இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

யாத்திராகமம் - அதிகாரம் 31

பெயஸலேயல் என்பவனும் ஒலியாப் என்பவனும் கூடாரத்தைச் செய்யும் வேலைக்காக நியமிக்கப்பட்டதும் - தேவன் சாட்சிய இரண்டு கற்பலகைகளையும் மோயீசனுக்குக் கொடுத்ததும்.

1. பின்னும் கர்த்தர் மோயீசனை நோக்கி:

2. இதோ நாம் யூதா கோத்திரத்தில் ஊருடைய குமாரனான உறியின் புத்திரனாகிய பெயஸலேயல் என்பவனைப் பேர் சொல்லி அழைத்திருக்கிறோம்.

* 2-ம் வசனம். சுவாமி ஆரோனையும் அவன் குமாரர்களையும் குருப்பிரசாதிகளாயிருக்கும்படி தெரிந்தது போல, தேவாலயத்தைக் கட்டுவதற்கும் அதின் உபயோகங்களுக்கு வேண்டியதெல்லாம் உண்டுபண்ணுவதற்கும் பெசெலேயல் முதலியவர்களையும் தெரிந்தழைத்தருளினார். சேசுநாதர் சுவாமி உலகத்திலே சுவிசேஷத்தைப் போதிக்கவேணுமென்று அப்போஸ்தலர்களைத் தெரிந்து கொண்டு அனுப்பினார். இவர்களும் வேறனேகருக்குப் பட்டம் கொடுத்து அவர்களைச் சுவிசேஷத்தைப் போதிக்க அனுப்பி விட்டார்கள். பதித பாதிரிகளுக்குப் பட்டம் கொடுத்தவர்களார்? சுவிசேஷத்தைப் போதிக்க அனுமதி கொடுத்தவர்களார்

3. அவனுக்கு ஞானமும் புத்தியும் அறிவுமுண்டாகத் தேவ ஆவியினாலே அவனை நிரப்பி,

4. பொன், வெள்ளி, வெண்கலத்திலும்,

5. பளிங்குக் கல்லிலும், இரத்தினங்களிலும், நானாவித மரங்களிலும் செய்யக் கூடிய எவ்வித வேலையெல்லாம் யோசித்து யூகித்துச் செய்வதற்கு வேண்டிய யுக்தியைத் தந்தருளினோம்.

6. டான் என்னும் கோத்திரத்தில் உதித்த அக்கிசமேக்கின் குமாரனாகிய ஒலியாபை நாம் அவனோடு துணையாகக் கூட்டினதுமன்றி, நாம் உனக்குக் கட்டளையிட்ட யாவையும் செய்யும்படி சாமர்த்தியத்தை உடையவர்களின் இருதயத்திலும் ஞானத்தைத் தந்தருளினோம்.

7. உடன்படிக்கைக் கூடாரம், சாட்சிப் பெட்டகம், இதின்மேலிருக்கும் கிருபாசனம் இது முதலிய ஆசாரக் கூடாரத்தின் எல்லாத் தட்டுமுட்டுகளும்,

8. மேஜையும், அதின் பாத்திரங்களும், அதி பரிசுத்த குத்துவிளக்கும், அதின் விகளும், வாசனைத் திரவிய பீடமும்

9. தகனப் பலிபீடமும், இவைகளைச் சேர்ந்த சகல பணிமுட்டுக்களும், தொட்டியும், அதின் பாதமும்,

10. ஆசாரியனாகிய ஆரோனும் அவன் குமாரர்களும் திருக்கோலமாய் அணிந்து, தங்கள் ஆசாரியத் தொழில் செய்வதற்கான வஸ்திரங்களும்,

11. அபிஷேகத் தைலம், பரிசுத்த ஸ்தலத் திற்குரிய வாசனைத் திரவிய தூபம் ஆகிய நாம் உனக்குக் கற்பித்த எல்லாவற்றையும் அவர்கள் உண்டுபண்ணுவார்கள் என்றருளினார்.

12. மறுபடியும் கர்த்தர் மோயீசனை நோக்கி:

13. நீ இஸ்றாயேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியதென்ன வென்றால்: நீங்கள் நம்முடைய சாபத் நாளைஅனுசரிக்கும்படி கவனியுங்கள்; ஏனென்றால், உங்களைப் பரி சுத்தப்படுத்துகிற ஆண்டவர் நாமென்று நீங்கள் அறியும்படி அது உங்கள் தலை முறை கள்தோறும் நமக்கும் உங்களுக்கு முள்ள அடையாளமாம்.

14. நம்முடைய சாபத் நாளை அனுசரியுங்கள். ஏனென்றால், அது உங்களுக்குப் பரிசுத்தமானது. அதை மீறி நடப்பவன் எவனோ அவன் கொலையுண்பான். அதிலே தொழில் செய்திருப்பவன் எவனோ அவன் தன் ஜன நடுவிலிராதபடிக்குச் சங்கரிக்கப் படுவான்.

15. ஆறுநாளும் தொழில் செய்வீர்கள். ஏழாம் நாளோ கர்த்தருக்குப் பரிசுத்தமான ஓய்வு நாளாகிய சாபத் நாள்; அந்நாளிலே தொழில் செய்திருப்பவன் எவனும் கொலை செய்யப்படுவான்.

16. இஸ்றாயேல் புத்திரர் தங்கள் தலை முறைகள்தோறும் சாபத் நாளை ஆசரித்துக் கொண்டாடக்கடவார்கள், அது என்றைக்கும், 

17. நமக்கும் இஸ்றாயேல் புத்திரருக்கும் உடன்படிக்கையும் அடையாளமுமாயிருக்கும். ஏனெனில் கர்த்தர் பரலோகத்தையும் பூலோகத்தையும், ஆறு நாளுக்குள்ளே சிருஷ்டித்து, ஏழாம் நாளில் வேலையை நிறுத்தி ஓய்ந்தார் எனச் சொல் என்றார்.

18. இப்படி சீனாயி மலையில் கர்த்தர் மோயீசனோடு பேசி முடித்துத் தேவ கையால் எழுதப்பட்ட சாட்சியக் கற்பலகைகளாகிய இரண்டு பலகைகளையும் அவனிடத்தில் தந்தருளினார்.