இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

யாத்திராகமம் - அதிகாரம் 25

இஸ்றாயேலியர் அர்ச். கூடாரத்தை நிருமிப்பதற்கு இன்னின்னதைத் தர வேண்டுமென்பதும் - வாக்குத்தத்தத்தின் பெட்டியின் உருவும்.

1. ஆண்டவர் மோயீசனை நோக்கித் திருவாக்கருளிச் சொன்னதாவது:

2. இஸ்றாயேல் புத்திரரை நமக்குப் புது பலனின் காணிக்கையைக் கொடுக்கச் சொல்லு. மனப் பூர்த்தியாய் எவன் எதைக் கொண்டுவருவானோ அவனிடத்தில் அதை நமக்காக வாங்கிக்கொள்.

3 . நீங்கள் வாங்கிக்கொள்ள வேண்டியது எவையென்றால்: பொன், வெள்ளி, வெண்கலம்,

4. இளநீல நூல், தூமிர நூல், இருமுறை சாயந்தோய்த்த இரத்தாம்பர நூல், மெல்லிய பஞ்சு நூல், வெள்ளாட்டு ரோமம்,

5. செகப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத் தோல், ஊதாவாக்கப்பட்ட தோல், சேத்தீம் மரம்,

6. விளக்குகள், அவைகளைச் சோடிக்க எண்ணெய் தைலத்துக்கேற்ற பரிமளங்களும், தூபத்துக்குச் சுகந்த வாசனாதி திரவியங்களும்,

7. எப்போத்தென்னும் உத்தரியத்திலும் இரசியோனாலென்னும் மார்பதக்கத்திலும் பதித்துவைக்கும் கோமேதகக் கற்களும் இரத்தினங்களும் ஆகிய இவைகளேயாம்.

8. அவர்களின் நடுவிலே நாம் வாசம் பண்ண நமக்கொரு ஆசாரக்கூடாரத்தை நிருமிக்கக் கடவார்கள்.

9. நாம் உனக்குக் காண்பிக்கும் ஆசாரக் கூடாரத்தின் மாதிரியின்படி அதை நிருமிப்பார்கள்; மேலும் நாம் உனக்குக் காட்டும் எல்லாத் தட்டுமுட்டுப் பாத்திரங்களின் மாதிரியின்படி தேவாராதனைக்கேற்ற உடமைகளை முஸ்திப்புச் செய்வார்கள். எப்படிச் செய்வதெனில்,

10. சேத்தீம் மரங்களால் ஒரு பெட்டகத்தைப் பண்ணிக்கொள்ளுங்கள்; அதற்கு நீளம் இரண்டரை முழமும், அகலம் ஒன்றரை முழமும், உயரம் ஒன்றரை முழமுமாயிருக்கும்;

* 10-ம் வசனம். ஓர் அரசன் பிரஜைகள் நடுவேயுள்ள தன் கெடிஸ்தலத்திலே வாசம்பண்ணுமாப்போல, சர்வேசுரன் இஸ்றாயேல் புத்திரராகிய தமது பிரஜை நடுவில் விசேஷ வாசம் பண்ணுவதற்கு வாசஸ்தலமாகிய உடன்படிக்கைப் பெட்டகத்தைக் கட்டக் கற்பித்தார். கட்டின பிற்பாடு அவர் அப்பெட்டகத்தின் கிருபாசனத்திலே நின்று தம்முடைய திருச் சித்தத்தையும் அறிவித்துக் குருக்களுடைய கேள்விகளுக்கு விடையையும் சொல்லி வந்தார். கர்த்தர் எழுதி மோயீசன் கையிலே தந்தருளிய பத்துக் கற்பனைகளின் கற்பலகைகள் அந்தப் பெட்டகத்திலே வைக்கப்பட்டிருந்தன. கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்த கோயில்களில் ஒரு பெட்டகமுண்டு. அது பெரிய பீடத்தின் மீது ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. அதிலேதான் சுவாமி வீற்றிருந்து மனிதர்களுக்குத் துணையாகவும், ஆறுதலாகவும், குருவாகவும் மோட்ச வழிகாட்டியாகவும் வியாபித்திருக்கிறார். ஆகையினால் நமது தேவநற்கருணைப் பெட்டியைச் சில புத்தகங்களில் உடன்படிக்கைப் பெட்டகமென்றும் தேவவிடை ஸ்தானம் என்றும், தேவகாட்சிப்பெட்டியென்றும் கர்த்தருடைய சமூகமென்றும் அழைக்கப்பட்டதை வாசிப்பதால் பழைய ஏற்பாட்டுக்கும் புதிய ஏற்பாட்டுக்குள்ள உத்தமமான பொருத்தத்தை உணரத் தகுதியாமே.

11. அதை உள்ளும் புறமும் பசும்பொன்னினால் மூடி, அதன்மேல் சுற்றிலுமிலங்கும் சொர்ண முடியைப்போலச் செய்துவைப் பாயாக.

12. நாலு பொன் வளையங்களை வார்ப்பித்துப் பெட்டகத்தின் நாலு மூலைகளிலும் போடுவாய். ஒருபுறத்தில் இரண்டு வளையங்களும், மறுபுறத்தில் இரண்டு வளையங்களும் இருக்கும்படி வைக்கவும்.

13. சேத்தீம் மரங்களால் தண்டுகளைச் செய்து தங்கத்தால் மூடி,

14. அந்தத் தண்டுகளால் பெட்டகம் சுமக்கும்படி அதின் புறங்களிலிருக்கிற வளையங்களிலே பாய்ச்சக் கடவாய்.

15. தண்டுகள் எப்போதும் வளையங்களி- லிருக்கவேண்டியதன்றி ஒருக்காலும் அவை கள் அதுகளினின்று கழற்றப்படாது.

16. நாம் உனக்கு அளிக்கப்போகிற சா ட்சிப் பிரமாணத்தைப் பெட்டகத்திலே வைப் பாய்.

17. சுத்தப் பசும்பொன்னினால் கிருபாச னத்தையும் செய்வாய், அதின் நீளம் இரண் டரை முழமும், அகலம் ஒன்றரை முழமுமாயிருக்க வேண்டியது.

18. தகடாய் அடிக்கப்பட்ட பொன்னைக் கொண்டு இரண்டு கெருபிம் செய்து மூல ஸ்தானத்தின் இருபுறத்திலும் வைக்கக் கடவாய்.

19. ஒரு கெருபிம் ஒரு பக்கத்திலும் மற் றொரு கெருபிம் மறுபக்கத்திலுமிருக்கும்.

20. அந்தக் கெருபிம்கள் தங்களுடைய இறக்கைகளை உயர விரித்துக் கிருபாசனத்தின் இருபுறங்களையும், தேவன் பேசும் மூல ஸ்தானத்தையும் மூடுகிறவைகளும், ஒன்றுக் கொன்று எதிர்முகமுள்ளவைகளுமாய் இருப்பதாக. மேலும் கெருபிம்களின் முகங் கள் கிருபாசனத்தை நோக்குகிறவைகளாய் இருக்கக்கடவது.

21. நாம் உனக்கு அளிக்கவிருக்கிற சாட் சிப் பிரமாணத்தை அதிலே வைப்பாய்.

22. அங்கிருந்துதானே நாம் கட்டளைக ளையிடுவோம். கிருபாசனத்தின் மீதிலும் சாட்சியப் பெட்டகத்தின்மேல் நிற்கும் இரு கெருபிம் நடுவிலும் நாம் இஸ்றாயேல் புத்திரரை வேண்டி நமது கற்பனைகளை யெல்லாம் உன்னோடு சொல்லுவோம்.

23. அன்றியும் சேத்தீம் மரத்தினாலே ஒரு மேசையையும் பண்ணுவாய்; அது இரண்டு முழ நீளமும், ஒரு முழ அகலமும் ஒன்றரை முழ உயரமுமாயிருக்க வேண்டும்.

24. அதைச் சுத்தப் பசும் பொன்னினால் மூடி அதற்குச் சுற்றிலும் பொன்னினால் திரணையை உண்டாக்கி,

25. அதற்கு நாலு விரற்கடையான ஒரு சட்டத்தை வெட்டுவேலையாகச் செய்து, அதற்குமேல் பொன்னினால் மற்றொரு பொன் திரணையும் அமைத்து,

26. நாலு பொன் வளையங்களையும் பண்ணி, அவற்றை அம்மேசையின் நாலு மூலைகளிலே ஒவ்வொரு காலுக்கு ஒன்று சேர்ப்பாய்.

27. மேசை சுமக்கத் தக்கதாக மேற்சொல்லிய சட்டத்துக்குக் கீழே அந்தப் பொன் வளையங்கள் தண்டுகளுக்கிடங்களாக இருக்கும்.

28. மேசையைச் சுமப்பதற்குரிய அந்தந் தத் தண்டுகளையும் சேத்தீம் மரங்களாற் செய்து பொன்னினால் மூடுவாய். 

29. பான பலிவேத்தியங்களுக்குரிய தட்டுகளையும் குப்பிக்கரகங்களையும் தூபக்கல சங்களையும் கிண்ணங்களையும் பத்துமாற்றுப் பொன்னினாலே பண்ணக்கடவாய்.

30. நித்தியமும் காணிக்கை அப்பங்களை நமது சமூகத்திலே (அம்) மேசையின்மீது வைப்பாய்.

31. மீளவும் பசும் பொன் தகட்டினாலே ஒரு குத்துவிளக்கையும் உண்டுபண்ணுவாய். அதனிலிருந்து பிதுங்கக் காணப்படும் தண்டுங் கிளைகளும் மொக்குகளும், குமிழ்களும் லீலிப் புஷ்பங்களும் அப்படியே அடிப்பு வேலையாகச் செய்யப்படும்.

32. ஒரு பக்கத்தில் மூன்றும் மற்றொரு பக்கத்தில் மூன்றும் ஆக ஆறு கிளைகள் (அதின்) பக்கங்களினின்று புறப்படும்

33. ஒரு கிளையிலே வாதுமைக் கொட்டையைப் போன்ற மூன்று மொக்குகளும், ஒரு குமிழும், ஒரு லீலிப் புஷ்பமும் இருக்கும். மற்றுமுள்ள கிளையிலும் அவ்விதமே இருக்கவேண்டியது. விளக்குத் தண்டிலிருந்து புறப்படும் ஆறு கிளைகளும் ஒரே மாதிரிகையாகச் செய்யப்படும்.

34. குத்துவிளக்கிலோ வென்றால் வாதுமைக் கொட்டையைப் போன்ற நாலு மொக்குகளும், இவைகளின் ஒவ்வொன்றில் ஒவ்வொரு குமிழும், லீலிப் புஷ்பமுமிருக்கும்.

35. இரண்டு கிளைகளின் கீழே ஒவ்வொன்றிலே மும்மூன்று குமிழ்கள்: ஆக ஆறு குமிழ்களும் ஒரே தண்டிலிருந்து பிதுங்கும்.

36. ஆகையால் குமிழ்களும் கிளைகளும் பத்துமாற்றுத் தங்கத்தின் தகட்டினாலே செய்யப்பட்டுக் குத்துவிளக்கில் நின்று வெளியே வரும்.

37. ஏழு அகல்களையும் செய்து எதிர்க் கெதிராய் எரியும்படி குத்துவிளக்கின்மேல் வைப்பாய்.

38. மேலும் கத்திரிகளும் திரிச்சாம்பலை வைக்கத்தக்க கலசங்களும் அதிசுத்தப் பொன்னினாலே செய்யப்பட வேண்டும்.

39. அதையும் அதற்குரிய பணிமுட்டுக்கள் யாவையும் ஒரு தாலந்தென்னும் படிக்கட்டு நிறைப் பொன்னினால் செய்யப்பட வேண்டியதாகும்.

40. மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரிப்படியே செய்யக் கவனமாயிருப்பாயாக.