இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

யாத்திராகமம் - அதிகாரம் 29

ஆசாரியருடைய அபிஷேகச் சடங்குகளையும் - நாள்தோறும் படைக்கப்படும் பலிகளில் அவர்களுக்குக் கிடைக்கும் பங்கையும் - இரண்டு ஆட்டுக்குட்டிகள் நித்தம் பலியிட வேண்டியதையும் குறித்து.

1. அல்லாமலும் அவர்கள் நமக்கு ஆசாரிய அலுவலுக்குரிய பட்டம் வாங்கும்பொருட்டு நீ செய்யவேண்டிய தென்னவென்றால்: ஒரு காளையையும் பழுதில்லாத இரண்டு ஆட்டுக் கிடாக்களையும் மந்தையினின்று எடுத்துக்கொள்ளுவாய்;

2. புளிப்பில்லாத அப்பங்களையும் எண் ணை தெளித்த புளிப்பற்ற தோசையையும், எண்ணையால் பூசப்பட்ட புளிப்பேறாத பலகாரங்களையும் ஆக இவையெல்லாம் கோதுமை மெல்லிய மாவினால் பண்ணி,

3. ஒரு கூடையில் வைத்து அவைகளை யும் காளையையும் இரண்டு ஆட்டுக்கடாக் களையும் கொண்டு வந்து,

4. ஆரோனையும் அவன் குமாரர்களை யும் உடன்படிக்கைக் கூடாரத்தின் வாசல் முன்பாக வரப்பண்ணி தகப்பனையும் அவன் குமாரர்களையும் தண்ணீரால் கழுவின பிற்பாடு,

5. ஆரோனுடைய வஸ்திராபரணங்களை எடுத்து, மெல்லிய சணல் நூலால் நெய்த உட்சட்டையையும், கீழங்கியையும், ஏப் போத்தையும், மார்பதக்கத்தையும் அவ னுக்கு உடுத்தின பின்பு மேலே விசித்திரக் கச்சையால் அவைகளைக் கட்டுவாய்;

6. அவன் தலையின்மீது கிரீடப்பாகையை யும், பாகையின் மீது பரிசுத்தத் தகட்டை யும் தரிப்பித்து,

7. அவன் தலையின்மேல் அபிஷேகத் தைலத்தை வார்ப்பாய்; இவ்வாசாரத்துட னே அவன் அபிஷேகம் பண்ணப்படுவான்.

8. பிறகு அவனுடைய குமாரர்களையும் வரச்சொல்லி, மெல்லிய சணல் நூலால் நெய்த அங்கிகளையும் உடுத்திக் கச்சையாலும் கட்டுவாய்;

9. இப்படி ஆரோனும் அவன் குமாரர்ககளும் (உடுத்தப்பட்ட பின்பு) அவர்களுக் குக் கிரீடங்களைத் தரிப்பிப்பாய். அவர்களும் நித்திய ஆராதனைக்காக நமக்குக் குருக்களாய் இருப்பார்கள். அவர்களுடைய கரங்களையும் பிரதிஷ்டை பண்ணிய பின்னரும்

10. காளையை உடன்படிக்கைக் கூடாரத் தின் முன்பாகக் கொண்டுவரச் செய்வாய்; ஆரோனும் அவன் குமாரர்களும் அதன் தலையின்மீது கரங்களை விரித்து வைத்த மாத்திரத்தில்,

11. அதனைக் கர்த்தருக்கு முன்பாகச் சாட்சியக் கூடாரத்தின் வாசலருகில் அடித் துப் பலியிடக்கடவாய்;

12. பிறகு காளையின் இரத்தத்திலே கொஞ்சமெடுத்துப் பீடத்துக் கொம்புகளின் மீது உன் விரலாலிட்டு மீதியான இரத்தம் முழுவதையும் பலிபீடத்துப் பாதத்தில் ஊற்றுவாய்;

13. குடல்களை மூடிய கொழுப்பு யாவை யும், கல்லீரலின் பையையும், இரு சிறுநீரகங்- களையும், அவைகளின் மேலேயுள்ள கொ ழுப்பையும் எடுத்துப் பீடத்தின்மீது தகித்துப் போட்டு,

14. காளையின் இறைச்சிகளையும் தோ லையும் சாணியையுமோ அவைகள் பாவப் பரிகாரப் பலி ஆகையால் அவையெல்லாம் வெளியே பாளையத்தின் புறத்தே சுட்டெரிப் பாய்;

15. ஒரு ஆட்டுக்கடாவையும் பிடித்துக் கொள்வாய்; ஆரோனும் அவன் குமாரர் களும் அதின் தலைமீது கரங்களை வைத்த மாத்திரத்தில்,

16. அதை அடித்து அதன் இரத்தத்தி னின்று கொஞ்சமெடுத்துப் பலிபீடத்துக்குச் சுற்றிலும் ஊற்றிவிடுவாய்;

17. அவ்வாட்டுக் கடாவையோ துண்டுக ளாய் வெட்டி, அதன் குடல்களையும் கால் களையும் கழுவி, அவைகளைத் துண்டிக்கப் பட்ட இறைச்சிகளின் மேலும் தலையின் மீதும் வைத்து,

18. ஆட்டுக்கடா முழுவதையும் பலிபீடத் தின் மேற் சுட்டெரித்து ஒப்புக்கொடுப் பாய். ஆண்டவருக்கேற்ற பலியின் அதிசு கந்த மணமே கர்த்தருக்குக் காணிக்கையாகும்.

19. இன்னும் மற்றொரு ஆட்டுக்கடா வைப் பிடித்துக் கொள்ளுவாய்; ஆரோனும் அவன் குமாரர்களும் அதன் தலையின் மீது கரங்களை வைத்த பிறகு,

20. நீ அதை அடித்துப் பலியிட்டு அதின் இரத்தத்தில் கொஞ்சமெடுத்து ஆரோனுக் கும் அவனுடைய குமாரர்களுக்கும் வலது காது மடலிலேயும், அவர்களுடைய வலது கையின் பெருவிரலிலேயும், வலது காலின் பெருவிரலிலேயும் இட்டு மீதியான இரத்தத் தைப் பலிபீடத்தின் மேலே சுற்றிலும் வார்த்து,

21. பீடத்தின் மீதிருக்கும் இரத்தத்திலும் அபிஷேகத் தைலத்திலும் கொஞ்சமெடுத்து ஆரோன் மேலும், அவன் வஸ்திரங்களின் மீதும், அவனுடைய குமாரர்கள் மேலும் அவர் களுடைய வஸ்திரங்களின் மீதும் தெளிப்பாய்; (இவ்வாறு) அவர்களையும் அவர்களது வஸ்திரங்களையும் நீ அபிஷேகம் பண்ணிய பின்னர்,

22. அந்த ஆட்டுக்கடா பிரதிஷ்டைப் பண்ணப்பட்ட கடாவாகையால், அதிலுள்ள கொழுப்பையும், வாலையும் குடர்களை மூடிய கொழுப்பையும், கல்லீரலின் மே லுள்ள சவ்வையும் வலதுபக்கத்து முன்னந் தொடையையும்,

23. ஆண்டவருடைய சந்நிதானத்தில் வைக்கப்பட்ட புளியாத அப்பங்களில் கூடையிலிருந்து ஒரு உரொட்டித் துண்டை யும் எண்ணையைத் தெளித்த ஒரு தோசை யையும் ஒரு பலகாரத்தையும் எடுத்து,

24. அவை எல்லாவற்றையும் ஆரோனு டைய உள்ளங்கைகளிலும், அவன் குமாரர் களுடைய உள்ளங்கைகளிலும் வைத்து, அவைகளைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் உயர்த்திப் பரிசுத்தமாக்குவாய்;

25. பின்னும் அவர்களுடைய கைகளிலி ருந்து அவையெல்லாவற்றையும் பற்றிக் கொண்டு ஆண்டவருடைய சமுகத்திலே அதி சுகந்த மணமுடைய தகனப்பலியாகப் பலி பீடத்தின் மீது சுட்டெரிப்பாய்; ஏனென் றால் இது அவருக்கான காணிக்கையே.

26. அன்றியும் ஆரோன் எந்த ஆட்டுக் கடாவைக் கொண்டு அபிஷேகம் செய்யப் பட்டானோ, அந்தக் கடாவிலுள்ள சிறிய மார்க்கண்டத்தை எடுத்து அதைக் கர்த்தரின் சந்நிதானத்திற்கு உயர்த்தி உனக்குப் பங் கென்று பத்திரப்படுத்துவான்.

27. அன்றியும் பிரதிஷ்டையாக்கப்பட்ட சிறிய மார்க்கண்டத்தோடு ஆட்டுக்கடா விலிருந்து பிரித்தெடுத்த முன்னந்தொடை யையும் பரிசுத்தப்படுத்துவாய்.

28. ஆரோனும் அவன் குமாரர்களும் அதைக்கொண்டு அபிஷேகம் செய்யப்பட்ட தாதலால், (மேற்படி மார்க்கண்டமும் முன்னந் தொடையும் (ஆரோனுக்கும் அவன் குமாரர்களுக்கும்) நித்திய சுதந்தரமான பங்கென்று இஸ்றாயேல் புத்திரரால் அளிக்கப்படும்; ஏனெனில் கர்த்தருக்குப் பிரதிஷ்டை செய்யப்பட்ட சமாதானப் பலிகளில் அவைகள் தலைக் காணிக்கையாயிருக்கின்றன.

29. ஆரோன் உடுத்தியிருக்கும் திரு வஸ்திராபரணங்கள் அவனுக்குப் பின் அவன் குமாரர்களைச் சேரும். அவைகளை உடுத்தியே அவர்கள் அபிஷேகம் செய்யப்பட்டுக் கைப்பூசுதலைப் பெறக்கடவார்கள்.

30. அவன் குமாரர்களில் எவன் அவனுக்குப் பதிலாய்ப் பிரதான ஆசாரியனாக நேமிக்கப்பட்டுப் பரிசுத்த ஸ்தலத்தில் பணிவிடையைச் செய்ய உடன்படிக்கைக் கூடாரத்திலே பிரவேசிப்பானோ அவன் ஏழுநாள் வரைக்கும் அவைகளை உடுத்திக்கொள்ளக் கடவான்.

31. மேலும் நீ அபிஷேகத்தின் ஆட்டுக்கடாவைக் கொண்டுவந்து அதின் இறைச்சிகளைப் பரிசுத்த ஸ்தலத்திலே சமைத்துக் கொள்ளுவாய்;

32. ஆரோனும் அவன் குமாரர்களும் அவைகளைப் புசிப்பார்கள்; கூடையிலிருக் கிற அப்பங்களையும் சாட்சியக் கூடாரத்து மண்டபத்திலே புசிப்பார்கள்;

33. பாவப் பரிகாரப் பலியாயிருக்கத்தக் கதாகவும் அந்தப் பலியை இட்டவர்களின் கைகள் பரிசுத்தமாகத்தக்கதாகவும் (அவ் வாறே செய்ய வேண்டும்) அவைகள் கர்த்த ருக்குப் படைக்கப்பட்டதாகையால், அந் நியன் அவற்றைப் புசிக்கலாகாது.

34. ஆனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இறைச்சிகளிலாகிலும், அப்பங்களிலென்கி லும் ஏதாவது மீந்திருந்ததானால் மீதியானதை அக்கினியில் சுட்டெரிப்பாய்; அவைகள் பரிசுத்தமானதால் புசிக்கப்படலாகாது.

35. நாம் உனக்குக் கற்பித்ததெல்லாவற் றையும் நீ ஆரோனின் பேரிலும், அவன் குமாரர்களின் பேரிலும் அனுசரிப்பாயாக; எப்படியெனில் ஏழுநாளளவும் அவர்களு டைய கரங்களை அபிஷேகம் பண்ணி,

36. ஒவ்வொரு நாளுக்கும் பிராயச்சித் தப் பலியாக ஒவ்வொரு காளையைப் படைக் கக்கடவாய்; பாவப்பரிகாரப் பலியிட்ட பிற்பாடு பலிபீடத்தையும் சுத்திகரப்படுத்து வதற்கு அதை எண்ணையைப் பூசி அபி ஷேகம் செய்யக்கடவாய்.

37. ஏழுநாளும் பலிபீடத்தைச் சுத்திக ரித்து அர்ச்சித்த பின்னர், அது பரிசுத்தத்தி லும் பரிசுத்தமாயிருக்குமாகையால் அதை எவன் தொடுவானோ அவன் பரிசுத்தனா வான்.

38. பலிபீடத்தின் மேல் நீ பலியிட வேண் டியது என்னவென்றால், இடைவிடாமல் ஒவ்வொரு நாளிலும் ஒரு வயதான இரண்டு ஆட்டுக்குட்டிகளைப் படைத்து,

* 38-ம் வசனம். தினந்தோறும் காலை மாலை இரண்டு முறையும் கர்த்தருக்குப் பலிகள் செலுத்தப்படும். கிறீஸ்துவன் அனுதினமும் சுவாமியை நினைக்கவும் அவருக்குத் தோத்திரம் பண்ணவும், தன் பாவங்களினிமித்தம் அவருடைய கிருபையின் பிச்சை கேட்டு மன்றாடவும் வேண்டியவனென்று இதினால் அறியலாம். அவ்விதமே சத்தியமான கத்தோலிக்குத் திருச்சபையிலே தினந்தோறும் பரிசுத்தப் பலியாகிய தேவ பூசை நடந்தேறி வருகிறது.

39. ஒரு ஆட்டுக்குட்டியைக் காலையிலும், மற்றொரு ஆட்டுக்குட்டியை மாலையிலும் பலியிடக்கடவாய்.

40. கின் என்னும் படியிலே இடித்துப் பிழிந்த கால்படி எண்ணையிலே ஏப்பி என்னும் மரக்காலில் பத்திலே ஒரு பங்கு மெல்லிய மாவைப் பிசைந்து, அந்த மாவையும், பானப் பலியாகக் காற்படி திராட்ச இரசத்தையும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியோடு கூட ஒப்புக்கொடுக்க வேண்டும்.

41. மற்ற ஆட்டுக்குட்டியைச் சுகந்த வாசனைப் பலியாக மாலையிலே பலியிட வேண்டியது. காலையிலே ஒப்புக்கொடுத்த பிரகாரமாகவும், முந்தி சொல்லப்பட்ட பிரகாரமாகவும் அதைப் படைக்கக்கடவாய்.

42. நீங்கள் தலைமுறை தலைமுறையாக நித்தியமாய்க் கர்த்தருக்கு இடவேண்டிய பலி இதுவே. இனி நாம் உன்னுடன் எவ்வி டத்திலே பேசத் தீர்மானித்துக் கொண் டோமோ அந்தக் கர்த்தருடைய சந்நிதியாகிய சாட்சியக் கூடாரத்தின் வாசலிலேதானே அதைப் படைக்கவேண்டியதாயிருக்கும்.

43. அங்கே இஸ்றாயேல் புத்திரருக்குக் கட்டளைகளையுமிடுவோம். அங்கே பலிபீட மும் நம்முடைய மகிமைப் பிரதாபத்தினா லே பரிசுத்தமாக்கப்படும்.

44. நாம் பலிபீடத்தையும் சாட்சியப் பெட்டியையும் பரிசுத்தமாக்குவோம். நமக்கு ஆசாரியத் தொழிலைச் செய்யும்படி ஆரோனையும் அவன் குமாரர்களையும் பரிசுத்தப்படுத்துவோம்.

45. அவ்விதமே இஸ்றாயேல் புத்திரரின் நடுவே நாம் வாசம்பண்ணி அவர்களுக்குத் தேவனாயிருப்போம்.

46. அப்பொழுதல்லோ தங்களுடைய தேவனாகிய ஆண்டவர் நாமென்றும், தங்களோடே கூட வாசம்பண்ணும்படி தங்களை எஜிப்த்து தேசத்திலிருந்து புறப்படுத்திய தங்களுடைய தேவனாகிய கர்த்தர் நாமென்றும் (அதனாலே) அறிவார்கள்.