இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

யாத்திராகமம் - அதிகாரம் 27

தகனப் பலிகளை இடவேண்டிய இடமும் பாத்திரங்களும் - ஆசாரக் கூடாரத்தின் பிராகாரம், பாத்திரம், விளக்குகளும்.

1. ஐந்து முழ நீளமும் ஐந்து முழ அகலமுமான ஒரு சதுர பீடத்தைச் சேத்தீம் மரத்தினால் உண்டுபண்ணுவாய். அது மூன்று முழ உயரமாயிருக்க வேண்டும்.

2. நான்கு மூலைகளிலும் நான்கு கொம்புகள் பீடத்திலே நின்று புறப்படும்; அதை வெண்கலத் தகட்டால் மூடுவாய்.

3. பீடத்தில் உபயோகித்துக் கொள்ளும்படி (பின்வரும்) ஏனங்களை முஸ்திப்புச் செய்யவேண்டும். (அதாவது) சாம்பலை எடுக்கத்தக்க சட்டிகளையும், நெருப்பைத் தூண்டும் குறடுகளையும், முள்ளுகளையும், தீச்சட்டிகளையும் உண்டுபண்ணுவாய். அவைகள் வெண்கலத்தால் செய்யப்படும்.

4. வலைப்பின்னலைப் போன்ற ஒரு வெண்கலச் சல்லடையை உண்டுபண்ணி, அதன் நாலு மூலைகளிலும் நாலு வெண்கல வளையங்களை ஏற்படுத்தி,

5. அதைத் தீக்கரையின் கீழே வைப்பாய். அந்தச் சல்லடையோ பலிபீடத்தின் பாதி உயரமட்டும் எட்டும்.

6. பலிபீடத்திற்குச் சேத்தீம் மரத்தால் இரண்டு தண்டுகளையும்பண்ணி, அவை களை வெண்கலத் தகடுகளால் மூடுவாய்.

7. பலிபீடத்தைச் சுமக்கத் தக்கதாக அந்தத் தண்டுகள் அதன் இரண்டுபக்கங்களிலுள்ள வளையங்களிலே பாய்ச்சப்பட்டிருக்க வேண்டும்.

8. பலிபீடம் கனமாய்ச் செய்யாமல் உள் வெளிவிட்டதாய் மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்டபடி அதனைப் பண்ணக் கடவாய்.

9. ஆசாரக் கூடாரத்திற்கு ஒரு பிராகாரத்தையும் உண்டுபண்ணுவாய். தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்துக்குத் திரித்த மெல்லிய சணப்பு நூலால் செய்யப்பட்ட தொங்கு திரைகள் இருக்கவேண்டும். பிராகாரத்தின் ஒரு பக்கமும் நூறுமுழ நீள முள்ளதாகும்.

10. அன்றியும் வெண்கலத் தூண்கள் இருபது செய்வாய். அவைகளுக்கு இருபது வெ ண்கலப் பாதங்களும் இருக்கும். தூண்களின் போதிகைகளும், போதிகைகளின் பூண்க ளும் வெள்ளியினாலே செய்யவேண்டும்.

11. இவ்வண்ணமே (பிராகாரத்தின்) வட பக்கத்திலும் நூறுமுழ நீளமான தொங்கு திரைகள் இருக்கவேண்டும். அவைகளுக்கு இருபது தூண்களும் இருபது பாதங்களும் வெண்கலத்தினாலேயும், இருபது போதிகை யும் அவைகளிலுள்ள பூண்களும் வெள்ளியி னாலேயும் உண்டாக்குவாய்.

12. மேற்றிசையை நோக்கிய பிராகாரத்தின் பக்கத்திலோ ஐம்பது முழ நீளமான தொங்கு திரைகளின் அந்தரத்திலே பத்துத் தூண்களும் பத்துப் பாதங்களும் இருக்க வேண்டியது.

13. கீழ்த்திசையை நோக்கிய பிராகாரத்தின் அந்தரம் ஐம்பது முழ நீளமிருக்கும்.

14. இவைகளுக்குள் ஒரு பக்கத்திலே பதினைந்து முழமுள்ள தொங்கு திரையும், மூன்று தூண்களும், மூன்று பாதங்களும் அமைக்கப் படும்.

15. மறுபக்கத்திலே பதினைந்து முழமுள்ள தொங்கு திரையும், மூன்று தூண்களும், மூன்று பாதங்களுமிருக்கும்.

16. பிராகாரத்து வாசலுக்கு இருபது முழமுள்ள தொங்கு திரை ஒன்று செய் யப்படும். அது இள நீலாம்பரம், தூமிரம். இருமுறை தோய்த்த இரத்தாம்பரம், திரி த்த மெல்லிய சணப்பு இவைகளின் நூல்க ளால் செய்து சித்திரத் தையல் வேலையால் ஜோடிக்கப்பட்டதாயிருக்குமன்றி, அதுக்கு நாலு தூண்களும் நாலு பாதங்களும் அமைக் கப்படும்.

17. பிராகாரத்துக்குச் சுற்றிலுமுள்ள தூண் களெல்லாம் வெள்ளித் தகட்டினாலும் மூடப்படும். ஆனால் அவைகளின் போதிகை கள் வெள்ளியும், பாதங்கள் வெண்கலமுமா யிருக்கும்.

18. பிராகாரம் நீளத்திலே நூறுமுழ மும், அகலத்திலே ஐம்பது முழமும், உய ரத்திலே ஐந்து முழமுமாயிருக்குமன்றி, அதின் தொங்கு திரைகள் திரித்த மெல்லிய சணப்பு நூலினாலே செய்யப்படும்.

19. ஆசாரக் கூடாரத்தின் சமஸ்த பணி விடைகளுக்கும் சடங்குகளுக்கும் உபயோக மான எல்லாப் பணிமுட்டுகளையும் அதி லும் பிராகாரத்திலும் இருக்கவேண்டிய முளைகளையும் வெண்கலத்தால் உண்டாக்கு வாய்.

20. விளக்கு எப்பொழுதும் எரிந்து கொண் டிருக்கும்படி உலக்கையால் இடித்துப் பிழிந்த அதிதெளிவான ஒலீவெண்ணையை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்றா யேல் புத்திரருக்குக் கட்டளையிடுவாய்.

* 20-ம் வசனம். கிளைவிளக்கானது உலகமெங்கும் சுவிசேஷத்தைப் போதித்து அஞ்ஞானவிருளைப் போக்கி ஞான ஒளியைப் பரம்பச் செய்த அப்போஸ்தலர்களுக்கும் திருச்சபைக்கும் அடையாளமாயிருந்ததுபோலும். கர்த்தர் அதைப் பசும் பொன்னினால் உண்டாக்கக் கற்பித்து அதைக் கொளுத்த, அவிக்க, வைக்க, எடுக்கத், துடைக்க அபிஷேகம் செய்யப்பட்ட குருக்களுக்கு மாத்திரம் அதிகாரம் கொடுத்தார். (யாத். 25:31; லேவியர். 24:2,3).

21. சாட்சியத்தின் ஆசாரக் கூடாரத்தி லே சாட்சி சந்நிதிக்கு முன் வைக்கப்பட்ட திரைச் சீலைக்கு வெளிப்புறமாக ஆரோனும் அவன் குமாரர்களும் சாயங்காலம் துவக்கி விடியற்கால மட்டும் கர்த்தருடைய சமு கத்திலே அவ்விளக்கை எரியவைக்கக்கட வார்கள். மேற்படி முறைமை இஸ்றாயேல் புத்திரர்களுக்குள்ளே தலைமுறை தலை முறையாக நித்திய அர்ச்சனையாய் அனுசரிக் கப்படும்.