இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

யாத்திராகமம் - அதிகாரம் 22

களவு, அடைவு, கடன், கற்பழித்தல், சூனியம், விக்கிரகாராதனை இவைகளுக்கடுத்த நியாயப் பிரமாணங்கள்

1. மாட்டையாவது ஆட்டையாவது திருடிக் கொன்றுபோட்டவன் அல்லது விற்றுப்போட்டவன் எவனோ அவன் அந்த ஒரு மாட்டுக்கு ஐந்து மாடுகளையும் ஓராட்டுக்கு நான்கு ஆடுகளையும் பதிலாகக் கொடுத்து உத்தரிக்கக்கடவான்.

* 1-ம் வசனம். யாதொரு கைப்பொருளைத் திருடினவன் அதற்கு இரட்டிப்பாய் உத்தரிப்பதும், ஆடு மாடு முதலியனத் திருடியவன் ஒன்றுக்கு மூன்று நான்கு ஐந்து உத்தரிப்பதும் நீதி நியாயமாயிருந்தது. ஏனென்றால் 1-வது, கைப்பொருட்களைக் காப்பாற்றுவது எஜமானுக்கு அத்தனை கஷ்டமில்லை. 2-வது, குடித்தனத்திற்கும் வியாபாரத்திற்கும் கிருஷிகத்திற்கும் ஆடு மாடு முதலியன அதியவசியமானதால் கண்டிப்பான சட்டதிட்டங்களாலே அவைகளைப் பாதுகாப்பது மகா நியாயமே.

2. திருடன் ஒரு வீட்டில் பிரவேசிக்கக் கன்னமிட்டாவது சுரங்கம் வெட்டியாவது கண்டுபிடிக்கப்பட்டு அடியுண்டு செத்தால் அவனை அடித்த மனிதனை இரத்தப்பழி சுமராது.

3. சூரியன் உதித்த பின்பு அதைச் செய் திருந்தாலோ அது கொலைப் பாதகமாகையி னாலே அவன் கொலை செய்யப்படுவான். திருட்டுக்காகப் பதில் கொடுத்து உத்தரிப் பதற்குத் திருடனுக்குக் கையில் ஒன்றுமில் லையானால் தான் செய்த களவுக்காக விற்கப் படுவான்.

4. அவன் திருடின மாடோ வேசரியோ ஆடோ உயிரோடே அவனிடத்தில் அகப் பட்டதானால் அவன் இரட்டிப்பாய்க் கொடுத்து உத்தரிக்க வேண்டும்.

5. யாதாமொருவன் பிறனுடைய வயலை யாவது திராட்சைத் தோட்டத்தையாவது சேதப்படுத்தி அவைகளிலே தன் மிருக ஜீவனை மேயவிட்டால் நஷ்டத்துக்கு அவ் வளவாக அவன் தன் சொந்த வயலிலும் திராட்சைத் தோட்டத்திலும் எது உத்தமமானதோ அதைப் பரிகாரமாகக் கொடுக் கக் கடவான்.

6. நெருப்பு எழும்பி முள்ளுகளின் மேல் விழுந்து அதிலிருந்து தானியப் போரிலே யாவது விளைந்த பயிரிலேயாவது பற்றி எரித்துப்போட்டால் நெருப்பைக் கொளுத் தினவன் சேதத்துக்கு உத்திரவாதம் பண் ணக்கடவான்.

7. ஒருவன் தன் சிநேகிதனிடத்தில் பணத் தையாவது உடமையையாவது அடை வாக வைத்துவிட்டிருக்கும்போது அது அவன் வீட்டிலிருந்து திருடப்பட்டுப் போ னால் திருடன் அகப்பட்டபட்சத்தில் அதற்கு இரட்டிப்பாகக் கொடுக்கக்கடவான்.

8. திருடன் அகப்படாவிட்டால் வீட்டெ ஜமான் நியாயாதிபதியிடத்திலே போய்த் தன் பிறனுடைய பொருளைத் தான் அபக ரித்ததில்லையென்று சத்தியமாய்ச் சொல் லக்கடவான்.

9. திருட்டுப் போன மாடு, கழுதை, ஆடு, வஸ்திரம் முதலிய நஷ்டசங்கதி விஷயத் தில் இருவர் நியாயாதிபதிகளிடத்தில் வரு வார்கள். நியாயாதிபதிகள் திருடனைக் குற்றவாளியென்று தீர்ப்புச் சொன்னால் அவன் மற்றவனுக்கு இரட்டிப்பாய் உத்தரித்துக் கொடுக்கக்கடவான்.

10. யாதொருவன் தன் கழுதை, ஆடு, மாடு முதலிய மிருக ஜீவனையும், பிறனுடைய வசத்தில் ஒப்பித்துவிட்டிருக்கும்போது அது செத்தாலும், மெலிந்துபோனாலும் பகைவரால் பறிப்பட்டுப்போனாலும் சாட் சிகள் ஒருவனுமில்லாதபட்சத்திலே,

11. சபையின் முன்பாகப் (பிரதிவாதி) தான் பிறனுடைய பொருளைக் கையாலே தொடவில்லையென்று சத்தியம்பண்ணிக் கொடுப்பான். உடையவன் அதை அங்கீ கரிக்க வேண்டும். மற்றவனோ பதில் அளிக்க வேண்டுவதில்லை.

12. அது திருடப்பட்டுப் போயிற்றென் றால் அவன் அதன் உடையவனுக்கு உத்தர வாதம் பண்ணக்கடவான்.

13. அது காட்டுமிருகத்தால் பட்சிக்கப் பட்டிருந்தால் அவன் மீதியானதை எஜமானுக்கு ஒப்புவிக்கும்பட்சத்தில் அதற்காக உத்தரவாதம் பண்ண வேண்டுவதில்லை.

14. அப்படிப்பட்டவைகளில் எதையாகி லும் ஒருவன் இரவலாக வாங்கினானானால் அது எஜமானுக்குத் தெரியாமல் செத்தாவது சேதப்பட்டாவது போனபட்சத்தில் அவன் அதற்கு உத்தரவாதம் பண்ணவேண்டும்.

15. ஆனால் உடையவன் ஆஜீரா யிருக்கும் போது அவன் பணங் கொடுத்து வாடகை க்கு அதை வாங்கினானானால் அதற்கு உத்தரவாதஞ் செய்யவேண்டுவதில்லை.

16. நியமிக்கப்படாத ஒரு கன்னிப் பெண்ணை ஒருவன் மோசம்போக்கி அவளோடே சயனித்தால் அவன் அவளுக்காகப் பரியம் போட்டு அவளை விவாகம்பண்ணக் கடவான்.

17. கன்னிகையின் தகப்பன் அவளை அவனுக்குக் கொடுக்கச் சம்மதியாவிடில் கன்னிகைகளுக்காகக் கொடுக்கப்படும் பரிய முறைமையின்படி கொடுக்கவேண்டும்.

18. சூனியக்காரரை உயிர்வாழ விடாதே.

* 18-ம் வசனம். பில்லி சூனியம் பெரும்பாலும் பசாசின் நேர் உதவி சகாயத்தினாலன்றி வேறேவிதமாய் நடவாது. அப்படிப்பட்ட மாயவித்தைகள் அஞ்ஞான தேசங்களிலே மெத்தவும் வழங்கினமையால் வெகுவெகுபேர்கள் ஏமாந்து போவார்கள். சர்வேசுரன் இஸ்றாயேலியரைக் காப்பாற்றும் பொருட்டுக் கண்டிப்பான கட்டளைகளால் மேற்படி ஜால வித்தையெல்லாம் விலக்கம் பண்ணினார்.

19. மிருகத்தோடு புணருகிறவன் அகத்தியமாய்க் கொல்லப்பட்டு சாகவேண்டும்.

20. கர்த்தர் ஒருவருக்கேயன்றி வேறு தேவர்களுக்குப் பூசை பண்ணுகிறவன் எவனோ அவன் கொல்லப்படுவான்.

21. பரதேசியைக் கஸ்திப்படுத்தவும் உபாதிக்கவும் வேண்டாம். நீங்களும் எஜிப்த்து தேசத்திலே பரதேசிகளாய் இருந்தீர்களல்லவா?

22. விதவை ஸ்திரீயையும் திக்கற்ற பிள்ளையையும் அநியாயம் செய்யலாகாது.

23. அவர்களுக்கு அநீதம் பண்ணினீர்க ளானால், அவர்கள் நம்மை நோக்கிக் கூப் பிட, நாம் அவர்களுடைய கூக்குரலைக் கேட்டுக்கொண்டு,

24. கோபம் மூண்டவராய்ப் பட்டயத்தி னால் உங்களைக் கொல்லுவோமாதலால் உங்கள் ஸ்திரீகளும் விதவை ஆவார்கள், உங்கள் பிள்ளைகளும் திக்கற்றவர்களாய்த் திரிவார்கள்.

25. உன்னோடு குடியிருக்கிற நமது ஜன ங்களில் ஒரு ஏழையானவனுக்கு நீ பணம் கடனாகக் கொடுத்திருப்பாயாகில், அவனை நெருக்கடி செய்யவும், மிதமிஞ்சின வட்டி வாங்கவும் வேண்டாம்.

26. உன் பிறனுடைய வஸ்திரத்தை ஈடாக வாங்கியிருப்பாயாகில் சூரியன் அஸ்தமி க்குமுன் அதை அவனுக்குத் திரும்பக் கொடுப்பாயாக.

27. ஏனென்றால் அவன் தன் உடலை மூடி உடுத்துகிறதற்கு அது ஒன்றேயன்றிப் போர்த்துப் படுத்துக்கொள்வதற்கு வேறில் லை. அவன் நம்மைநோக்கி முறையிடும் போது இரக்கமுள்ளவராகிய நாம் அவனுக் குச் செவிகொடுப்போம்.

28. நியாயாதிபதிகளைத் தூஷணிக்கவும் ஜனங்களுக்கு அதிபதியைச் சபிக்கவும் வேண்டாம்.

29. நீ முதன் முதல் பழுத்த உன் பலனை யும் உன் பொருளிலே பத்தில் ஒரு பாகத்தையும் ஒப்புக்கொடுக்கத் தாமதிக்கவேண்டாம். மேலும் உன் குமாரரில் தலைச்சன் புத்திரனை நமக்குக் கொடுப்பாயாக.

30. உன் ஆடுமாடுகளிலும் அவ்வாறே செய்வாய். குட்டியானது ஏழுநாள் தாயோடு இருக்கவிட்டு எட்டாம் நாளிலே நமக்குச் செலுத்தி விடுவாயாக.

31. நீங்கள் நமக்குப் பரிசுத்தமாக்கப்பட்ட மனிதர்களாயிருக்கக்கடவீர்கள். துஷ்ட ஜெந்துக்களால் பீறுண்ட மாமிசத்தை நீங்கள் புசியாமல் அதை நாய்களுக்குப் போட்டு விடக்கடவீர்களாக.