இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

யாத்திராகமம் - அதிகாரம் 35

ஓய்வுநாளை ஆசரிக்க வேண்டியது - ஒப்புக்கொடுக்கத்தகும் காணிக்கைகளின் விவரமும் - பெசெலேயலும் ஊலியாபும் கூடாரவேலைக்கு நியமிக்கப்பட்டதும்.

1. மறுபடியும் இஸ்றாயேல் புத்திரராகிய சபையாரெல்லோரும் கூடியிருக்கையிலே மோயீசன் அவர்களை நோக்கி: கர்த்தர் செய்யக் கற்பித்தவைகளாவன:

2. நீங்கள் ஆறுநாள் வேலை செய்வீர்கள். ஏழாம் நாள் உங்களுக்குப் பரிசுத்த நாளாகும். அது ஆண்டவருடைய சாபத்தாகிய ஓய்வு நாள். அன்று வேலை செய்திருப்பவன் கொலை செய்யப்படுவான்.

3. சாபத் நாளிலே உங்கள் சகல வாசஸ்தலங்களிலும் நெருப்பு மூட்டாதிருப்பீர்களென்று சொன்னான்.

* 3-ம் வசனம். இக்காலத்திலே ஞாயிற்றுக்கிழமை ஆசரிப்புக்கடுத்த கட்டளை இவ்வளவு கண்டிப்பாயிராத போதிலும், எல்லாக் கிறீஸ்தவர்களும் அந்தத் திருநாளை எவ்வளவோ பக்தியோடு ஆசரிக்கத்தகுமென்று கண்டுபிடிக்கக்கடவார்கள்.

4. பின்னும் மோயீசன் இஸ்றாயேல் புத் திரராகிய சபையார் எல்லாரையும் நோக்கி: கர்த்தர் திருவாக்கருளிக் கற்பித்த கட்டளை யென்னவெனில்: 

5. (உங்கள் நிலங்களில் விளைந்த) முதற் பலன்களைக் கர்த்தருக்காக உங்களிடத்தில் பிரத்தியேகமாய் வைத்துக்கொள்ளுங்கள். அவற்றை ஒவ்வொருவனும் வலியப் பூர்த்தியான மனதுடன் ஆண்டவருக்கு ஒப்புக் கொடுக்கக்கடவான். (அவை எவைகளெனில்) பொன், வெள்ளி, வெண்கலங்களும்,

6. நீலம், தூமிரம், இருமுறை சாயந்தீர்ந்த இரத்தாம்பரம், மெல்லிய சணற்பும், இவைகளின் நூலும், வெள்ளாட்டுமயிரும், 

7. செகப்பு சாயந்தீர்ந்த ஆட்டுக்கடாத் தோல்களும், ஊதா வர்ணமுள்ள தோல்களும், சேத்தீம் மரங்களும்,

8. விளக்குகளை ஏற்றுகிறதற்கு எண்ணெயும், தைலம் கூட்டுகிறதற்கு எண்ணெயும், அதிசுகந்த வாசனா திரவியங்களும்,

9. (ஆசாரியருடைய) ஏப்போத்தேன்னும் தோற்போர்வையிலும் மார்பதக்கத்திலும் பதிக்கத்தக்க கோமேதகக் கற்களும் இரத் தின முதலிய கற்களுமாம்.

10. உங்களில் சாமர்த்தியமுள்ளவன் எவ னோ அவன் வந்து கர்த்தர் கற்பித்த வேலை களை உண்டுபண்ணக்கடவான். 

11. அவைகளேதென்றால், (ஆசாரக்) கூடாரமும், அதின் மேற்கட்டும், மேன்மூடி களும், வளையங்களும், தண்டுகளும், பலகை களும், தூண்களும், இவைகளின் பாதங்களும்,

12. பெட்டகமும், தண்டுகளும் அதன் கிரு பாசனமும், அதின் முன் தொங்கும் திரையும்,

13. மேஜையும், அதின் தண்டுகளும், பாத் திரங்களும், காணிக்கை அப்பங்களும்,

14. விளக்குகளைத் தாங்கவேண்டிய குத்து விளக்கும், அதின் கருவிகளும் வெளிச்சத் துக்கு எண்ணெயும்,

15. வாசனாதி திரவியப் பீடமும், அதின் தண்டுகளும், அபிஷேகத்திற்குத் தைல மும், தூபத்திரவியமும், கூடார வாசலுக் குத் தொங்குத் திரைச் சீலைகளும்,

16. சர்வாங்க தகன பலிப்பீடமும், அதின் வெண்கலச் சல்லடையும், அதன் தண் டுகளும், பணிமுட்டுகளும், தொட்டியும், அதின் பாதமும்,

17. பிராகாரத்தில் இருக்கும் தொங்கு திரைகளும், அவைகளின் தூண்களும், பாதங் களும், மண்டபவாசலின் மூடுதிரையும், 

18. கூடாரத்திற்கும் மண்டபத்திற்கும் சம்பந்தமான கயிறுகளும், 

19. ஆசாரியனாகிய ஆரோனும், அவன் குமாரனும், நமக்கு ஆசாரிய அலுவலைச் செய்வதற்குரிய ஆடை ஆபரணங்களும், பரிசுத்த ஸ்தலத்து ஊழியத்தில் உபயோகப்படும் வஸ்திராதிகளும், ஆகிய இவைகளேயாம்.

20. அப்பொழுது இஸ்றாயேல் புத்திரரின் சபையார் எல்லாரும் மோயீசனுடைய சமூகத்தை விட்டுப் புறப்பட்டுப் போய்,

21. சாட்சியக் கூடாரத்தின் வேலையைச் செய்து முடிப்பதற்கும், அதன் திருவூழியத்துக்குத் தேவையான பரிசுத்த வஸ்திரங்களை உண்டுபண்ணுவதற்கும் வேண்டிய காணிக்கைகளைப் பக்தியோடும் மனப்பூர்வத்தோடும் கர்த்தருக்குக் கொண்டுவந்தார்கள்.

22. ஸ்திரீ புருஷர் யாவரும் காப்பு, காதணி, மோதிரம், அஸ்தகடகம் முதலியவைகளை ஒப்புக்கொடுத்தார்கள். அவைகளிலிருந்த பொன் உடைமைகளையெல்லாம் கர்த்தருக்குக் காணிக்கையாகப் பத்திரப்படுத்தி வைத்தார்கள்.

23. நீலம், தூமிரம், இருமுறை சாயந் தீர்ந்த இரத்தாம்பரம், மெல்லிய சணற்பு இவைகளின் நூற்களும், வெள்ளாட்டு ரோமங்களும், செகப்பு சாயம் பெற்ற ஆட்டுக் கடாத் தோல்களும், ஊதாத் தோல்களும்,

24. வெள்ளியும், வெண்கலமும், பலவித வேலைக்கேற்ற சேத்தீம் மரமும் எவன் வைத் திருந்தானோ அவன் கர்த்தருக்கு ஒப்புக் கொடுத்தான்.

25. அன்றியும் சாமர்த்தியத்தை உடைய ஸ்திரீகளும் தாங்களே நெய்திருந்த நீலம், தூமிரம், இரத்தாம்பரச் சீலைகளையும், மெல்லிய சணற்புப் புடவைகளையும்,

26. வெள்ளாட்டு ரோமங்களையும் இவை முதலியவை எல்லாம் மனப்பூர்வத்தோடு கொண்டுவந்தார்கள்.

27. பிரபுக்கள் ஏப்போத்திலும் மார்பதக் கத்திலும் பதிக்கவேண்டிய கோமேதகம் முதலிய இரத்தினங்களையும்,

28. பரிமளவர்க்கங்களையும், விளக்குகளுக்கும் தைலக் கூட்டுதலுக்கும் சுகந்த வர்க்கத் தூபத்துக்கும் எண்ணையையும் தந் தார்கள்.

29. ஸ்திரீ புருஷர்களெல்லோரும் கர்த் தர் மோயீசன் மூலமாய்க் கற்பித்திருந்த வேலைகள் நிறைவேறும் பொருட்டாய்ப் பக்தியுள்ள மனதோடு ஈகைகளைக் கொடுத் தார்கள். இஸ்றாயேல் புத்திரர் அனைவரும் மன உற்சாகத்துடன் காணிக்கைகளைக் கர்த் தருக்கு வசீகரப்படுத்தினார்கள்.

30. அப்போது மோயீசன் இஸ்றாயேல் புத்திரரை நோக்கி: இதோ கர்த்தர் யூதா கோத்திரத்திலே கூறுடைய புத்திரனான ஊரியின் குமாரனாகிய பெசெலேயலை அவன் பெயர் சொல்லி அழைத்து,

31. அவனைத் தேவ ஆவியினாலும், ஞானத்தினாலும் விவேகத்தினாலும், புத்திக் கூர்மையினாலும், கல்வி சாஸ்திரத்தினாலும், எல்லாவற்றினாலும் நிரப்பி,

32. பொன், வெள்ளி, வெண்கல வேலை களை யூகிக்கவும், செய்துமுடிக்கவும்,

33. இரத்தினங்களை வெட்டிப் பதிக்க வும் தச்சுளியால் செய்யக்கூடுமான விசித் திர வேலைகளை உண்டுபண்ணவும்

34. அவனுக்கு வரந் தந்தருளினார்; அன் றியும் டான் கோத்திரத்திலே அக்கிசமேக் கின் குமாரனாகிய ஓலியாப் என்பவனையும் (கர்த்தர் அழைத்திருக்கிறார்.)

35. மரத்திலே சித்திரவேலைகளையும், விசித்திர சீலைகளையும், நீலம், தூமிரம், இரு முறைச் சாயந்தீர்ந்த இரத்தாம்பரம், மெல்லிய சணற்பு இவைகளின் நூலைக்கொண்டு நானா வர்ணமுள்ள விசித்திரத்தையல் வேலை, நெசவு வேலை, நவமான வினோத வேலைமுதலாய்ச் செய்து முடிப்பதற்குக் கர்த்தர் இருவருக்கும் சாமர்த்தியத்தைத் தந்தருளினார் என்று சொன்னான்.