இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

யாத்திராகமம் - அதிகாரம் 20

கர்த்தர் மோயீசன் கையிலே பத்துக் கற்பனைகளைத் தந்தருளியது.

1. பிறகு கர்த்தர் திருவுளம்பற்றின சகல வாக்கியங்களுமாவன:

2. எஜிப்த்து தேசத்திலிருந்தும், அடிமைத்தன வாசத்தினின்றும் உன்னைப் புறப்படப் பண்ணின உன் தேவனாகிய ஆண்டவர் நாமே.

* 2-ம் வசனம். நாம் அனுசரிக்கவேண்டிய கடமைகளில் இரண்டு விதமுண்டு: முதல்விதம் கர்த்தரைப்பற்றியது. இரண்டாம்விதம் நம்மையும் நம் புறத்தியாரையும் பற்றியதாம். கடவுளைப்பற்றிய நமது கடமைகள் பிரதானமுள்ளன. அதேதென்றால்அவர் ஒருவரே தாமாயிருக்கிறாரென்றும், சரீரமில்லாத அரூபியான வஸ்துவென்றும், மட்டில்லாத சகல நன்மையுஞ் சுரூபியாயிருக்கிறாரென்றும், எங்கும் வியாபித்திருந்து எல்லாவற்றிற்கும் ஆதிகாரணமாயிருக்கிறாரென்றும் விசுவசித்து அவரை மாத்திரம் தேவனாகத் தொழுது எல்லாவற்றையும் பார்க்கச் சிநேகிக்க வேண்டும். புறத்தியாரை, அவரைப்பற்றி நம்மைப் போல் மதித்து வாக்கினாலும் சிந்தையினாலும் கிரியையினாலும் நேசிக்க வேண்டும். பத்திலே மூன்று முதல் கற்பனைகள் சுவாமியையும், மற்ற ஏழு கற்பனைகள் நம்மையும் நமது புறத்தியாரையும் பற்றியிருக்கின்றனவே; அம்மூன்றும் இவ்வேழும் இரண்டு கற்பனைகளில் அடங்கும். அதாவது: 1-வது,- எல்லாத்தையும் பார்க்கச் சர்வேசுரனைச் சிநேகிக்கிறது. 2-வது,- அவரவர் தன்னைத்தான் சிநேகிக்குமாப்போல மற்றவர்களையும் சிநேகிக்கிறது. இவ்விரண்டு கற்பனைகளில் நியாயப் பிரமாணமும், தீர்க்கத்தரிசனங்களும் அடங்கியிருக்கின்றன என்று சேசுநாதர் சுவாமி திருவாக்கருளினார். (மத். 22:40)

3. நமக்கு முன்பாக வேறே தேவர்கள் உனக்கில்லாதே போவதாக.

4. மேலே வானத்திலும் கீழே பூமியிலும் பூமியின் கீழுள்ள தண்ணீரிலும் உண்டாயிருப்பவைகளுக்கு ஒப்பான ஒரு சுரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தை யென்கிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்.

5. நீ அவைகளை ஆராதிக்கவும் சேவிக்கவும் வேண்டாம். உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நாம் வல்லவரும் எரிச்சலுள்ளவருமாயிருக்கிறோம்; நம்மைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நாலாம் தலைமுறை மட்டும் விசாரித்து வருகிறவராயிருக்கிறோம்.

* 4,5-ம் வசனம். தேவ கட்டளை இப்படியிருக்கக் கத்தோலிக்கக் கிறீஸ்தவர்கள் திருச்சுரூபங்களை உண்டுபண்ணித் தங்கள் கோவில்களிலே பூச்சியத்தோடு வைத்து அவைகளின் முன்பாகச் சிற்சில ஆசார உபசார அடையாளங்களைக் காட்டுவது பாவந்தான் அன்றோவென சில மதிகெட்ட பதிதர் சாதித்து வருகிறார்கள் அது வீண் வியாசம்.

முதலாவது: தேவனென்று அல்லது தேவனுக்கு விசேஷ இருப்பிடமென்று எண்ணி எவ்வித சித்திரவிசித்திர மூர்த்தியையாவது, சிலையையாவது சொரூபத்தையாவது உண்டுபண்ணுவதும் அவைகளுக்குத் தேவ ஆராதனையைச் செலுத்துவதும் மகா அக்கிரமமென்று கர்த்தர் சொல்லியிருக்கிறாரொழிய அவர் விக்கிரகமல்லாத மற்றுமுள்ள படங்களையும், சிலை, சுரூபங்களையும் விலக்கம் பண்ணவேயில்லை. பண்ணியிருந்தால் புரோட்டெஸ்டாண்டுகள் சென்னைப்பட்டணம், கல்கத்தா, பெங்களூர் முதலிய எல்லாத் தங்கள் கெடிஸ்தானங்களிலே பிரசித்தமாக இராணி இராயருடைய சிலைகளையும் பெரிய சீமான்களுடைய சுரூபங்களையும் ஏன் ஏற்படுத்தி வைத்தார்கள்? அவர்களுமென்ன விக்கிரகக்காரரா?

இரண்டாவது: கத்தோலிக்க கிறீஸ்தவர்கள் சத்தியத் திருச்சபைப் போதனை அறிந்து திரியேக சர்வேசுரனுக்கே தேவ ஆராதனை செலுத்திவருகிறார்கள் என்று கபடமற்ற சகல மனிதர்களுக்கும் வெட்ட வெளிச்சம் பட்டப் பகலாகத் தெரிந்த சங்கதிதானே. கத்தோலிக்கர் தேவமாதா முதலிய சுரூபங்களுக்குப் பூசையையாவது வேறே தேவ ஆராதனையாவது ஒருபோதும் பண்ணுகிறதுமில்லை. அவர்கள் அவைகளுக்கு முன்பாக நின்று அல்லது முழந்தாளிலிருந்து செபம் பண்ணிவந்தாலும் அந்தச் சுரூபங்களால் தங்களுக்கு யாதொரு உதவி சகாயம் வரக்கூடுமென்று நம்புகிறதுமில்லை. அவர்கள் சுரூபங்களைப் பார்த்துச் சர்வேசுரனையாகிலும் தேவமாதா முதலிய அர்ச்சியசிஷ்டவர்களையென்கிலும் வேண்டிக் கொள்ளுகிறார்கள்; அவைகளுக்கு முன்பாக அவர்கள் காண்பிக்கிற மரியாதை, சங்கை, வணக்கம் முதலியவை சர்வேசுரனுக்கும் தேவதாயார் முதலிய மோட்சவாசிகளுக்கும் செல்லுமேயன்றி மேற்படி சுரூபங்களுக்குப் பரிச்சேதம் செல்லாது.

6. நம்மிடத்தில் அன்பு கூர்ந்து நமது கற்பனைகளைக் கைக்கொண்டு அனுசரித்து வருகிறவர்களுக்கோவெனில், ஆயிரமாயிரம் முறையும் தயவு பண்ணுகிறவராயிருக்கிறோம். 

7. உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வியர்த்தமாய்ச் சுவீகரித்துக் கொள்ள வேண்டாம்; ஏனென்றால் கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணில் சுவீகரித்துக் கொள்ளுகிறவனைத் தண்டியாமல் விடமாட்டார்.

8. சாபத் நாளை ஆசரிக்கும்படி நினைப்பாயாக. 

9. ஆறுநாளும் நீ வேலை செய்து உன் தொழிலுக்கடுத்த கிரியைகளை எல்லாம் நடத்துவாயாக.

10. ஏழாம் நாளிலோ உன் தேவனாகிய கர்த்தருடைய சாபத்தாயிருப்பதால், அன்று நீயாவது, உன் குமாரன் குமாரத்தியாவது, உன் வேலைக்காரன் வேலைக்காரியாகிலும், உன் மிருக ஜீவன் அல்லது உன் வாசல்களில் இருக்கிற அந்நியனென்கிலும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம்.

11. ஏனென்றால் கர்த்தர் ஆறு நாளுக்குள் வானத்தையும் பூமியையும் அவைகளிலுள்ள சகலத்தையும் படைத்து ஏழாம் நாளிலே ஓய்வு கொண்டருளினமையால் கர்த்தர் சாபத் நாளை ஆசீர்வதித்துப் பரி சுத்தமாக்கினார்.

12. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கப்போகிற பூமியிலே நீ நெடுநாள் ஜீவிக்கும்பொருட்டு உன் தந்தையையும் தாயையும் சங்கித்திருப்பாயாக.

13. கொலை செய்யாதிருப்பாயாக.

14. விபசாரம் செய்யாதிருப்பாயாக.

15. களவு பண்ணாதிருப்பாயாக.

16. உன் பிறனுக்கு விரோதமாய்ப் பொய்ச் சாட்சி சொல்லாதிருப்பாயாக.

17. உன் பிறனுடைய வீட்டை இச்சிக்கா தே. அவனது மனைவியையாவது, வேலைக்கா ரனையாவது, வேலைக்காரியையாவது, மாட் டையாவது, வேசரியையாவது, பின்னும் அவ னுக்குக் கிடைத்தது யாதொன்றையும் அபேட் சியாமலும் இருப்பாயாக என்றருளினார்.

18. ஜனங்களெல்லாரும் குரல்களையும் சுடரொளிகளையும் எக்காளத்தின் ஒலியை யும் புகைந்துகொண்டிருந்த மலையையும் தரிசித்து அச்சமுற்றுத் திடுக்கிட்டவர் களாய்த் தூரத்திலே ஸ்தம்பித்து நின்றார்கள்.

19. மோயீசனை நோக்கி: நீர் எங்களோடு பேசும், நாங்கள் கேட்போம்; தேவன் எங்களோடு பேசவேண்டாம். பேசினால் உயிர் போகுமாக்கும் என்றார்கள்.

20. அதற்கு மோயீசன்: நீங்கள் அஞ்ச வேண்டாம். உங்களைச் சோதிப்பதற்காக வும் நீங்கள் அவருக்குப் பயந்து பாவம் செய்யாமல் இருப்பதற்காகவும் தேவன் இப்படி எழுந்தருளி வந்தார் என்றான்.

21. ஜனங்கள் தூரத்திலே நின்று கொண் டிருந்தார்கள். மோயீசனோ தேவன் இருந்த காரிருளுக்குச் சமீபமாய்ச் சென்றான்.

22. அப்பொழுது கர்த்தர் மோயீசனை நோக்கி: நீ இஸ்றாயேல் புத்திரரோடு சொல்லவேண்டியதேதெனில்: நாம் வானத்திலிருந்து உங்களோடு பேசினதாக உங்களுக்குத் தெரியும். 

23. நீங்கள் வெள்ளியினாலேயாகிலும், பொன்னாலே என்கிலும் விக்கிரகங்களை உங்களுக்கு உண்டாக்கவேண்டாம்.

24. நம்முடைய நாமம் எந்த ஸ்தானத்தில் கொண்டாடப்படுமோ அந்த ஸ்தானத்தில் நீங்கள் மண்ணாலே ஒரு பலிபீடத்தை நமக்கு நிருமித்துக் கட்டி அதன்மேல் தகனப்பலியாகவும், சமாதானப் பலியாகவும் உங்கள் ஆடு மாடாதிகளையும் சமர்ப்பித்து வாருங்கள். நாம் உன்னிடத்தில் வந்து உன்னை ஆசீர்வதிப்போம்.

25. சில வேளை கல்லினாலே பலிபீடத்தை நமக்குக் கட்டுவீர்களாகில், அதைக் கொத்தி வெட்டப்பட்ட கல்லாலே செய்யாதீர்கள். ஏனெனில் அதன்மேல் உன் உளி பட்டாலே அது அசுசியாகி விடும்.

26. மேலும் உன் நிர்வாணம் காணப்படாதபடிக்குப் படிகளால் நம்முடைய பலி பீடத்தின் மேலேற வேண்டாம்.