இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

யாத்திராகமம் - அதிகாரம் 24

மோயீசன் மலையிலே வரவழைக்கப் பட்டதும் - சுவாமியோடு இஸ்றாயேல் உடன்படிக்கையும் - மோயீசன் 40 நாள் இருந்ததும்.

1. பின்னும் கர்த்தர் மோயீசனை நோக்கி: நீயும் ஆரோனும், நதாபும், அபியூம், இஸ்றா யேலியர் பெரியவர்களின் எழுபது பேர்க ளும் ஆண்டவரிடத்தில் ஏறிவந்து தூரத்தி லிருந்து ஆராதனை செய்யுங்கள்.

2. மோயீசன் மாத்திரங் கர்த்தருக்குச் சமீபித்து வருவான்; மற்றவர்கள் கிட்ட வரவும் ஜனங்கள் அவனோடு ஏறிவரவும் வேண்டாமென்றார்.

3. மோயீசன் வந்து கர்த்தருடைய எல்லா வாக்கியங்களையும் நீதிச் சட்டங்களையும் விவரித்துச் சொல்லக்கேட்டு, ஜனங்கள் எல்லாரும் ஆண்டவர் திருவுளம்பற்றின எல்லா வாக்கியங்களின்படி நடப்போம் என்று ஒரே குரலாய்ப் பிரதியுத்தரஞ் சொன்னார்கள்.

4. மோயீசனோவென்றால், கர்த்தர் சொல்லிய வாக்கியங்களையெல்லாம் எழுதி வைத்துப் பிறகு காலையிலெழுந்து மலையடிவாரத்தில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, இஸ்றாயேல் பன்னிரண்டு கோத்திரங்களுடைய இலக்கத்தின்படி பன்னிரண்டு தூண்களை நிறுத்தினான்.

5. இஸ்றாயேல் புத்திரர்களில் வாலிபர்களை அனுப்பினான்; அவர்கள் ஆண்டவருக்குச் சர்வாங்க தகனப்பலிகளையும் சமாதான பலிகளாகக் கன்றுக்குட்டிகளையும் பலியிட் டார்கள்.

6. அப்போது மோயீசன் இரத்தத்தில் பேர்பாதியை எடுத்துப் பாத்திரங்களில் வார்த்துப் பேர்பாதியைப் பலிபீடத்தின் மேல் ஊற்றிய 

7. பின்பு, உடன்படிக்கையின் புத்தகத் தை எடுத்து ஜனங்கள் கேட்க வாசித்தான். அவர்கள்: ஆண்டவர் சொன்னபடியெல் லாம் செய்து கீழ்ப்படிந்து நடப்போமென் றார்கள்.

8. அப்பொழுது மோயீசன் எடுத்து வைத் துக் கொண்டிருந்த இரத்தத்தை ஜனங்க ளின்மேல் தெளித்து: இந்தச் சகல வார்த் தைகளின்படி கர்த்தர் உங்களுடன் செய்த ருளிய உடன்படிக்கையின் இரத்தம் இது வே என்று கூறினான்.

* 7, 8-ம் வசனம். ஜனங்கள் மனதறியச் சம்மதங் கொடுத்த பின்புதானே தேவ உடன்படிக்கை உறுதியானது. அது எப்படி உறுதியானதெனில் இரத்தத்தைக் கொண்டேயாம். ஏனென்றால் இரத்தத்தாலன்றி எந்த உடன்படிக்கையும் உறுதியாகிறதில்லை. ஆனதுபற்றி மோயீன் உடன்படிக்கைப் புத்தகத்தை வாசித்தார். பின்பு சுவாமிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட பலி இரத்தத்தைச் ஜனங்களின் மேல் தெளித்தார். அந்த இரத்தத்திற்குச் சொந்த பலன் ஒன்று மில்லை. ஆனால் அது திவ்ய இரட்சகருடைய திரு இரத்தத்தின் பாவனையாயிருந்ததினாலே பலனுள்ளதாயிருந்தது. ஆகையால்: கர்த்தர் உங்களோடு செய்த உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என, மோயீசன் இஸ்றாயேல் புத்திரருக்குச் சொன்னதுபோல சேசுநாதர் சுவாமியும் தேவ நற்கருணையை ஸ்தாபித்தபோது தமது திருச்சபையை நோக்கி: அநேகருக்காகச் சிந்தப் படும் புதிய ஏற்பாட்டின் இரத்தமிதுவே, (மாற். 14:24) என்று திருவுளம்பற்றினார். இப்புதிய ஏற்பாட்டின் உடன்படிக்கை உறுதியாகும்பொருட்டு அவர் சிலுவை மரத்திலே தமது இரத்தமெல்லாங் கடைசித் துளி பரியந்தம் சிந்தினாரன்றி, அதன் ஞாபகமும் உலகம் முடியும் மட்டும் கிறீஸ்தவர்களிடத்தில் ஒழியாதபடிக்குத் தினந்தோறும் சத்தியவேதக் கோவில்களிலே அந்தத் திவ்விய இரத்தத்தையும் திருச் சரீரத்தையும் குருக்கள் மூலமாய்த் தம் பிதாவுக்கு ஒப்புக் கொடுக்கிறார். அந்தத் திரு இரத்தமோ சர்வலோகங்களையும் மீட்டு இரட்சிப்பதற்குப் போதுமானதாகையால், இப்போது பலிப்பிராணிகளுடைய இரத்தம் அவசரமும் உபயோகமுமற்றது; பழைய ஏற்பாடானது புதிய ஏற்பாட்டினால் தன் பெலனெல்லாம் பெற்றதுமல்லாமல் புதிய ஏற்பாடு உண்டாகவே, பழைய ஏற்பாடு ஒழிந்து போய்விட்டது.

9. பின்பு மோயீசனும், ஆரோனும், நதாபும், அபியூம் இஸ்றாயேலின் மூத்தவர்களில் எழுபது பேர்களும் (மேலே) ஏறினார்கள்.

10. இஸ்றாயேலின் தேவனையும் தரிசித் தார்கள்; அவருடைய கால்களின்கீழ் நீலக் கல்லிழைத்த வேலைப்போலவும் தெளிந்த வானத்தின் சுடரொளிபோலவுமிருந்தது.

11. இஸ்றாயேல் புத்திரரில் எவர்கள் அக ன்று தூரத்திலிருந்தார்களோ, அவர்கள் மேல் கர்த்தர் தம்முடைய கையை நீட்டினாரில்லை. அவர்கள் தேவனைத் தரிசித்த பின்பு உண்ணவும் பானஞ் செய்யவும் தொடங்கினர்.

12. அப்போது கர்த்தர் மோயீசனை நோக்கி: நீ மலையின்மேல் நம்மிடத்திற்கு ஏறி வந்து இங்கேயிரு. நாம் உனக்குக் கற்பலகைகளையும், நீ அவர்களுக்குப் படிப்பிப்பதற்கு, நாம் எழுதிய கற்பனை முதலிய திட்ட சட்டங்களையும் தருவோம், என்றருளினார்.

13. மோயீசனும் அவனுக்கு மந்திரியாயிருந்த ஜோசுவாவும் எழுந்திருந்து தேவனுடைய மலையில் ஏறுகையில், மோயீசன்,

14. பெரியோர்களை நோக்கி: நாங்கள் உங்களிடத்திற்குத் திரும்பி வருமட்டும் நீங்கள் இங்கே காத்துக்கொண்டிருங்கள்; ஆரோனும் ஊரும் உங்களோடிருக்கிறார்களே, யாதொரு தர்க்கம் உண்டானால் அவர்களுக்குத் தெரியப்படுத்துவீர்கள், என்று சொல்லிப் போனான்.

15. மோயீசன் ஏறிப்போன பிற்பாடு ஒரு மேகம் வந்து மலையை மூடிற்று.

16. கர்த்தருடைய மகிமை சீனாயி மலை யின்மேல் தங்கியிருந்தது; அந்த மேகமானது ஆறுநாளும் மலையை மூடிற்று. ஏழாம் நாளி லோ அந்தகார நடுவினின்று கர்த்தர் அவ னைக் கூப்பிட்டார்.

17. மலையின் கொடுமுடியிலே கர்த்தருடைய மகிமையின் தரிசனம் இஸ்றாயேல் புத்திரர் கண்களுக்கு உக்கிரமான தீயைப் போலத் தோன்றும்.

18. மோயீசன் அந்த மேகத்தின் நடுவே பிரவேசம் பண்ணிய பர்வதத்தின் மேலேறி அவ்விடத்திலே இரவும் பகலும் நாற்பது நாள் இருந்தான்.

* 18-ம் வசனம். மோயீசன் தேவ உடன்படிக்கையின் கற்பலகைகளைப் பெற்றுக் கொள்வதற்கு ஆயத்தமாக நாற்பது பகலும் நாற்பது இரவுமாய் ஒன்றும் சாப்பிடாமல் அருந் தவம் செய்து வந்தான். சேசுநாதர் சுவாமியும் சத்தியவேதத்தைப் போதிக்கிறதற்கு முன்னரே வனாந்தரத்திலிருந்து நாற்பது நாள் அளவும் ஜெபதவ முயற்சிகளைச் செலுத்தினார் (மத். 4-ம் அதிகாரம்.)