இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

யாத்திராகமம் - அதிகாரம் 26

ஆசாரக் கூடாரத்தின் மூடுதிரைகளும் - வெள்ளாட்டு மயிர்த் திரைகளும் - நிமிர்ந்து நிற்கும் பலகைகளும், அவைகளின் கவ்வு கால்களும், தாழ்ப்பாள்களும் - பெட்டகத்துக்கு மூடியும் - வாசற்படிக்குத் திரையும் செய்யக் கட்டளையிட்டது.

1. ஆசாரக் கூடாரத்தை உண்டுபண்ண வேண்டிய மாதிரி என்னவென்றால், முறுக்கிழையான மெல்லிய சணப்பு நூல்களாலும், நீலாம்பர, இரத்தாம்பர, இருவிசை சாயம்பிடித்த பீதாம்பர நூல்களாலும் நெய்யப்பட்ட புடவையைக்கொண்டு பத்து மூடுதிரைகளையும் செய்வித்து, அவைகள் சித்திர விசித்திரத் தையல்வேலையால் அலங் கரிக்கப்படும்.

2. ஒவ்வொரு மூடுதிரையும் இருபத்தெட்டு முழ நீளமும் நாலு முழ அகலமுமாயிருக்கும். மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாயிருக்க வேண்டும்.

3. ஐந்து திரைகள் ஒன்றோடொன்று இணைக்கப்படும், மற்ற ஐந்தும் ஒன்றோடொன்று அதே விதமாய் இணைக்கப்படும்.

* 3-ம் வசனம். கர்த்தர் தம்முடைய ஆலயங்களில் செய்ய வேண்டிய வேலை, ஆராதனை சடங்கு முதலியன இதுவோ அதுவோவென்று மனிதர்கள் தங்களிஷ்டப்படி செய்ய வொட்டாமல் அவைகள் எல்லாவற்றையும் அவைகளுக்கடுத்த சில்லறை விஷயங்களையும் தாமே சுட்டிக்காட்டச் சித்தமானார். அதனாலே நம்முடைய கோவில்களில் வழங்கி வரும் எவ்வித பூசைப் பிரார்த்தனை திரு முறைமை முதலிய திருச்சடங்குகளைக் குறித்துக் கிறீஸ்தவர்கள் மகா பக்தி வணக்கமாய் இருக்க வேண்டுமென்று கற்றுக்கொள்ளக் கடவார்கள்.

4. மூடுதிரைகள் ஒன்றோடொன்று இணையும்படி அவைகளின் மேல்பக்கத்திலும் கடையோரங்களிலும் இளநீல நூலால் காதுகளை உண்டுபண்ணுவாய்.

5. ஒவ்வொரு மூடுதிரையின் இருபுறத்திலும் ஐம்பது காதுகள் இருக்கவேண்டும். அதுகள் ஒன்றோடொன்று இணையும்படி காதோடு காது ஒன்றுக்கொன்று நேர்நேராய் இருக்கவேண்டும்.

6. அன்றியும் ஆசாரக் கூடாரம் ஒரே வாசஸ்தலமாகும்படிக்கு ஐம்பது பொன் கொக்கிகளையும் பண்ணி மூடுதிரைகளை ஒன்றுடனொன்று அந்தக் கொக்கிகளாலே இணைக்கப்படும்.

7. ஆசாரக் கூடாரத்தின் மேற்புறத்தை மூடுவதற்காக வெள்ளாட்டு மயிரினால் பதினொரு கம்பளிகளையும் செய்வாய்.

8. ஒவ்வொரு கம்பளியின் நீளம் முப்பது முழமும், அகலம் நான்கு முழமுமிருக்கும்; எல்லாக் கம்பளிகளும் ஒரே அளவாயிருக்கும்.

9. ஐந்து கம்பளிகளை ஒன்றாகவும் தனித்தனியே சேர்ப்பாய். ஆறு கம்பளிகளை ஒன்றோடொன்றாகச் சேர்த்து, ஆறாவது கம்பளியை மேற்புறத்தின் முகப்புக்கு முன் மடித்துப்போடும்படியாய்த் தைக்கக்கடவாய்.

10. இணைக்கப்பட்ட ஒரு கம்பளி மற்றொரு கம்பளியோடு சேரத்தக்கதாக ஒவ்வொரு கம்பளியின் ஓரத்திலே ஐம்பது காதுகளை அமைத்துவிடுவாயானால் அந்தக் கம்பளிகள் ஒன்றுடன் ஒன்று சேரப் பண்ணக் கூடும்.

11. ஐம்பது வெண்கலக் கொக்கிகளையும் செய்வாய். அந்தக் கொக்கிகளிலே கம்பளிகளின் காதுகளை ஒன்றுடனொன்று மாட்டி இணைக்கப்பண்ணினால் கம்பளிகளெல்லாம் ஒரே கம்பளியாகச் சேரும்.

12. மேற்புறத்தை மூடுவதற்கு முஸ்திப்பு செய்யப்படும் கம்பளிகளிலே ஒன்று மிச்சமா யிருக்குமே, அதன் ஒரு பாதிப் பாகத்தால் வா சஸ்தலத்தின் பின்புறத்தில் தொங்கவிடுவாய்.

13. (கூடாரத்தின் மேற்புறத்தை முடுங் கம்பளிகளின் நீளத்திலே) ஒரு முழம் அளவு இந்தண்டையிலும் ஒரு முழம் அளவு அந் தண்டையிலும் தொங்கவிடுவதன்றி நீளத்தி லே மீதியான கம்பளி வாசஸ்தலத்தின் இரு பாரிசங்களையும் மூடும்.

14. சிவப்புத்தீர்ந்த செம்மறிக்கடாத் தோல்களால் கூடாரத்துக்கு மற்றொரு மூடி யையும் அதின்மேல் வைப்பதற்கு ஊதா தீர்ந்த தோல்களால் வேறொரு மூடியை யும் உண்டுபண்ணுவாய்.

15. ஆசாரக் கூடாரத்தில் நட்டமே நிற் கும் பலகைகளையும் சேத்தீம் மரங்களாற் செய்வாய்.

16. அவைகள் ஒவ்வொன்றும் பத்து முழ உயரமும் ஒன்றரை முழ அகலமுமாயிருக்க வேண்டும்.

17. ஒவ்வொரு பலகை அடுத்தப் பலகை யோடு இசைந்திருக்கும்படி பலகைகளின் ஓரங்களிலே இரண்டு காடியும் கழுத்தும் பண்ணிவைப்பாய். பலகைகளெல்லாம் அவ் விதமே முஸ்திப்பு செய்யப்படும்.

18. அந்தப் பலகைகளில் இருபது பல கை தெற்கே தென் திசைக்கு எதிரே நிற்கும்.

19. அவைகளின் கீழே வைக்கும்படி நாற் பது வெள்ளிப் பாதங்களை உண்டுபண்ணு வாய். இருபுறத்துக் கோணத்தின் கீழே ஒவ்வொரு பலகைக்கு இரண்டு பாதமிருக் கும்படி செய்வாய்.

20. ஆசாரக் கூடாரத்தின் மறுபக்கமா கிய வடபுறத்திலே இருபது பலகைகளும் இருக்கவேண்டும்.

21. அவைகளின் கீழ் வைப்பதற்கு நாற் பது வெள்ளிப் பாதங்கள் முஸ்திப்பு செய்யப் படும். அதாவது: ஒவ்வொரு பலகைக்கும் கீழே இரண்டு பாதமிருக்கும்.

22. ஆசாரக் கூடாரத்தின் மேற்றிசைக்கு ஆறு பலகைகளையும்,

23. ஆசாரக் கூடாரத்தின் பின் பக்கத் துக் கோணங்களிலே இரண்டு பலகைகளை யும் உண்டுபண்ணுவாய்.

24. அவைகளைக் கீழிருந்து மேலே மட்டும் ஒரே கூட்டு மூட்டினாலே சேர்த்து வைக்க வேண்டும். பின்னும் கோணங்களிலே வைக் கவேண்டிய இரண்டு பலகைகளிலும் அவ்விதமே செய்யவேண்டும்.

25. அந்தப்படி எட்டுப் பலகைகளிருக் கும். ஒவ்வொரு பலகைக்கும் கீழ் இரண்டி ரண்டு பாதங்கள் இருப்பதினால், மொத்தம் வெள்ளிப் பாதங்கள் பதினாறுமிருக்கும்.

26. வாசஸ்தலத்தில் ஒரு பக்கத்துப் பல கைகளை ஸ்திரப்படுத்துகிறதற்காக சேத்தீம் மரத்தால் ஐந்து தாழ்ப்பாள்களையும்,

27. மறுபக்கத்தில் வேறு ஐந்து தாழ்ப் பாள்களையும் வாசஸ்தலத்தின் மேற்றிசை க்கு இன்னும் ஐந்து தாழ்ப்பாள்களையும் உண்டுபண்ணுவாய்.

28. அவைகள் பலகைகளின் மையத்தி லே குறுக்கே வைக்கப்பட்டு ஒரு முனை யிலிருந்து மறுமுனைமட்டும் ஊடுருவப் பாய்ச்சத் தக்கவைகளாய் இருக்க வேண்டும்.

29. அந்தப் பலகைகளையும் பொன் தகட்டால் மூடவேண்டியதன்றி எந்தத் தாழ்ப்பாள்களினாலே பலகையெல்லாம் ஸ்திரப் படுத்தப்பட்டிருக்குமோ அந்தத் தாழ்ப்பாள் பாய்ச்சத்தக்கதான வளையங்களையும் பொன்னினாலே உண்டுபண்ணுவாய். தாழ்ப்பாள்களைப் பொன்தகட்டாலே மூட வேண்டியது.

30. இவ்விதமாய் மலையின்மேல் உனக்குக் காண்பிக்கப்பட்ட பாவனைப்படி ஆசாரக் கூடாரத்தை நிருவிப்பாயாக.

31. நீலாம்பர நூல், தூமிர நூல், இரட்டைச் சாயமுள்ள இரத்தாம்பர நூல், திரித்த மெல்லிய சணப்பு நூல், இந்த நூற்களை நெய்து இவற்றால் ஒரு திரைச் சீலையையும் உண்டுபண்ணுவாய். அதைச் சித்திர விசித்திரத் தையல் வேலைகளால் அலங்கரித்திருக்க வேண்டும்.

32. சேத்தீம் மரத்தால் செய்து பொன் தகட்டால் மூடப்பட்ட நாலு தூண்களின் முன்புறத்திலே தொங்கவைப்பாய். அத்தூண் களுக்கோ நாலு பொன் போதிகைகளும் நாலு வெள்ளிப் பாதங்களுமிருக்கும்.

33. அந்தத் திரைச்சீலை மோதிரங்களில் கோத்துக் கட்டிய பின்பு உடன்படிக்கைப் பெட்டகத்தை அதற்குள்ளே மறைத்து வைப் பாய். அந்தத் திரைச் சீலையே பரிசுத்த ஸ்த லத்திற்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் நடுப்புறமே இருக்கும்.

34. பிறகு மகா பரிசுத்த ஸ்தலத்திலே உடன்படிக்கைப் பெட்டகத்தின் மீதில் கிருபாசனத்தை ஸ்தாபித்து வைப்பாய். 

35. திரைச்சீலைக்குப் புறம்பாக மேசை யையும் மேசைக் கெதிராக ஆசாரக் கூடாரத் துத் தென்புறத்திலே குத்து விளக்கையும் வைக்கக் கடவாய். மேசையோ வடபுறத்தி லே வைக்கப்படும்.

36. அன்றியும் ஆசாரக் கூடாரப் பிரவே சத்திலே நீலாம்பர நூல், தூமிர நூல், இரட்டைச் சாயந் தோய்த்த இரத்தாம்பர நூல், மெல்லிய சணப்பு நூல்: இவைகளை நெய்து சித்திரத் தையல் வேலையால் சிங்கா ரித்த தெந்தோரியமென்னும் தொங்கு திரை யையும் உண்டுபண்ணுவாயாக.

37. சேத்தீம் மரங்களால் செய்யப்பட்ட ஜந்து தூண்களையும் பொன்னினாலே மூடு வாய், அவைகளின் முன்பாக மேற்படி தொங்கு திரை தொங்கவைக்கப்படும். அத் தூண்களுக்கோ போதிகைப் பொன்னாலும் பாதங்கள் வெள்ளியாலும் செய்யப்படும்.