இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

யாத்திராகமம் - அதிகாரம் 28

ஆரோனும் அவன் குமாரர்களும் ஆசாரிய ஊழியத்துக்கடுத்த எவ்வித வஸ்திரங்களை அணிந்துகொண்டிருக்க வேண்டுமோ அவைகளைத் தேவன் குறித்திருக்கிறார்.

1. அல்லாமலும் நமக்கு ஆசாரிய ஊழியஞ் செய்யும்படி உன் சகோதரனாகிய ஆரோனையும் அவனுடைய குமாரர்களாகிய நாதாப், அபியூ, எலையசார், இத்தமார், இவர்களையும் இஸ்றாயேல் புத்திரர் நடுவிலிருந்து பிரித்து உன்னிடத்திற் சேர்த்துக்கொள்ளுவாயாக.

2. உன் சகோதரனாகிய ஆரோன் மகிமையும் அலங்காரமுமாயிருக்கும் பொருட்டு அவனுக்காகத் திரு வஸ்திரத்தை உண்டு பண்ணுவாய். 

3. ஆரோன் நமக்கு ஆசாரிய அலுவலைச் செய்யத்தக்கதாக அவனைப் பரிசுத்தப்படுத்தும்படி அவனுக்கு உண்டுபண்ண வேண்டிய திரு வஸ்திரங்களைக் குறித்து நமது ஞானத்தின் ஆவியைப் பூர்த்தியாய்ப் பெற்று எவர்கள் மெய்யாகவே புத்திசாலியாய் இருக்கிறார்களோ அவர்களோடு பேசி ஆலோசனை பண்ணுவாய்.

4. அவர்கள் உண்டாக்கவேண்டிய திரு வஸ்திரங்களாவன: இரேஷனால் என்னும் மார்ப்பதக்கமும், ஏப்போத்தென்ற உத்தரீயமும், நெடுஞ்சட்டையும், மெல்லிய சணப்பு நூலால் நெய்த உட்சட்டையும், கிரீடமென்னும் பாகையும், இடைக் கச்சையும் இவைகளேயாம். உன் சகோதரனாகிய ஆரோனும் அவன் குமாரர்களும் நமக்கு ஆசாரிய அலுவலைச் செய்யத்தக்கதாக அவர்களுக்கு அவர்கள் திரு வஸ்திரங்களை உண்டுபண்ணுவார்கள்.

5. அதற்காக அவர்கள் பொன், நீலம், தூமிரம், இருமுறை தோய்த்த இரத்தாம்பரம், மெல்லிய சணப்பு இவைகளின் நூற்களைச் சேகரிக்கக்கடவார்கள்.

6. ஏபோத்தென்ற உத்தரியத்தைப் பொன், நீலம், தூமிரம், இருமுறை தோய்த்த இரத்தாம்பரம், முறுக்கிய சணப்பு இவை களின் நூல்களாலே விசித்திர வர்ண வேலையாய்ச் செய்வார்கள்.

7. அதன் இரண்டு மேல் முனையிலும் ஏப்போத் உத்தரீயத்தோடு ஒரே பொருள் ஆகத்தக்க இரண்டு தோல் வார்கள் ஒன்றுடனொன்று இணைக்கப்பட வேண்டும்.

8. பொன், நீலம், தூமிரம் இருமுறை சாயந்தீர்த்த இரத்தாம்பரம், முறுக்கிய மெல்லிய சணப்பு நூல்களாலே நெசவும் வேலையுமெல்லாம் பண்ணப்படும்.

9. அன்றியும் இரண்டு கோமேதகக் கல் லுகளைத் தெரிந்துகொண்டு, அவைகளில் இஸ்றாயேல் புத்திரருடைய நாமதேயங்களை வெட்டி எழுதுவாய்.

10. (எப்படியென்றால்) அவர்கள் பிறந்த வரிசையின்படியே அவர்களுடைய பெயர் களில் ஆறு நாமங்கள் ஒரு கல்லிலும், மற்று முள்ள ஆறு நாமங்கள் மறு கல்லிலும் இருக்க வேண்டும்.

* 10-ம் வசனம். பெஞ்சமீன் கோத்திரத்தைக் கூட்டினால் பதின்முன்று கோத்திரங் கள் இருந்திருக்க, பன்னிரண்டு மாத்திரம் இவ்விடத்தில்குறிக்கப்பட்டது ஏதென்று கேட்கில், லேவி வம்சமானது கர்த்தருக்கு அபிஷேகம் பண்ணப்பட்டதாகையாலும், அந்த வம்சத்தார் குருத்துவ ஊழியத்தை எப்பொழுதும் செலுத்திக்கொண்டு வருவதாகையாலும், அதன் ஞாபகம் கர்த்தருடைய திரு கண்களுக்கு முன் ஓயாதே நிற்குமென்பதினாலே தான்.

11. இரத்தினங்களில் முத்திரை வெட்டும் வேலையைப்போல அந்த இரண்டு கற்களி லும் இஸ்றாயேல் புத்திரர்களின் நாமங் களை வெட்டி அவைகளைப் பொன் குவளை களில் பதிக்க வைப்பாய்.

12. அவைகளை இஸ்றாயேல் புத்திரருக்கு ஞாபகமாக ஏப்போத்தின் இருபக்கத்திலும் வைப்பாய்; ஆதலால் ஆரோன் கர்த்தரு டைய சமூகத்திலே தன்னுடைய இரு புஜங் களின்மேல் அவர்களுடைய நாமங்களை ஞாபகக் குறியாகச் சுமந்து வருவான்.

13. கொக்கிகளையும் பொன்னினால் செய்து,

14. ஒன்றுடனொன்று இணைக்கப்படும் இரண்டு சின்னஞ்சிறிய சங்கிலிகளைப் பசும்பொன்னினால் உண்டாக்கி, அவைகளை மேற்படி வளையங்களில் உட்படுத்தி வைப்பாய்.

15. நீதிவிதி ரேஷனல் (என்னும் மார் பதக்கத்தையும்) பல வர்ணமுள்ள சீலை வேலையாய்ச் செய்வாய். ஏப்போத் வேலைக் குச் சமானமாக நீலம், தூமிரம், இருசாயந் தீர்த்த இரத்தாம்பரம், திரித்த மெல்லிய சணப்பு நூல்களால் அதைச் செய்வாய்.

16. அது சதுர்கோணமாகவும், இரட்டை யாகவும் நீளத்திலும் அகலத்திலும் ஒரு சாண் அளவாகவுமிருக்கும்.

17. அதிலே நாலு வரிசை இரத்தினங்களை அமைப்பாய். முதலாம் வரிசையில் பதுமராகம், புஷ்பராகம், மரகதம் இந்த இரத் தினங்களும்,

18. இரண்டாம் வரிசையில் மாணிக்கம், நீலமணி, வச்சிரம் இந்த இரத்தினங்களும்,

19. மூன்றாம் பத்தியிலே கெம்பு, வைடூரியம், செவ்வந்திக்கல் இந்த இரத்தினங்களும்,

20. நான்காம் பத்தியிலே படிகபச்சை, கோமேதகம், சமுத்திர வண்ணக்கல் இந்த இரத்தினங்களும் இருக்கும். அவைகளெல் லாம் அந்தந்த வரிசையிலே பொன்னினாலே பதித்திருக்க வேண்டும்.

21. அவைகளிலும் இஸ்றாயேல் புத்திரரின் நாமதேயங்கள் ஒவ்வொரு கல்லிலே ஒவ் வொரு பெயர் வெட்டப்படும். இப்படி பன் னிரண்டு கோத்திரங்களின்படி பன்னிரண்டு நாமதேயங்களும் வெட்டப்பட்டிருக்கும்.

* 15-21-ம் வசனம். இஸ்றாயேல் புத்திரருடைய பெயர்கள் மார்பின் ஆபரணத்திலுள்ள இரத்தினங்களில் எழுதப்பட்டிருந்ததினால், ஆசாரியனானவர் திருவாசாரங்களை நிறை வேற்றும்போதெல்லாம், தாம் அவர்கள் விஷயத்திலே கர்த்தருக்கு முன்பாக உத்தரவாதியா யிருப்பதை யோசிக்கக்கடவான்.

22. மார்பதக்கத்திலே ஒன்றோடொன்று சேர்க்கப்பட்ட சங்கிலிகளையும் சுத்தப் பசும் பொன்னினால் செய்வாய்;

23. இரண்டு வளையங்களையும் (செய்து) மார்பதக்கத்தின் இரண்டு மேல்முனைகளில் வைத்து, 

24. பொன்னினால் செய்த இரண்டு சின்ன சங்கிலிகளையும், மார்பதக்கத்தின் பக்கங் களிலுள்ள வளையங்களிலே மாட்டி,

25. மேற்படி சங்கிலிகளின் நுனிகளையோ மார்பதக்கத்தை நோக்கும் ஏப்போத் உத் தரீயத்துக்கு இருபுறத்திலிருக்கும் இரண்டு கொக்கிகளிலே மாட்டுவாய்.

26. இன்னும் பொன்னினால் இரண்டு வளையங்களையும் பண்ணி அவைகளை ஏப் போத்தின் கீழ்ப்புறத்திற்கடுத்த மார்பதக் கத்து ஓரங்களிலே வைத்து,

27. பிறகு வேறிரண்டு பொன் வளையங் களையும் (உண்டுபண்ணி) ஏப்போத் முன் புறத்துங் கீழ்ப்பக்கத்திற்குத் தாழேயுள்ள இணைப்புக்கு எதிராக வைத்து மார்பதக்கமும் ஏப்போத் என்னும் உத்தரீயமும் அதனாலே இணைக்கக் கூடுமென்று பார்த்து,

28. மார்பதக்கமும் ஏப்போத்தும் ஒன் றாகி அதிலிருந்து இது நீங்காதபடிக்கு மார் பதக்கத்து வளையங்களோடு ஏப்போத் தின் வளையங்கள் இணையத்தக்கதாக அவ் விரண்டையும் இளநீல நாடாவினாலே கட்ட வேண்டும்.

29. ஆரோன் பரிசுத்த ஸ்தலத்தில் பிர வேசிக்கும் பொழுது இஸ்றாயேல் புத்திரர் களின் நாமதேயங்கள் கர்த்தருடைய சமுகத் திலே நித்திய ஞாபகக் குறியாயிருக்கத்தக்க தாக அவன் அந்த நாமங்களைத் தன் இரு தயத்தின் மீது நீதி விதி மார்ப்பதக்கத்தின் மேல் தரித்துக்கொள்வான்.

30. நீதி விதி மார்பதக்கத்திலே ஈஈவேத போதகம்டுடு ஈஈஎதார்த்த சத்தியம்டுடு இவ் விரண்டு பதங்களையும் பதிக்கக்கடவாய் ஆரோன் கர்த்தருடைய சமுகத்திலே பிர வேசிக்கும்போது அவைகளைத் தன் இருத யத்தின் மேல் தரிப்பான். அவன் இஸ்றா யேல் புத்திரரின் நீதி விதியை ஆண்டவரு டைய சந்நிதானத்தில் நித்தியமாய்த் தரித் துக்கொள்ளக் கடவான்.

31. ஏப்போத்தின் கீழ் அங்கியை முழு வதும் இளநீல நூலால் செய்வாய்;

32. தலை நுழையும் துவாரம் அதின் நடுப் புறத்திலிருக்கும்; அது சுளுவிலே கிழியாத படிக்கு மற்றுமுள்ள வஸ்திரங்களிலே ஓரத் தை மடக்கித் தைக்கிறதுபோல் அதிலேயும் நெய்யப்பட்ட ஒரு நாடா துவாரத்திற் குச் சுற்றிலும் தைத்து வைக்கவேண்டும்.

33. மேற்சொல்லிய அங்கியின் கீழ் ஓர மாய் இள நீலாம்பரம், தூமிரம், இருமுறை சாயந்தீர்ந்த இரத்தாம்பரம் இவைகளின் நூல்களால் மாதுளம் பழங்களையும், அவை களுக்கு இடைக்கிடையே மணிகளையும் அதின் ஓரங்களின் சுற்றிலும் தொங்கும்படி செய்து வைக்கவேண்டும்.

34. ஒரு பொன்மணியும் ஒரு மாதுளம் பழமும், மறுபடி ஒரு பொன் மணியும் ஒரு மாதுளம்பழமுமாக இருக்கவேண்டும்.

35. ஆரோன் தன் ஆசாரிய அலுவலைச் செய்யக் கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கும்போதும் வெளியே வரும்போதும் அவன் சாகாதபடிக்கு அதன் சத்தம் கேட்கத்தக்கதாகவே அதைத் தரித்துக் கொள்ளவேண்டும்.

36. சுத்தப் பசும் பொன்னினால் ஒரு தகட் டையும் உண்டுபண்ணி, கர்த்தரே பரிசுத்த முள்ளவர் என்கிற வார்த்தைகளை முத்திரை வெட்டும் வேலையாக வெட்டி,

37. அதை இளநீல நாடாவினால் பாகையின் முகப்பிலே கட்டுவாயாக.

38. அது ஆசாரியனுடைய நெற்றியின் மேல் காணப்பட வண்டும். அதனால் இஸ்றாயேல் புத்திரர் கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்துச் சமர்ப்பிக்கும் எல்லாக் காணிக்கைகளுக்கும் கொடைகளுக்கும் சம்பந்தமாகப் பண்ணி வரும் அக்கிரமங்களை ஆரோனே சுமந்து கொண்டிருப்பான். கர்த்தர் அவர்களுக்குப் பிரசன்னமாயிருக்கத்தக்கதாக அந்தப் பொன் தகடு எப்பொழுதும் அவன் நெற்றியின் மேல் இருக்க வேண்டும்.

39. மெல்லிய சணப்பு நூலால் நெருக்கமான அங்கியையும், தலைப்பணியாகிய பாகையையும் பண்ணுவாய். விசித்திர வேலையால் அலங்கரிக்கப்பட்ட கச்சையையும் உண்டுபண்ணுவாய்.

40. ஆரோனின் குமாரர்களுக்கும் மகி மையும் அலங்காரமும் இருக்கத்தக்கதாக மெல்லிய சணப்பு நூலால் செய்த அங்கியையும் தலைப்பணியாகப் பாகையையும் இடைக்கச்சையையும் முஸ்திப்புப் படுத்துவாய்.

41. ஆரோனும் அவனோடு கூட அவன் குமாரர்களும் நமக்கு ஆசாரிய ஊழியம் செய்யும் பொருட்டு நீ மேற்சொல்லிய வஸ்திராபரணங்களை எல்லாம் அவர்களுக்கு உடுத்தி அவர்களுடைய இரு கரங்களை அபிஷேகம் பண்ணிப் பரிசுத்தப்படுத்துவாய்.

42. அவர்களுடைய நிருவாணத்தை மூடும்படிக்கு இடுப்புத் தொடங்கி முழங்கால் மட்டும் வெட்கமானவை மறைக்கும் மெல்லிய சணலால் நெய்த சல்லடங்களையும் உண்டுபண்ணுவாய்.

43. ஆரோனும் அவன் குமாரர்களும் உடன்படிக்கைக் கூடாரத்திலே பிரவேசிக்கும் போதாவது, பரிசுத்த ஸ்தலத்திலே பணி விடையைச் செய்யப் பலிபீடத்தண்டைக் குப் போகும்போதாவது அவர்கள் அக்கிர மஞ் சுமந்தவர்களாய்ச் சாகாதபடிக்கு இந்த ஆடைகளைத் தரித்திருக்க வேண்டும். அது ஆரோனுக்கும் அவனுக்குப்பின் வரும் சந்ததியாருக்கும் நித்தியப் பிரமாணமாம்.