இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

யாத்திராகமம் - அதிகாரம் 30

தூபதீபத்தின் பீடமும் - ஜனங்களின் மீட்பும் - வெண்கலத் தொட்டியும் - பரிமளக் கலப்பும்.

1. பின்னும் வாசனைத் திரவியங்களைத் தகிப்பதற்காக ஒரு பீடத்தையும் சேத்தீம் மரத்தினால் உண்டுபண்ணுவாய்.

2. அது ஒரு முழ நீளமும், ஒரு முழ அகலமுமான சதுரமாயும், இரண்டு முழ உயரமாயும் இருக்கவேண்டும். அதன் கோணத்திலிருந்து கொம்புகள் புறப்படும்.

3. சல்லடைபோலிருக்கும் மேற்புறத்தையும் சுற்றுப்புறங்களையும் அதின் கொம்புகளையும் சுத்தப் பசும்பொன்னினால் மூடுவாய். அதற்குச் சுற்றிலும் ஒரு பொன் திரணையையும் பண்ணவேண்டியதன்றியில்,

4. திரணையின் கீழே பீடத்தின் இரண்டு பக்கத்திலும் இரண்டு பொன் வளையங்களை உண்டாக்குவாய். அவைகள் பீடத்தைச் சுமப்பதற்கான தண்டுகளின் இடங்களாயிருக்கும்.

5. அத்தண்டுகளையும் சேத்தீம் மரத்தினால் செய்து பொன்னினால் மூடுவாய்.

6. பீடத்தையோ நாம் உன்னோடு பேசத் தீர்மானித்திருக்கிற சாட்சியப் பெட்டியை மூடும் கிருபாசனத்துக்கு முன்னும் சாட்சி யப் பெட்டிக்கு எதிரேயுள்ள தொங்கு சீலைக்கு முன்பாகவும் வைக்கக்கடவாய்.

7. ஆரோன் அதன்மேல் சுகந்த வாசனை வீசும் தூபம் காட்டுவான். காலையில் விளக் குகளை முஸ்திப்பு பண்ணும் நேரத்தில் தானே தூபம் காட்டுவான்.

8. மாலையில் அவைகளை ஏற்றும் நேரத் திலே உங்கள் தலைமுறைகள்தோறும் எப்போ தும் ஆண்டவர் சமுகத்திலே வாசனைத் திர வியங்களைச் சுட்டெரிக்கக்கடவான்.

9. நீங்கள் வேறுவிதமாய்ச் சேர்க்கப்பட்ட பரிமளத் தூபங்களையாவது, காணிக்கை யையாவது, பலியையாவது அந்தப் பீடத்தின் மேல் ஒப்புக்கொடுக்கவும் வேண்டாம். அதிலே பானப் பலிகளை ஊற்றவும் வேண் டாம்.

10. வருஷத்தில் ஒரு முறை ஆரோன் பா வப்பரிகாரப் பலியின் இரத்தத்தினால் அதன் கொம்புகளின் மேல் பிராயச்சித்தம் பண்ணு வான். உங்கள் தலைமுறைகள் தோறும் அதின்மேல் பிராயச்சித்தம் செய்வான். அது ஆண்டவருக்குப் பரிசுத்தத்திலும் பரிசுத்த மானதாமென்றருளினார்.

11. ஆண்டவர் பின்னும் மோயீசனுக்குத் திருவுளம்பற்றினதாவது: 

12. நீ இஸ்றாயேல் புத்திரரை அவர்க ளின் இலக்கத்தின்படி கணக்குப் பார்த்து எண்ணும்போது அவர்களில் ஒவ்வொருவ னும் எண்ணப்படும் வேளையிலே தன் தன் ஆன்மாவைப் பற்றிக் கர்த்தருக்கு மீட்புப் பணத்தைக் கொடுப்பார்கள். அவர்கள் எப் போது எண்ணப்படுவார்களோ அப்போது அவர்களுக்குள்ளே ஒரு வாதையும் உண்டா காது.

13. எண்ணப்படுகிறவர்களில் ஒவ்வொரு வனும் பகுதி கொடுக்கவேண்டியது என்ன வென்றால், பரிசுத்த ஸ்தலத்துச் சீக்கல் கணக்கின்படி அரைச் சீக்கலைச் செலுத்தக் கடவான். ஒரு சீக்கலுக்கு இருபது ஒபோல். கர்த்தருக்குச் செலுத்தப்படுவது அரைச் சீக்கலே.

* 13-ம் வசனம். சீக்கலின் பெறுமதி இன்னதென்று திட்டமாய்ச் சொல்லக் கூடாதாயினும், பரிசுத்த ஸ்தலத்துச் சீக்கலானது சுமார் ஒன்றரை ரூபாய் பெறுமென உத்தேசிக்கலாம்.

14. முதல் எண்ணப்பண்ணுகிறவர்களின் தொகையிலே எவர்கள் இருபது வயதுள்ள வர்களோ அவர்களும் அந்த வயதுக்கு மேற் பட்டவர்களும் அதைக் கர்த்தருக்குச் செலுத்தக்கடவார்கள்.

15. ஆஸ்திக்காரன் அரைச் சீக்கலுக்கு அதிகமாயும், தரித்திரன் அதற்குக் குறைவா யுஞ் செலுத்தவேண்டாம்.

16. நீயோ இஸ்றாயேல் புத்திரரிடத்தி லே அந்தப் பணத்தை வாங்கி ஆண்டவரு டைய சந்நிதியிலே அவர்கள் ஞாபகமிருக் கும் பொருட்டும், அவர்கள் ஆத்துமாக்க ளுக்குப் பாவப் பரிகாரமாகும் பொருட்டும் அதை ஆசாரக் கூடாரத்தின் திருப்பணிக் குக் கொடுப்பாயென்றார்.

* 16-ம் வசனம். அந்த வரி எப்போதும் வாங்கப்பட்டுவந்தது. விசுவாசிகள் தேவாலயச் செலவுகளுக்கும் குருக்களின் ஜீவனத்துக்கும் தங்களாலான உதவி செய்யவேண்டுமென்பது உறுதி. தேவ ஆராதனையைப் பற்றிய வரியைச் செலுத்தாத கிறீஸ்தவனுக்குப் பக்தியுமில்லை, புத்தியுமில்லை என்றாலும் என்கலாம்.

17. ஆண்டவர் பின்னும் மோயீசனை நோக்கி:

18. கழுவுகிறதற்கு வெண்கலத்தால் ஒரு தொட்டியையும், அதின் பாதத்தையும் உண்டுபண்ணி, ஆசாரக் கூடாரத்திற்கும் பீடத்திற்கும் நடுவே வைத்து அதில் தண்ணீர் வார்த்த பிற்பாடு,

19. அதனிடத்திலே ஆரோனும் அவன் குமாரர்களும் தங்கள் கை கால்களையும் கழுவக்கடவார்கள்.

20. அவர்கள் சாட்சியக் கூடாரத்திற் குள் பிரவேசிக்கும் போதும், கர்த்தருக்குத் தூபவர்க்கத்தை ஒப்புக்கொடுக்கும்படி பலிபீடத்தின் இடத்தில் வரும்போதும் அவ்விதமே கை கால்களையும்,

21. கழுவாவிட்டால் ஒருவேளை சாவார் கள்; இது தலைமுறைகள்தோறும் அவனுக் கும் அவனுடைய சந்ததியாருக்கும் நித்தியப் பிரமாணமேயாகும் என்றருளிய பிற்பாடு,

22. மறுபடியும் கர்த்தர் மோயீசனை நோக்கி:

23. மேன்மையான பரிமள வர்க்கங்க ளாகிய முதல்தரத்துச் சுத்த வெள்ளைப் போளத்தில் ஐந்நூறு சீக்கல் எடையை யும், கருவாப்பட்டையிலே அதில் பாதியா கிய இருநூற்றைம்பது சீக்கல் எடையை யும் சுகந்த வசம்பிலே இருநூற்றைம்பது சீக்கல் எடையையும்,

24. இலவங்கப்பட்டையிலே பரிசுத்த ஸ்தலத்து நிறையின்படி ஐந்நூறு சீக்கல் எடையையும் கின்னென்னும் ஒரு படி ஒலீவ எண்ணையையும் எடுத்து,

25. அதனால் பரிமள தைலக்காரர் செய்வதுபோல நீ திரு அபிஷேகத்துக்குரிய கூட்டுவர்க்கத் தைலம் பண்ணி,

26. அதைக் கொண்டு சாட்சியக் கூடாரத்தையும் உடன்படிக்கைப் பெட்டகத்தையும்,

27. மேஜையையும், பாத்திரங்களையும், குத்துவிளக்கையும், அதைச் சேர்ந்த பணி முட்டுகளையும், தூபவர்க்கப் பீடத்தையும், 

28. தகன பலிபீடத்தையும் அவைகளுக் கடுத்த சமஸ்த தட்டுமுட்டுகளையும் அபி ஷேகம் பண்ணி, 

29. அதெல்லாவற்றையும் பரிசுத்தப்படு த்துவாய். அவைகள் அனைத்தும் அவ்வாறே அதி பரிசுத்த பொருளானபடியால் அவைக ளைத் தொடுவார் பரிசுத்தமாவார்.

30. ஆரோனும் அவன் குமாரர்களும் நமக்கு ஆசாரிய அலுவலைச் செய்யும்படிக்கு நீ அவர்களை அபிஷேகம் பண்ணிப் பரிசுத்தப் படுத்துவாயாக.

31. அன்றியும் இஸ்றாயேல் புத்திரரோடு பேசி: இது உங்கள் தலைமுறைகள் தோறும் நமக்குரித்தான பரிசுத்த அபிஷேகத் தைலமாயிருக்குமென்பாய்.

32. இது மனிதனுடைய சரீரத்தின் மேற் பூசப்படவும், இது கூட்டப்பட்ட முறை யின்படி அவர்கள் வேறொரு தைலத்தைச் செய்யவுமாகாது. ஏனெனில், இது பரிசுத்த மானது. உங்களுக்கும் பரிசுத்தப் பொருளாக வேண்டும்.

33. இதற்குச் சமானமான தைலத்தை எவன் கூட்டுவானோ அல்லது அதிலெடு த்து அந்நியனுக்குக் கொடுப்பானோ அவன் தன் ஜனத்திலிராதபடிக்குச் சங்கரிக்கப் படுவான் என்றார். 

34. பின்னும் கர்த்தர் மோயீசனை நோக்கி: சுகந்த பரிமள வர்க்கங்களாகிய வெள்ளைப் போளத்தையும் குங்கிலியத்தையும், நல்ல வாசனையுள்ள கல்பான் பிசினையும் அதி சுத்தமான சாம்பிராணியையும் நீ சம நிறையாக எடுத்து, 

35. தைலக்காரர் வேலை செய்யும் முறையின்படி மேற்படிகளைச் ஜாக்கிரதையுடன் கூட்டித் திருப்பொருளாவதற்குரிய தூய தூபவர்க்கம் பண்ணி,

36. அதில் கொஞ்சமெடுத்துப் பொடிப் பொடியாக இடித்து, நாம் எந்த ஸ்தலத்திலே உனக்குத் தரிசனமாவோமோ அந்த ஸ்தலமாகிய சாட்சியக் கூடாரத்துக்கு முன் வைக்கக்கடவாய். அது உங்களுக்கு மகா பரிசுத்த பரிமளமாகும்.

37. உங்கள் செலவுக்கென்று இதற்கொப்பானவை நீங்கள் செய்துகொள்ளலாகாது. ஏனெனில், கர்த்தருக்கென்றே அது கூட்டப்பட்டது

38. அதின் மணம் முகருகிறதற்கு எவன் அதற்கொப்பானதைச் செய்திருப்பானோ அவன் தன் ஜனத்தில் இராதபடிக்குச் சங்கரிக்கப்படுவான் என்றார்.