினுடைய வேலைக்கு வேறொரு காணிக்கையையும் ஒப்புக்கொடுக்க வேண்டாம் என்று பாளையமெங்கும் கட்டியக்காரன் கூறும்படி கட்டளையிட்டானாம். இவ்விதமாய் ஜனங்கள் கொண்டுவருகிறது நிறுத்தப்பட்டது.

7. உள்ளபடி ஒப்புக்கொடுக்கப்பட்ட பொருட்கள் செய்யவேண்டிய வேலைகளுக் கெல்லாம் போதுமாயிருந்ததுமன்றி அதிக மாயுமிருந்தன.

8. அது நிற்க, வேலைசெய்யும் ஞான இருதயமுள்ளவர் யாவரும் திரு வாசஸ்தலத்தை உண்டுபண்ணுவதற்குத் திரித்த மெல்லிய சணற்பு நூலாலும், நீல நூலாலும், தூமிர நூலாலும், இருமுறை சாயந்தீர்ந்த இரத்தாம்பர நூலாலும் பலவர்ணமுள்ள விநோத நெசவு வேலை சாஸ்திரப்படி பத்து மூடு திரைகளைப் பண்ணினார்கள்.

9. அவைகளில் ஒவ்வொரு மூடுதிரை இருபத்தெட்டு முழ நீளமும், நான்கு முழ அகலமுமாயிருந்தது. எல்லா மூடுதிரைகளும் ஒரே அளவாயிருந்தது.

10. ஐந்து மூடுதிரைகளை ஒன்றோடொன்று இணைத்து, மற்ற ஐந்து மூடுதிரைகளையும் ஒன்றோடொன்று கூட்டிச் சேர்த் தான்.

11. மேலும் ஒரு மூடுதிரையின் இருபுறத்து ஓரத்திலே இளநீலக் கயிறுகளால் உண்டு பண்ணி பின்பு அப்படியே மற்ற மூடுதிரையின் ஓரத்திலும் செய்தான்.

12. அக்காதுகள் ஒன்றோடொன்று நேர் நேராக வைத்திருந்ததினலே அவைகள் ஒன்றோடொன்று இணைக்கப்படத்தக்க வைகளாயிருந்தன.

13. பிறகு ஐம்பது பொன் கொக்கிகளை யும் உருக்கிப்போட்டு அந்தக் கொக்கிகளால் மூடுதிரைகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு ஒரு கூடாரமாய்ச் சேரும் படி செய்தான்.

14. திரு வாசஸ்தலத்தின் மேல் தட்டு மூடும்படி ஆட்டு மயிரால் நெசவு செய்யப்பட்ட பதினொரு கம்பளிகளையும் பண்ணினான்.

15. ஒவ்வொரு கம்பளியும் முப்பது முழ நீளமும், நான்கு முழ அகலமும் இருந்தது, எல்லாக் கம்பளிகளும் ஒரே அளவாயிருந்தன.

16. அவைகளில் ஐந்து கம்பளிகளை ஒன்றாகவும் மற்ற ஆறு கம்பளிகளை ஒன்றாகவும் இணைத்தான்.

17. அவைகள் ஒன்றோடொன்று சேரத் தக்கதாக ஒரு கம்பளியின் ஓரத்திலே ஐம்பது காதுகளையும் மற்றக் கம்பளியின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டு பண்ணினான்.

18. அன்றியும் கூடாரத்தின் மேல்தட்டுக் கட்டி எல்லாக் கம்பளிகளும் ஒரே கம்பளியாய் இருக்கத் தக்கதாக ஐம்பது வெண்கலக் கொக்கிகளையும் உண்டாக்கினான்.

19. மேலும் செகப்புச் சாயந் தீர்ந்த ஆட் டுக் கடாத் தோல்களால் கூடாரத்துக்கு இன்னொரு மூடியையும் அதின் மேல் வைக்கத்தக்க ஊதா தோல்களால் வேறொரு மூடியையும் செய்தான்.

20. கூடாரத்திற்கு நட்டமாய் நிற்கும் பலகைகளைச் சேத்தீம் மரத்தினாலே செய்தான்.

21. ஒவ்வோரு பலகையும் பத்து முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாயிருந்தது.

22. ஒவ்வொரு பலகைக்கும் இரண்டு காடிகளும் இரண்டு கழுந்துகளுமிருந்தது. அதனால் ஒரு பலகை மற்றப் பலகையோடு சேரக்கூடும். வாசஸ்தலத்தின் பலகை களுக்கெல்லாம் அவ்வாறே செய்தான்.

23. அவைகளில் தெற்கு தென்திசையை நோக்கும் இருபது பலகைகளும்,

24. நாற்பது வெள்ளிப் பாதங்களுமி ருந்தன. பக்கங்களின் காடி கழுந்து சேரு மிடத்திலே மூலைகளின் இருபக்கத்திலும் ஒவ்வொரு பலகைக்குக் கீழே இரண்டு பா தங்கள் வைக்கப்பட்டிருந்தன.

25. வடதிசையை நோக்கிய கூடாரப் பக் கத்துக்கு இருபது பலகைகளுமிருந்தன.

26. ஒவ்வொரு பலகைக்கு இரண்டு பா தங்கள் இருந்ததினால் நாற்பது வெள்ளிப் பாதங்களுமிருந்தன.

27. மேற்புறத்திலும் அதாவது கடலை நோக்கிய கூடாரப் பக்கத்துக்கும் ஆறு பல கைகளையும் செய்தான்.

28. கூடாரத்தின் பின்புறத்து ஒவ்வொரு மூலைக்கும் வேறிரண்டு பலகைகளையும் வைத்தான்.

29. அவைகள் கீழிருந்து மேல்வரைக்கும் இசைக்கப்பட்டிருந்தமையால் ஒரே கட்டுக் கோப்பாயிருக்கும். இருபக்கத்து மூலைக ளிலும் அவ்வாறே செய்தான்.

30. அப்படியே எட்டுப் பலகைகளும் ஒவ்வொரு பலகையின் கீழே இரண்டு பாதங்களும் ஆக பதினாறு வெள்ளிப் பாதங்களும் இருந்தன.

31. திரு வாசஸ்தலத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளை உறுதிப்படுத்துவதற்காகச் சேத்தீம் மரத்தால் ஐந்து தாழ்ப்பாள்களையும்,

32. மறுபக்கத்துப் பலகைகளைச் சேர்ப்பதற்காக வேறு ஐந்து தாழ்ப்பாள்களையும், அவைகளைத் தவிர கடலை நோக்கிய கூடார மேற்புறத்துக்கு இன்னும் ஐந்து தாழ்ப்பாள்களையும் பண்ணினான்.

33. அன்றியும் பலகைகளின் நடு மையத்தில் ஒரு முனை தொடங்கி மறுமுனை மட்டும் பாயும்படி மற்றொரு தாழ்ப்பாளையும் செய்தான்.

34. அப்பலகைகளிலும் பொன் ரேக்குப் போட்டு அவைகளின் வெள்ளிப் பாதங்களை வார்த்துவைத்தான். தாழ்ப்பாள் எந்த வளையங்களில் ஊடுருவப் பாயுமோ அந்த வளையங்களையும் பொன் தகட்டால் மூடினான்.

35. நீலம், தூமிரம், இரத்தாம்பரம், திரி த்த மெல்லிய சணற்பு இவைகளின் நூ லை நெசவு பண்ணி நேர்த்தியான சித்திரத் தையலோடும் பற்பல வர்ணங்களோடும் சிறந்த ஒரு திரைச் சீலையை உண்டு பண்ணினான்.

36. சேத்தீம் மரத்தால் நான்கு தூண்க ளைச் (செய்து) அவைகளையும் அவைகளின் போதிகைகளையும் பொன் தகட்டால் மூடி னான். அவைகளின் பாதங்களோ வார்க்கப் பட்ட வெள்ளியே.

37. கூடார வாசலுக்காக நீலம், தூமிரம், இரத்தாம்பரம், முறுக்கிய மெல்லிய சணற்பு இவைகளின் நூற்களை நெசவு பண்ணி விசித்திரத் தையலையுடைய ஒரு தொங்கு திரையையும்,

38. பொன் தகட்டால் மூடிய ஐந்து தூண்களையும், அவைகளின் போதிகைகளையும் பண்ணினான். அவைகளின் பாதங்களோ வார்க்கப்பட்ட வெள்ளியாயிருந்தன.