இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

யாத்திராகமம் - அதிகாரம் 33

கர்த்தர் ஜனங்களைத் தண்டிப்பதாகப் பயமுறுத்துகிறதும் - ஜனங்கள் இதைப் பற்றித் துக்கித்ததும் - மோயீசன் தேவமகிமையைத் தரிசிக்கப்பெற்றதும்.

1. அதின்பின்பு கர்த்தர் மோயீசனுக்குத் திருவாக்கருளி: நீயும், நீ எஜிப்த்து தேசத்திலே நின்று அழைத்துக்கொண்டு வந்த உன் ஜனங்களும் இவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு உன் சந்ததிக்குக் கொடுப்போமென்று அபிரகாம், இசாக், யாக்கோபு என்பவர்களில் ஒவ்வொருத்தருக்கும் ஆணையிட்டு வாக்குத்தத்தம் செய்த தேசத்திற்குப் போங்கள்.

2. நாம் ஒரு தூதனை உனக்கு முன் அனுப்பிக் கானானையனையும், ஆமோறையனையும், ஏத்தையனையும், பெரேசையனையும், ஏவையனையும், ஜெபுசேயனையும் நீக்கி,

3. நீ பாலும் தேனும் ஓடுகிற அந்தப் பூமியிலே பிரவேசிக்கும்படி (செய்வோம்.) ஆனாலும் வழியிலே நாம் உங்களை நிர்மூலம் பண்ணாதபடிக்கு நாம் உங்கள் நடுவே போக மாட்டோம். உள்ளபடி உன் ஜனம் குனியாக் கழுத்துள்ள ஜனமாயிருக்கிறது என்றார்.

4. ஜனங்கள் அதிதுக்கமான இவ்வார்த் தைகளைக் கேட்டபோது கண்ணீர்விட்ட ழுது, அவர்களில் ஒருவரும் தங்கள் வழக்க மான ஆடையாபரணங்களைப் போட்டுக் கொள்ளவில்லை.

5. உள்ளபடி கர்த்தர் மோயீசனை நோ க்கி: இஸ்றாயேல் புத்திரருக்குச் சொல்லு: நீங்கள் குனியாக் கழுத்தை உடையவர்கள். உங்கள் நடுவில் நாம் ஒருவிசை வருவோமா கில் உங்களை நிர்மூலம்பண்ண வேண்டியதா யிருக்கும். (ஆகையால்) நீங்கள் போட்டிருக் கிற உங்கள் ஆபரணங்களைக் கழற்றிப்போட் டால் நாம் உங்களுக்குச் செய்யவேண்டியதை அறிவோம் என்றருளினார்.

6. ஆனபடியால் இஸ்றாயேல் புத்திரர் ஒரேப் மலையருகே தங்கள் ஆபரணங்களைக் கழற்றிப்போட்டார்கள்.

7. அப்புறம் மோயீசன் ஆசாரக் கூடாரத்தைப் பெயர்த்து அதைப் பாளையத்துக்குப் புறம்பே தூரத்திலே ஸ்தாபித்தான், அதின் பெயரையும் உடன்படிக்கைக் கூடாரமென்றழைத்தான். அதுமுதல் யாதொரு வழக்கு உண்டானால், ஜனங்களெல்லாம் பாளையத்துக்குப் புறம்பே உடன்படிக்கைக் கூடாரத்துக்குப் போவார்கள்.

8. மோயீசன் வெளிப்பட்டுக் கூடாரத்துக்குப் போகும்போது ஜனங்களெல்லோ ரும் எழுந்திருந்து தங்கள் தங்கள் கூடார வாசலிலே நின்று மோயீசன் (உடன்படிக்கைக்) கூடாரத்தில் அவன் பிரவேசிக்கும் மட்டும் அவன் முதுகைப் பார்த்துக் கொண்டிருப் பார்கள்.

9. அவன் உடன்படிக்கைக் கூடாரத்திற் பிரவேசித்த பின்னரோ மேகஸ்தம்பமானது வாசலில் இறங்கி நிற்கும்; அப்பொழுது கர்த்தர் மோயீசனோடு பேசிக்கொண்டிருப்பா ர்.

10. மேகஸ்தம்பம் கூடார வாசலிலே நின்று கொண்டிருப்பதை யாவரும் காண்பார்கள். ஜனங்களும் எழுந்து தங்கள் தங்கள் கூடார வாசலிலே பணிந்து நமஸ்காரம் புரிந்து கொண்டிருப்பார்கள்.

11. ஒரு மனிதன் தன் சிநேகிதனோடு பே சும் வழக்கம்போலக் கர்த்தர் மோயீசனோடு முகமுகமாய்ச் சல்லாபித்துக்கொண்டிருப் பார். பிறகு அவன் பாளையத்திற்குத் திரும் பிப் போகும்பொழுது நூனின் குமாரனாகிய வாலிப ஜோசுவா என்னும் அவனுடைய சீஷன் திருக்கூடாரத்தைவிட்டு விலகாதிருந் தனன்.

12. மோயீசனோ கர்த்தரை நோக்கி: தேவரீர் இந்த ஜனங்களை அழைத்துக் கொண்டு போ என்று கற்பிக்கிறீரே, ஆகிலும் என்னோடுகூட இன்னாரை அனுப்புவீரென் பதை எனக்கு அறிவிக்கவில்லை. விசேஷம்: . தேவரீர் என்னை நோக்கி: உன் பேரைச் சொல்லி உன்னை அழைத்து அறிந்திருக்கி றோமென்றும், நமக்கு நீ பிரியமுள்ளவ னானாய் என்றும் திருவுளம் பற்றியிருந்தீரே.

13. தேவரீர் சமுகத்தில் அடியேன் அருள டைந்தேனேயாகில், நான் தேவரீரை அறிவ தற்கும், தேவரீருடைய கண்களில் கிருபை பெறுவதற்கும் உமது திருமுகத்தை எனக்குக் காண்பித்தருள்வீர்! உமது பிரஜையாகிய இந்த ஜனங்களையும் நோக்கியருளுவீரே! என்றான்.

14. அதற்குக் கர்த்தர்: நமது சமுகமே உனக்கு முன்பாகச் செல்லும், உனக்கு இளைப்பாற்றியைத் தருவோம் என்று சொல்ல,

15. மீண்டும் மோயீசன்: தேவரீரே எங் களுக்கு முன் செல்லாதிருப்பீரானால் எங்களை இவ்விடத்திலிருந்து புறப்படப் பண்ண வேண்டாம்.

16. ஏனெனில் பூமியின் மீது வசிக்கின்ற எல்லா ஜனங்களாலும் நாங்கள் மகிமை பெறும்பொருட்டுத் தேவரீர் எங்களுடன் எழுந்தருளாவிடில் அடியேனுக்கும் உமது பிரஜைக்கும் உம்முடைய கண்களில் கிருபை கிடைத்ததென்று நாங்கள் எதினால் அறி வோமென,

17. கர்த்தர்: இதோ நீ சொல்லிய இவ்வா ர்த்தைப்படி செய்வோம்; ஏனென்றால் நம் முடைய கண்களில் உனக்குக் கிருபை கிடை த்தது. உன்னைப் பேர் சொல்லி அழைத் தறிந்திருக்கிறோம் என்று மோயீசனுக்குப் பிரதி சொல்லியதற்கு,

18. அவன்: உம்முடைய மகிமையை எனக் குக் காண்பித்தருளும் என்றான்.

19. அப்பொழுது அவர்: நாம் உனக்குச் சர்வ நன்மையைக் காண்பிப்போம். அன்றி யும் நாம் உனக்கு முன்பாகக் கர்த்தருடைய நாமத்தைக் கூறுவோம், எவன்மட்டில் பிரசன்னமாயிருப்போமோ அவன்மட்டில் இரங்குவோம். எவன் மேலே கிருபையாயிருக்கச் சித்தமாயிருப்போமோ அவன்மேல் கிருபை வைப்போம் என்றருளினார்.

20. மறுபடியும்: ஆனால் ஒரு மனிதனும் நம்மைக் கண்டு உயிரோடிருக்கக் கூடாதாகையால் நீ நம்முடைய முகத்தைப் பார்க்க மாட்டாய் என்றார்.

* 20-ம் வசனம். சுவாமி சரீரமில்லாமல் சுத்த அரூபியாயினும் தமது சிநேகிதர்களுக்கு அற்புதமானவிதமாய்த் தம்மைக் காண்பிக்க வல்லவராயிருக்கிறார்; இப்பொழுது நாம் கண்ணாடியில் நிழலாட்டமாய் அவரைக் காண்கிறோம். அப்பொழுதோ முக முகமாய்க் காண்போம். இப்பொழுது குறைவான தன்மையாய் அறிகிறேன். அப்பொழுதோ நான் எப்படி அறியப்பட்டிருக்கிறேனோ அப்படியே அறிவேன் (1 கொரி. 13:12 )

21 திரும்பவும் கர்த்தர்: இதோ நமதண்டையில் ஓரிடமுண்டு. நீ பாறையின்மேல் நிற்பாய்

22. பிறகு நமது மகிமை கடந்து போகும் பொழுது நாம் உன்னைப் பாறைக் குகையில் இருத்தி, நாம் அப்பாற் போகுமட்டும் நம்முடைய வலது கரத்தினால் உன்னை மூடுவோம்.

23. பிற்பாடு நாம் கரத்தை யெடுத்திருக்கையில் நீ நமது பின்புறத்தைக் காணப் பெறுவாய். என் முகத்தையோ நீ காணப் பெற மாட்டாய் என்றார்.