இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

யாத்திராகமம் - அதிகாரம் 23

தூஷிக்கிறவர்களையும், பொய்ச் சாட்சி சொல்லுகிறவர்களையும் குறித்து விதிக்கப்படும் தண்டனையும் - நியாயங்கள் நடக்க வேண்டிய முறைமையும் - ஓய்ந்திருக்கும் வருஷங்களின் வரலாறும்.

1. பொய் வார்த்தையை ஏற்றுக் கொள்ளாதே, அக்கிரமியை வேண்டிப் பொய்ச் சாட்சி சொல்வதற்கு அவனோடு கைகொடுக்கலாகாது.

2. தின்மை செய்ய ஜனங்களைப் பின்பற்றிப் போகாதே, நீதி ஸ்தலத்திலே அதிகமான பேர்களுடைய பட்சத்தில் சாய்ந்து சத்தியச் சதிசெய்யாதே.

3. நீதிஸ்தலத்திலே ஏழையுடைய முகத்தையும் பார்க்காதே.

4. தப்பியோடிப்போன உன் பகைவனின் மாடாவது வேசரியாவது காணக்கிடைத்தால் அதை அவனிடத்தில் திரும்பக் கொண்டுபோய் விடுவாய்.

* 4-ம் வசனம். வாய்ச் சொல்லினாலே உன் பகைவனை நேசிக்கவேண்டியதுந் தவிர அவனுக்குக் கூடுமான நன்மையெல்லாம் செய்யக்கடவாயென்று இந்த வசனத்தினாலே அறிந்துகொள்.

5. உன்னைப் பகைக்கிறவனுடைய வேசரி சுமையோடு விழுந்து கிடக்கக்கண்டால் அப்பாலே போகாமல் அது எழுந்திருப்பதற்கு உதவிசெய்வாய்.

6. ஏழையானவனுடைய வியாச்சியத்திலே அவனுடைய நியாயத்தைப் புரட்டாதே.

7. கள்ள விஷயத்துக்குத் தூரமாயிருப்பாயாக. குற்றமற்றவனையும் நீதிமானையும் கொலைசெய்யாதே. ஏனெனில் நாம் துன்மார்க்கனை வெறுக்கிறோம். 

8. இலஞ்சம் வாங்காதே. ஏனெனில் பரிதானங்கள் ஞானிகளைக்கூடக் குருடராக்கி நீதிமான்களுடைய வார்த்தைகளையும் புரளச் செய்யும்.

9. பரதேசிக்குத் துன்பம் செய்யாதே, ஏனென்றால் நீங்களும் எஜிப்த்து தேசத்தில் பரதேசிகளாயிருந்தமையால் பரதேசிகளுடைய மனதின் அந்தஸ்தை அறிகிறீர்களே!

10. ஆறு வருஷம் நீ உன் நிலத்திலே பயிரிட்டு அதன் பலன்களைச் சேர்த்துக் கொள்வாய்.

* 10,11-ம் வசனம். ஒவ்வொரு வாரத்திலே ஏழாம் நாளாகிய ஞாயிற்றுக்கிழமையைப் பரிசுத்தமாகக் கொண்டாடுவதுபோல, ஏழு வருஷத்தில் ஒரு வருஷமும் பரிசுத்தமாகக் கொண்டாடிவந்தால் மனுஷருக்கு எவ்வளவோ நன்மையும் பலனுமாயிருக்கக்கூடும். சில கிறீஸ்துவர்கள் யாதொரு பெரிய அவரசமுமில்லாமல் ஞாயிற்றுக்கிழமையின் பரிசுத்தத்தைக் குலைத்து விலக்கப்பட்ட வேலைசெய்து வருவதைக் கண்டால், ஐயோ என்ன பரிதாபம்!

11. ஏழாம் வருஷத்திலோ உன் ஜனத்தி லுள்ள எளியவர்கள் உண்ணவும், மீதியான வையெல்லாம் காட்டு ஜெந்துக்கள் தின்ன வும், உன் நிலங்கள் சும்மா கிடக்க விட்டு விடுவாய். உன் திராட்சைத் தோட்டத்தையும் ஒலிவத் தோட்டங்களையும் குறித்து அவ்விதமே செய்வாயாக.

12. ஆறு நாள் நீ வேலைசெய்து ஏழாம் நாளிலே உன் ஆடும் மாடும் உன் கழுதையும் இளைப்பாறத்தக்கதாகவும் உன் அடிமைப் பெண்ணின் மகனும் அந்நியனும் இளைப்பாறத் தக்கதாகவும் ஓய்ந்திருப்பாயாக.

13. நாம் உங்கட்குச் சொன்னதெல்லாம் அனுசரியுங்கள். மீளவும் அந்நிய தேவர்களின் பெயரைக்கொண்டு ஆணையிடாதேயுங்கள். அது உங்கள் வாயிலே நின்று யாராலேயும் கேட்கப்படலாகாது.

14. ஒவ்வொரு வருஷத்திலும் மும்முறையாய் நமக்குத் தோத்திரமாகப் பண்டிகைகளைக் கொண்டாடுவீர்கள், (அதாவது:)

15. புளிப்பில்லாப்பண்டிகை. நீ எஜிப்த்து தேசத்திலிருந்து புறப்பட்டபோது புதுப் பழங்களின் மாதத்திலே ஏழுநாள் அளவும் புளிப்பில்லா அப்பத்தைப் புசிக்க வேண் டுமென்று நாம் உனக்குக் கட்டளையிட் டோம்; நீ அவ்விதமே செய்தாய், (அன்றி யும்) வெறுங் கையோடு நம்முடைய சந்நி தியில் வராதபடிக்குச் சாவதானமாயிருப் பாய்.

16. உன் நிலத்திலே நீ எதை விதைத்தி ருந்தாலும் உன் வேலையாற் கிடைத்த முதற் பலன்களின் அறுப்புகாலப் பண்டிகையை யும் வருஷ முடிவிலே உன் நிலங்களில் விளைந்த சகல விளைவுகள் சேர்த்துத் தீர்ந்த போது சேர்ப்புக்காலப் பண்டிகையையும் கொண்டாடிவருவாய்.

17. உன் ஆண் மக்கள் யாவரும் வருஷத் தில் மும்முறையாய் உன் தேவனாகிய கர்த் தராயிருக்கிற நம்முடைய சமூகந் தரிசனை க்கு வருவார்கள்.

18. நமக்கிடும் பலியின் இரத்தத்தைப் புளிப்பில்லாத மாவின்மேல் செலுத்தாதே. நமக்கிடப்பட்ட பலியின் கொழுப்பையும் விடியற்காலமட்டும் வைக்காதே.

19. உன் நிலத்தில் விளைந்த நற்பலன்களை உன் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவருவாய். வெள்ளாட்டுக் குட்டியை அதன் தாயின் பாலிலே சமைக்காதிருப்பாய்.

20. உனக்கு முன் நடந்து உன் வழியில் உன்னைப் பாதுகாக்கிறதற்கும், நாமுனக்கு முஸ்திப்புச் செய்த ஸ்தானத்திற்கு உன் னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும் இதோ நாம் ஒரு தூதனை அனுப்புவோம்.

* 20,23-ம் வசனம். இவ்விடத்திற் சொல்லப்பட்ட தேவதூதன் யாரென்றால் அவர் அர்ச். திரித்துவத்தின் இரண்டாமாளாகிய தேவசுதன்தான் என்று வித்தியாபாரகரில் அநேகர் நிச்சயித்துக் கொண்டார்கள். அதைப்பற்றி அவரிடத்தில் நமது நாமம் உண்டென்று கர்த்தர் சொல்லுகின்றார். அவர்தாமே இஸ்றாயேலியரை வாக்குத்தத்த பூமிக்குக் கூட்டிக் கொண்டு போனதுபோல் நம்மையும் வாக்குத்தத்த பூமியாகிய மோட்சத்திற்குக் கூட்டிக்கொண்டு போவார். அவர் அன்றோ (அரு. சுவி. 14:6) நாமே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறோம் என்கிறார்.

21. அவரைச் சங்கித்திருக்கவும், அவருடைய வாக்குக்குச் செவிகொடுக்கவும் அவருக்குப் பயந்து நடக்கவுங்கடவாய். ஏனெனில் நீ பாவஞ் செய்தால் அவர் பொறுப்பதில்லை. நமது நாமம் அவரிடத்திலுண்டு.

22. நீ அவரது வாக்குக்குச் செவிகொடுத்து நாம் திருவுளம்பற்றுகிறதெல்லாம் அனுசரிப்பாயாகில் நாம் உன் பகையாளிகட்குப் பகையாளியாகி உன்னை உபாதிப்பவர்களை உபாதிப்போம்;

23. நமது தூதன் உனக்கு முன்னே சென்று ஆமோறையன், ஏத்தையன், பெறேசையன், கனானையன், ஏவையன், ஜெபுசேயன் இவர்களிடத்தில் உன்னைப் பிரவேசிக்கப் பண்ணுவார், இவர்களை நாம் அதம்பண்ணுவோம்.

24. நீ அவர்களுடைய தேவர்களை ஆராதிக்கவும் சேவிக்கவும் வேண்டாம். அவர்கள் செய்கைகளின்படி நீங்கள் செய்யாமல் அவர்களை நிர்மூலம்பண்ணி அவர்களின் சிலைகளையும் உடைத்துப் போடுவீர்கள்.

25. உங்கள் தேவனாகிய கர்த்தரை நீங்கள் சேவித்து வந்தால் நீங்கள் புசிக்கும் அப்பத்துக்கும் குடிக்கும் தண்ணீருக்கும் நாம் ஆசீர்வாதங் கொடுத்து வியாதியை உங்களிடத்திலிருந்து விலகப்பண்ணுவோம்.

26. உன் நாட்டிலே வறட்டு மலட்டு ஸ்திரீகள் இருக்க மாட்டார்கள். உன் ஆயுசு நாட்களைப் பூரணப்படுத்தி வருவோம்.

27. நமது பயங்கரத்தை உனக்கு முன் செல்லும்படிச் செய்வோம், எந்த நாட்டில் நீ பிரவேசிப்பாயோ அந்நாட்டு ஜனங்களையெல்லாம் கலங்கடித்து நீ வரவே உன் சத்துருக்களெல்லாரும் முதுகுகாட்டப் பண்ணுவோம்.

28. நீ அவர்களின் நாட்டிலே பிரவேசம் பண்ணுமுன்னே நாம் பெரிய குளவிகளை அனுப்பி ஏவையரையுங் கானானையரையும் ஏத்தையரையுந் துரத்திவிடுவோம்.

29. அந்தத் தேசங்கள் பாழாய்ப் போகாதபடிக்கும், காட்டு மிருகங்கள் பலுகி உன்னை உபாதிக்காதபடிக்கும் நாம் ஒரு வருஷத்திற்குள்ளே உன் முன்னின்று அவர்களைத் துரத்தி விடமாட்டோம்.

30. நீ பெருகி நாட்டைச் சுதந்தரிக்கும் மட்டும் அவர்களைக் கொஞ்சங் கொஞ்சமாய் உன் முகதாவினின்று துரத்திவிடுவோம்.

31. (பின்னரும்) செங்கடல் தொடங்கிப் பலஸ்தீனரின் சமுத்திரமட்டும், வனாந்தரந் துவக்கி நதிவரைக்கும் உன் எல்லைகளைப் பரம்பச் செய்வோம். நாம் அத்தேசத்துக் குடி களை உங்கள் கையில் ஒப்புக் கொடுப்போம்.

32. அவர்களோடும் அவர்களுடைய தேவ தைகளோடும் நீ உடன்படிக்கைப் பண்ணாதே.

33. அவர்கள் உன்னை நமக்கு விரோதமாகப் பாவம் செய்யப் பண்ணாதபடிக்கு உன்தேசத்திலே குடியிருக்கவேண்டாம். நீ அவர்களுடைய தேவர்களைச் சேவித்தால் அது உனக்கு இடறுங் கல்லாயிருக்கும்.