இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

யாத்திராகமம் - அதிகாரம் 32

மோயீசனில்லாதபோது ஜனங்கள் பொன் கன்றுக்குட்டிக்குப் பூசை பண்ணினதும் - அதனால் தேவன் கோபித்ததும் - மோயீசன் மன்றாட்டினாலே தேவ கோபம் தணிந்ததும் - மோயீசன் விக்கிரக ஆராதனை செய்தவர்களைக் கொல்லக் கட்டளையிட்டதும்.

1. மோயீசன் மலையிலிருந்து இறங்கி வரத் தாமதிக்கிறதைக் கண்டு ஜனங்கள் ஆரோனுக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி அவனை நோக்கி: நீர் எழுந்து எங்களுக்கு முன் செல்லும் தேவதைகளை எங்களுக்காக உண்டுபண்ணும். ஏனென்றால் எஜிப்த்து தேசத்திலிருந்து எங்களைப் புறப்படச் செய்த மோயீசனாகிய அந்த மனிதனுக்கு என்ன சம்பவித்ததோ என்றறியோம் என்றார்கள்.

2. அதற்கு ஆரோன்: உங்கள் மனைவிகள், குமாரர் குமாரத்திகளுடைய காதுகளினின்று பொன்னணிகளைக் கழற்றி என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என,

* 2-ம் வசனம். ஆரோன் அவர்களுடைய முகத்துக்கு அஞ்சி இவ்விதமாய்ப் பேசினானே யல்லாது உள்ளத்திலே அவர்களுடைய துரோகத்துக்குச் சம்மதிக்கவில்லை யென்று சொன்னாலும் அவன் அதினாலே பெரிய பாவியானான் என்பதற்குச் சந்தேகமில்லை. சில கிறீஸ்தவர்கள் தங்கள் ஊரில் விசாரணைக் குருக்களுக்கு விரோதமாய் வெகு பேர்களைக் கூட்டிக் குழப்பம் செய்வதைப் பார்த்து வேறே யாதோரு முகாந்தரமல்லாமல் குழப்பக் காரரோடு சேர்ந்து கலாபம்பண்ணி வருகிறார்களே; அது எவ்வளவு கோழைத்தனமென்றும், அதினால் அவர்கள் எம்மாத்திரம் பாவியாகிறார்கள் என்றும் சொல்லவும் வேண்டுமோ? போஞ்சு பிலாத்தென்பவனுக்கு வந்த கெதியை அவர்கள் சற்று நினைத்தாலே போதும்.

3. ஜனங்கள் அவனுடைய கட்டளைப் படி காதணிகளை ஆரோனிடத்திற் கொண்டு வந்தார்கள்.

4. அவன் வாங்கிக் கருப்பிடித்து அவைகளைக்கொண்டு கன்றுகுட்டியொன்றை வார்ப்பட வேலையாய் உண்டாக்கினான். அவர்களோ: இஸ்றாயேலே! உன்னை எஜிப்த்து தேசத்திலே நின்று விடுதலையாக்கிய உன் தேவர்கள் இவர்களேயாம்! என்றனர்.

5. ஆரோன் இதைக் கண்டு, அதற்கு முன் பாக ஓர் பலிபீடத்தைக் கட்டி: நாளைக்கு ஆண்டவருடைய பண்டிகையிருக்கும் என, கட்டியக்காரனால் கூறச்செய்தான்.

6. அவர்கள் காலையிலெழுந்து சர்வாங்க தகனப் பலிகளையும் சமாதானப் பலிகளையும் ஒப்புக்கொடுத்தார்கள். பிறகு ஜனங்கள் உண்ணவும் குடிக்கவும் உட்கார்ந்து விளையாடவும் எழுந்தார்கள்.

7. கர்த்தரோ மோயீசனுக்குத் திருவாக்கருளி: இறங்கிப்போ! நீ எஜிப்த்து நாட்டினின்று விடுதலையாக்கிய உன் ஜனங்கள் பாவஞ் செய்தார்களே.

8. நீ அவர்கட்குக் காண்பித்த வழியை அவர்கள் எவ்வளவு சீக்கிரமாய் விட்டு விலகித் தங்கட்குக் கன்றுக்குட்டி ஒன்றை வார்ப்பட வேலையாய் உண்டுபண்ணி, ஆராதித்துப் பின் அதற்குப் பலியிட்டு, இஸ்றாயேலே! உன்னை எஜிப்த்து தேசத்தினின்று விடுதலையாக்கிய உன் தேவர்கள் இவர்களே யாம் என்று சொன்னார்கள் என்றார்.

9. மீண்டும் கர்த்தர் மோயீசனோடு பேசி: இந்த ஜனங்களைப் பார்த்தோம்: அவர்கள் வணங்காக் கழுத்துள்ள ஜனங்களே ஆகையால்,

10. நீ நம்மை விட்டுவிடு; நமது கோபம் அவர்கள்மேல் மூண்டு நாம் அவர்களை அதம் பண்ணுவோம்; உன்னை ஒரு பெரிய ஜனத்துக்குத் தலைவனாக்குவோம் என்றார்.

11. மோயீசனோ தனது தேவனாகிய கர் த்தரைப் பிரார்த்தித்துச் சொல்லுவான்: சுவாமீ! தேவரீர் மகத்த பலத்தினாலும், வல்ல மையுள்ள கரத்தினாலும் எஜிப்த்து தேசத் தினின்று விடுதலையாக்கி அருளிய உமது ஜனங்களின்மேல் உமது கோபம் ஏன் மூள வேண்டும்?

12. மலைகளில் அவர்களைக் கொன்று போட்டுப் பூமியினின்று அவர்களை நிர்மூல மாக்குவதற்கு அல்லவோ தேவன் கபடமாய் அவர்களை எஜிப்த்து தேசத்திலிருந்து அழைத்துக் கொண்டு போனாரென்று எஜிப்த்தியர் சொல்லுவார்களே; அது வேண்டாம்; தேவரீருடைய கோபத்தின் உக்கிரம் அமரக்கடவது. துஷ்ட ஜனங்களின் மேல் தேவரீர் இரக்கம் வைக்கவேண்டுமென வேண்டுகிறேன்.

13. தேவரீர் அபிரகாம், இசாக், இஸ்றா யேலாகிய உமது ஊழியர்களை நினைத்தரு ளும். அவர்களை நோக்கி: உங்கள் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப் போலப் பெரு கப்பண்ணி, நாம் சொல்லிய இந்தத் தேச முழுவதையும் நீங்களும் உங்கள் சந்ததி யாரும் என்றைக்கும் சுதந்தரித்துக்கொள்ளும் படிக்குத் தந்தருளுவோமென்று உமது பேரில் ஆணையிட்டுத் திருவுளம் பற்றினீரன்றோ என்று மன்றாடினான்.

14. அப்பொழுது கர்த்தருக்குக் கோபம் மாறிப்போய் தாம் ஜனங்களுக்குச் செய்வ தாக எவ்விதத் தீங்கு சொல்லியிருந்தாரோ அதைச் செய்யாமல் விட்டுவிட்டார்.

* 11-14-ம் வசனம். மோயீசனுடைய சாந்த குணமும், ஆத்துமாக்களுடைய இரட்சிப்பின் மேல் அவர் கொண்டிருந்த ஆசை மிகுதியும் உச்சம் பகலினும் துலம்பரமாய் விளங்குகின்றதுந் தவிர, பரிசுத்த மனதையுடையவனுடைய ஜெபங்களுக்குத் தேவன் தப்பாது செவி கொடுக்கிறா ரென்று இது திருஷ்டாந்தமாயிருக்கிறது.

15. பிறகு மோயீசன் மலையிலிருந்து இறங்கி வந்தான். சாட்சியப் பலகையிரண்டும் அவன் கையிலிருந்தன. அவைகள் இந்தப் புறத்திலும் அந்தப்புறத்திலும் எழுதப்பட் டிருந்தன. 

16. அந்தப் பலகைகள் தேவனால் செய்யப் பட்டிருந்ததன்றி அவைகளிலே பதிந்திருந்த எழுத்துக்களும் தேவனுடைய கையெழுத்தா யிருந்தது.

17. ஜனங்கள் ஆரவாரம் பண்ணுகிறதை கேட்டு ஜோசுவா மோயீசனை நோக்கி:  பாளையத்திலே சண்டைபோடப் போகிறாப் போலே இரைச்சல் உண்டாயிற்றென்றான்.

18. அதற்கு மோயீசன்: இது யுத்தத்திற் குப் பிரயோகமான ஆர்ப்பரிப்புமல்ல, சத்துருக்களை ஓட்டிவிடுகிறவருடைய தொ னியுமல்ல, பாடலின் ஓசைதான் எனக்குக் கேட்கிறது என்றான்.

19. அவன் பாளையத்தை அண்டிவரவே, கன்றுக்குட்டியையும், ஆடல்பாடல்களை யும் கண்டு மிகவும் கோபமுள்ளவனாகித் தன் கையிலிருந்த இரு பலகைகளையும் மலையில் அடியிலெறிந்து துண்டந் துண்டமாய் உடை த்துப் போட்டு,

* 19-ம் வசனம். தேவப் பிரஜையின் துரோகத்தினால் தேவ உடன்படிக்கை இரத்துப் போனதென்றும், மனிதர்கள் உண்டாக்கும் பொய்த்தேவர்களின் விக்கிரகங்கள் பலனற்ற தென்றும் காட்டுவதற்காக மோயீசன் கோபம்கொண்டு சுவாமி கொடுத்த கற்பலகைகளையும் உடைத்துக் கன்றுக்குட்டிச் சிலையையும் நீராக்கினான்: விக்கிரகங்கள் மனிதர்களுடைய கைவேலைதானே. வெள்ளியும், பொன்னும், மண்ணும்தானே; அவைகளுக்கு வாயிருந்தும் அவைகள் பேசாது, கண் இருந்தும் காணாது, காதிருந்தும் கேளாது, நாசி இருந்தும் முகராது, கை இருந்தும் தடவாது, கால் இருந்தும் நடவாது. அவைகளை உண்டாக்குகிறவர்களும் அவைகளை நம்புகிறவர்களும் அவைகளுக்குச் சமானமாகக் கடவார்கள். (113-ம் சங்கீதம், 11,15-ம் வசனம்).

20. அவர்கள் உண்டுபண்ணின கன்றுக் குட்டியையும் எடுத்து அக்கினியிற் சுட்டெரித் துப் பொடியாகப் பொடித்து, அப்பொடி யைத் தண்ணீரோடு கலந்து இஸ்றாயேல் புத்திரர்களுக்கு அதைக் குடிக்கக் கொடுத் தான்.

21. பின்பு அவன் ஆரோனை நோக்கி: நீ இந்த ஜனங்களின்மேல் இந்தப் பெரும் பாவத்தை வருவிப்பதற்கு அவர்கள் உனக்கு என்ன செய்தார்கள் என,

22. அதற்கு ஆரோன்: என் ஆண்டவனுக் குக் கோபம் வேண்டாம். இது பொல்லாத ஜனம். தீமையை நாடும் ஜனமென்று நீர் அறிந்திருக்கிறீர். 

23. அவர்கள் என்னைப் பார்த்து: எங்க ளுக்கு முன்னாகச் செல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும்; எஜிப்த்து தேசத்திலிருந்து நம்மை அழைத்துக்கொ ண்டு வந்தானே, அந்த மோயீசனுக்கு என்ன சம்பவித்ததோ அறியோமென,

24. அப்பொழுது நான்: உங்களில் பொ ன்னுடைமை யாருக்குண்டு என்று கேட்க, அவர்கள் பொன்னைக் கொணர்ந்து என்னிடத்தில் ஒப்புவித்தார்கள். நான் அதை அக்கினியில் போட்டேன். அதிலிருந்து அந்தக் கன்றுக்குட்டி வெளிப்பட்டது என்று பிரதி சொன்னான்.

25. இந்த வெட்கத்துக்குரிய அக்கிரமத்தைப்பற்றி, ஆரோன் ஜனங்களைக் கொள்ளையிட்டு அவர்களைப் பகைவருக்கு முன்பாக நிருவாணமாக்கினதைக் கண்டு,

26. மோயீசன் பாளையத்தின் வாசலிலே நின்று: கர்த்தருடைய பக்கத்தில் யாரார் இருக்கிறார்களோ, அவர்கள் என்னிடத்தில் வந்து சேரக்கடவார்கள் என்றான். அப்பொ ழுது லேவியின் புத்திரர் எல்லோரும் அவ னிடத்திற் கூடிவந்தார்கள்.

27. மோயீசன் அவர்களை நோக்கி: இஸ் றாயேலின் தேவனாகிய கர்த்தருடைய வாக் கேதெனில்: உங்களில் ஒவ்வொருவனும் தன் பட்டயத்தைத் தன் அரையிலே கட்டிக் கொண்டு பாளையத்தைக் கடந்து, ஒரு வாச லிலிருந்து மற்றொரு வாசல்மட்டும் போய் நடுவிலே சகோதரனோ, மித்திரனோ, அயலா னோ (யாரைக் கண்டாலும்) கொன்று போடுங்கள் என்றான்.

28. லேவியின் புத்திரர்கள் மோயீசன் சொன்னபடியே செய்தார்கள். அந்நாளிலே சுமார் இருபத்துமூவாயிரம்பேர் உயிரை இழந்தார்கள்.

29. அப்போது மோயீசன் அவர்களை நோக்கி: தேவ ஆசீர்வாதம் உங்களுக்குக் கிடைக்கும்படி இன்று உங்களில் ஒவ்வொரு வனும் தன் தன் மகன்மேலும், சகோதரன் மேலும் பழிவாங்கினமையால் கர்த்தருக்கு உங்கள் கைகளைப் பிரதிஷ்டை பண்ணினீர் கள் என்றான்.

30. மறுநாளில் மோயீசன் ஜனங்களை நோக்கி: நீங்கள் மகா பாதகத்தைச் செய்தீர் களே! நானோ உங்களுக்காகப் பாவ நிவிர் த்தி செய்யக்கூடுமோவென்று கூடியவரை யில் மன்றாடும்பொருட்டு நான் கர்த்தரு டைய சந்நிதிக்கு ஏறிப்போகிறேன் என் றான்.

31. அப்படியே மோயீசன் கர்த்தரிடத்திற்குத் திரும்பிப்போய்: இந்தச் ஜனங்கள் மகா பெரிய பாவத்தைப் பண்ணியிருக்கிறார்கள்; பொன்னினாலே தங்களுக்குத் தெய்வங்களை உண்டுபண்ணினார்கள். ஒன்றில் தேவரீர் இந்தப் பாவத்தை மன்னிக்க வேண்டும். 

32. வேறொன்றில் தேவரீர் எழுதிய உம்முடைய புத்தகத்திலிருந்து என் பெயரைக் கிறுக்கிப்போடுமென்று மன்றாட, 

33. கர்த்தர் அவனுக்கு மறுவுத்தாரமாக: நமக்கு விரோதமாய்த் துரோகம் செய்பவன் எவனோ அவன் பேரை நம்முடைய புத்தகத்திலிருந்து கிறுக்கிப் போடுவோம்.

34. நீயோ நாம் உனக்குச் சொன்ன இடத்திற்கு இந்த ஜனங்களை அழைத்துக் கொண்டு போ. நமது தூதனானவர் உனக்கு முன் செல்லுவார். ஆகிலும் நாம் பழிவாங்கும் நாளில் அவர்களுடைய பாவத்தை அவர்களிடத்தில் விசாரிப்போம் என்றருளினார்.

35. அப்படியே ஆரோன் உண்டுபண்ணின கன்றுக்குட்டியின் விஷயத்திலே ஜனங்கள் செய்த அக்கிரமத்தைப்பற்றி கர்த்தர் அவர்களைத் தண்டித்தார்.