இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

யாத்திராகமம் - அதிகாரம் 34

மோயீசன் மலைமேலே திரும்பவும் ஏறி அவ்விடத்தில் மன்றாடினதும் - கர்த்தர் அவனுக்கு வேறு சாட்சியக் கற்பலகைகளைத் தந்தருளினதும்.

1. கர்த்தர் மீண்டும் மோயீசனை நோக்கி: முந்தின கற்பலகைகளுக்கொத்த வேறிரண்டு கற்பலகைகளை நீ வெட்டு. உன்னால் உடைக்கப்பட்ட பலகைகளில் இருந்த வார்த்தைகளை இவைகளிலேயும் எழுதுவோம்.

2. விடியும்நேரத்தில் நீ சீனாயி மலைமேலேற முஸ்திப்பாயிரு. அங்கு மலையின் உச்சியில் நம்மோடுகூடத் தரித்திருப்பாய்.

3. உன்னுடன் ஒருவனும் வரவும் கூடாது. எவனாகிலும் மலையில் எவ்விடத்திலும் காணப்படவும் கூடாது. ஆடுமாடுகளும் முதலாய் எதிர்ப்பாறைகளில் மேயவும் கூடாது என்றார்.

4. அப்படியே (மோயீசன்) முந்தின பலகைகளைப்போல் வேறிரண்டு கற்பலகைகளை வெட்டி அதிகாலையில் எழுந்திருந்து கர்த்தர் தனக்குக் கற்பித்திருந்தபடியே பலகைகளைத் தன்னுடன் எடுத்துக்கொண்டு சீனாயி மலையில் ஏறினான்.

5. கர்த்தர் மேகத்தில் இறங்கின போது மோயீசன் கர்த்தருடைய நாமத்தைப் பிரார்த்தித்து அவரோடு நின்றுகொண்டனன்.

6. அவர் அவன் முன்பாகக் கடந்து போகுமளவில் மோயீசன் அவரை நோக்கி: சர்வ அதிகாரத்தையுடைய கர்த்தராகிய கடவுளே! கிருபாகடாட்சத்தையும் தயாபரத்தையும் பொறுமையையும் அத்தியந்த கிருபையையும் பொருந்திய தேவனே!

7. ஆயிரஞ் சிருஷ்டிகளுக்கும் இரக்கம் புரிகிறவரே! அக்கிரமத்தையும் பாதகங்க ளையும் பாவங்களையும் போக்கடிக்கிறீரே! உமது சமூகத்தில் தற்சுபாவ ஏற்கையால் மாசில்லாதவன் ஒருவனுமில்லை. பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும், முன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவரே என்று கூறி,

8. மோயீசன் தீவிரம் பணிந்து குப்புற விழுந்து தொழுது:

9. சுவாமீ! உமது சமுகத்திலே அடியே னுக்குக் கிருபை கிடைத்தாகில், (இப்பிர ஜை முரட்டுக்கழுத்தையுடையதாகை யால்) தேவரீர் எங்களுடன் எழுந்தருளவும், எங்கள் அக்கிரமங்களையும், எங்கள் பாவங்க ளையும் போக்கவும், அடியோர்களைச் சுதந்தரித்துக் கொள்ளவும் வேண்டுமென்று உம்மைப் பிரார்த்திக்கிறேன் என்றான்.

10. கர்த்தர் மறுவுத்தாரமாக: ஜனங்க ளெல்லோருக்கு முன்பாக நாம் ஓர் உடன் படிக்கைப் பண்ணுவோம். உன்னோடு கூட இருக்கிற இந்தச் ஜனங்கள் நாம் செய்யப் போகிற கர்த்தருக்குரிய பயங்கரமான செய்கைகளைக் காணும்படி பூமி எங்கும் எந்த ஜாதியும் எந்தச் ஜனங்களும் காணாத அற்புதங்களைக் காட்டுவோம்.

11. இன்று உனக்கு நான் கற்பிக்கிறதெல் லாவற்றையும் அனுசரித்துக்கொள்; ஆமோ றையனையும் கனானையனையும் ஏத்தை யனையும் பெறேசையனையும் ஏவையனை யும் ஜெபுசேயனையும் உனக்கு முன்பாக நாம் இதோ துரத்தி விடுவோம்.

12. நீ அத்தேசத்தின் குடிகளுடன் ஒருக்காலும் சகவாசம் பண்ணாதே. பண்ணினால் உனக்குக் கேடாய் முடியும், பத்திரம்!

13. ஆனால் அவர்களுடைய பலிபீடங்களையும் தகர்த்து, விக்கிரகங்களையும் உடைத்துத் திருச்சோலைகளையும் வெட்டிப் போடக்கடவாய்.

* 13-ம் வசனம். இந்தத் தேசத்திலும் அக்கியானிகள் சோலைகளிலே தங்கள் தேவர்களின் விக்கிரகங்களை ஸ்தாபித்துப் பொய்யாராதனை முதலிய பலிபூசை செலுத்தி வருகிறார்கள்.

14. அந்நிய தேவனுக்கு ஆராதனை செய் யாதே. கர்த்தருடைய நாமம்: பொறாதவர் ஆகையால் அவர் எரிச்சலுள்ள தேவன்.

15. நீ அத்தேசத்து வாசிகளோடு உடன் படிக்கை பண்ணாதே, பண்ணினால் அவர் கள் ஒருவேளை தங்கள் தெய்வங்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றி நடந்து தங்கள் விக்கிரகங்களுக்கு ஆராதனை செய்தபின்பு அவர்களில் ஒருவன் உன்னை அழைத்து அவைகளுக்குப் படைக்கப்பட்ட மாம்சங் களில் கொஞ்சம் புசிக்கச் சொல்லுவான் எச்சரிக்கை!

16. அவர்கள் குமாரத்திகளில் உன் குமா ரர்களுக்குப் பெண்ணைக் கொள்ளாதே, கொள்ளுவாயாகில் இவர்கள் ஒருவேளை தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றி நடந்த பின்பு உன் குமாரரையும் தங்கள் தேவர்களைப் பின்பற்றி நடக்கும்படிச் செய்வார்கள், எச்சரிக்கை!

17. உனக்கு வார்ப்பட வேலையால் விக்கிரகங்களை உண்டுபண்ணாதே.

18. புளிப்பில்லா அப்பங்களின் பண்டிகையை நீ அனுசரித்துக்கொள்ளக் கடவாய்; நாம் உனக்குக் கட்டளையிட்டபடியே புதுப்பலன்களின் மாதத்திலே ஏழுநாளும் புளியாத அப்பங்களைப் புசிப்பாய்; ஏனென் றால்; நீ வசந்தகாலத்து மாதத்திலே எஜிப் த்திலிருந்து புறப்பட்டு வந்தாய்.

19. கர்ப்பந் தரித்துப் பிறக்கும் ஆண்கள் யாவும் நமக்குச் சொந்தமாம்; ஆடுமாடு முதலிய சகல ஜீவஜெந்துக்களின் தலையீற்று யாவும் அப்படியே நமக்குச் சொந்தமாகும்.

20. வேசரியின் தலையீற்றை ஓர் ஆட்டைக் கொடுத்து மீட்டுக்கொள்ளுவாய். அதன் விலையை முதலாய்க் கொடுக்க உனக்கு அவ காசமில்லாதேபோனால் அது கொல்லப்படும். உன் பிள்ளைகளில் சிரேஷ்ட குமாரனை மீட் டுக் கொள்ளுவாய். வெறுங் கையோடு நம் முடைய சந்நிதிக்கு வரக்கூடாது.

* 20-ம் வசனம். அந்தச் சுடரொளி கொம்புகள் வடிவமாய்த் தோன்றும். மோயீசன் தன் உயிர்க்காலமெல்லாம் அவ்வொளிக்கதிரை வைத்துக்கொண்டிருந்தார். இஸ்றாயேலியர் அவருடைய அதிகாரம் தேவ அதிகாரமென்று அதினால் கண்டுபிடித்தார்கள்.

21. ஆறு நாளும் வேலை செய்து ஏழாம் நாளிலோ உழவையும் அறுப்பையும் நிறுத்தி ஓய்ந்திருப்பாய்.

22. உன் கோதுமையறுப்பின் முதற்பல னைக் கர்த்தருக்குச் செலுத்தும் கிழமைப் பண்டிகையையும், வருஷ முடிவில் பலனை யெல்லாம் சேர்க்கும் பண்டிகையையும் கொண்டாடுவாய்.

23. வருஷத்தில் மூன்றுவிசையும் உன் ஆண்மக்கள் எல்லாரும் இஸ்றாயேலின் தேவனாகிய சர்வ வல்ல கர்த்தருடைய சந்நி திக்கு வரக்கடவார்கள்.

24. ஏனென்றால் நாம் அன்னிய ஜனங் களை உன் முன்னின்று துரத்திவிட்டு உன் எல்லைகளையும் விஸ்தாரப்படுத்திய பின்பு, வருஷத்திலே மூன்றுவிசையும் நீ கர்த்தரா கிய தேவனுடைய சந்நிதிக்கு வந்து உன் னைக் காண்பித்தால் எவரும் உன் தேசத் தைப் பிடிக்கும்படி எத்தனம் பண்ண மாட் டார்கள்.

25. நீ நமக்கிடும் பலியின் இரத்தத்தைப் புளித்த மாவோடு படைக்காதே; பாஸ்கா பண்டிகைப் பலியில் எதையாவது விடியற் காலமட்டும் வைக்கவுமாகாது.

26. உன் நிலத்திலே விளைந்த முதல் பல ன்களை உன் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தில் ஒப்புக்கொடுப்பாய்; வெள்ளாட் டுக் குட்டியை அதன் தாயின் பாலிலே சமை க்க வேண்டாமென்று சொன்னார்.

27. மீண்டும் கர்த்தர் மோயீசனை நோ க்கி: எந்த வார்த்தைகளைச் சொல்லி நாம் உன்னோடும் இஸ்றாயேலரோடும் உடன் படிக்கைப் பண்ணினோமோ நீ அந்த வார்த் தைகளை உனக்காக எழுதிவைக்க வேண்டு மென்றார்.

28. ஆகையால் மோயீசன் அவ்விடத்திலே நாற்பது பகலும் நாற்பது இரவுமாய்க் கர்த்தரோடு தங்கி அப்பத்தைச் சாப்பிடாமலும் தண்ணீரைக் குடியாமலும் இருந்தான்; கர்த்தரும் உடன்படிக்கையின் பத்து வசனங்களையும் கற்பலகைகளில் எழுதியருளினார்.

29. பிறகு மோயீசன் சீனாயி மலையிலிருந்து இறங்குகிறபோது சாட்சிய இரண்டு பலகைகளைத் தன் கையிலெடுத்துக்கொ ண்டு வந்தான். ஆனால் தன்னோடு கர்த்தர் பேசினதினாலே தன் முகம் ஒளி வீசியிருப் பதை அறியாதிருந்தான்.மீ

30. அப்பொழுது ஆரோனும் இஸ்றா யேல் புத்திரரும் மோயீசனுடைய முகமானது இரண்டு கொம்புகளைப்போல் சுடர் விட்டெரிகிறதைக் கண்டு அவன் சமீபத் திலே வரப் பயந்தார்கள்.

31. அவன் அவர்களை வரச்சொன்னான். அப்பொழுது ஆரோனும் சபைப் பிரபுக் களும் அவனிடத்திற்குத் திரும்பி வந்தபோது மோயீசன் அவர்களோடு பேசினான்.

32. பிறகு இஸ்றாயேல் புத்திரர் எல்லோ ரும் அவனிடம் வந்தார்கள்; அவன் சீனாயி மலையிலே கர்த்தர் தன்னோடு பேசின விஷ யங்களையெல்லாம்அவர்களுக்குக் கற்பித் தான்.

33. அவர்களுடன் பேசி முடிந்தபின்பு மோயீசன் தன் முகத்தின்மேல் முக்காடு போட்டான்.

34. மோயீசன் கர்த்தருடைய சந்நிதியில் அவரோடு பேசும்படிக்குப் போகையில் உட்பிரவேசித்ததுமுதல் வெளியே புறப் பட்டு வருமட்டும் அவன் முக்காட்டை வாங்கிக் கொள்ளுவான். பிறகு அவன் வெளியே வந்து தனக்குக் கற்பிக்கப்பட்டவையெல்லாம் இஸ்றாயேல் புத்திரரோடு சொல்லுவான்.

35. மோயீசன் வெளியே வருகையில் அவன் முகம் சுடர்விட்டெரிவதை அவர்கள் காண்பார்கள். ஆனால் அவன் அவர்களோடு எதையாவது சொல்லவேண்டியதானால் திரும்பி முக்காட்டைத் தன் முகத்தின் மேல் போட்டுக்கொள்ளுவான்.