இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

யாத்திராகமம் - அதிகாரம் 18

மோயீசனுடைய மனைவியையும் இரண்டு குமாரரையும் ஜெத்திரோ கூட்டிக் கொண்டு வந்ததும் - ஜெத்திரோ அவனுக்கு நல்லாலோசனைச் சொல்லியதும் - ஜெத்திரோ போய்விட்டதும்.

1. அப்படியிருக்க, தேவன் மோயீசனுக்கும் தமது பிரஜையாகிய இஸ்றாயேலியருக்கும் செய்த யாவையும், கர்த்தர் இஸ்றாயேலியரை எஜிப்த்திலிருந்து புறப்படப் பண்ணினதையும் மதியானில் ஆசாரியனாயிருந்த மோயீசனுடைய உறவினனாகிய ஜெத்திரோ கேள்விப்பட்டு,

2. மோயீசனாலே வீட்டுக்கு அனுப்பி விடப்பட்டிருந்த அவன் மனைவியாகிய செப்போறாளென்பவளையும், 

3. அவனுடைய இரண்டு குமாரர்களை யும் கூட்டிக்கொண்டு வந்தான். நான் அந்நிய தேசத்திலே பரதேசியானேனென்று தகப் பன் சொல்லி ஒரு மகனுக்குக் கெற்சோம் என்று பெயரிட்டிருந்தனன்.

4. என் பிதாவின் தேவன் எனக்குத் துணையாகி என்னைப் பரவோனுடைய பட்டையத்தினின்று இரட்சித்தருளினார் என்று சொல்லி மற்றவனுக்கு எலியேசரென்று பெயரிட்டிருந்தான்.

5. ஆகையால் மோயீசனுடைய உறவினனாகிய ஜெத்திரோ அவன் குமாரர்களோடும் மனைவியோடும் வனாந்தரத்திலே வந்து மருமகன் பாளையமிறங்கியிருந்த தேவமலை அஸ்திவார ஸ்தானத்தில் சேர்ந்து,

6. மோயீசனுக்குச் செய்தியனுப்பி: ஜெத்திரோ என்னும் உம்முடைய உறவினனாகிய நானும், உம்முடைய மனைவியும் அவளோடுகூட அவளுடைய இரண்டு குமாரரும் உம்மிடத்திற்கு வந்திருக்கிறோம் என்று சொல்லச்சொன்னான்.

7. அப்பொழுது மோயீசன் தன் உறவோனுக்கு எதிர்கொண்டு போய், அவனுக்கு நமஸ்காரம் புரிந்து அவனை முத்தஞ்செய்த பின் இருவரும் உபசார மொழிகளால் ஒருவரை ஒருவர் வந்தித்தனர். பிறகு ஜெத்திரோ கூடாரத்திலே பிரவேசித்தபோது,

8. மோயீசன்: இஸ்றாயேலினிமித்தம் பர வோனுக்கும் எஜிப்த்தாருக்கும் கர்த்தர் செய்த எல்லாவற்றையும், வழியிலே தங்களுக்கு நேரிட்ட எல்லா வருத்தங்களையும், கர்த்தர் தங்களை விடுவித்து இரட்சித்ததையும் மாமனுக்கு விவரித்துச் சொன்னான். 

9. ஆண்டவர் இஸ்றாயேலியரை எஜிப்த்தியரின் கைக்குத் தப்புவித்து அவர்களுக்குச் செய்த சகல உபகாரங்களையும் குறித்து ஜெத்திரோ ஆனந்தித்து,

10. சொன்னதாவது: உங்களை எஜிப்த்தியருடைய கைக்கும் பரவோனுடைய கொடுங்கோலுக்கும் தப்புவித்து எஜிப்த்தின் சிறையில் நின்று தமது பிரஜைகளை விடுவித்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

11. எல்லாத் தேவர்களைப் பார்த்கிலும் ஆண்டவர் மகத்தானவரென்று இப்பொழுது நான் அறிந்திருக்கிறேன். அவர்கள் பிரஜைக்கு அநியாயமன்றோ செய்திருந்தார்கள்.

* 11-ம் வசனம். ஜெத்திரோ முன்னமே ஆண்டவருடைய மகத்துவத்தை அறிந்து கொண்டிருந்தவனாயினும், அதனை இப்போது அதிகமானத் திட்டத்தோடும் ஆச்சரியத்தோடும் கண்டுபிடிக்கிறான் என்பது இவ்வசனத்தின் அர்த்தமாம்.

12. அது நிற்க, மோயீசனுடைய மாமனா கிய ஜெத்திரோ தேவனுக்குச் சர்வாங்கத் தக னப்பலி முதலிய பலிகளையும் படைத்தான். பிறகு ஆரோனும் இஸ்ராயேலியரின் வயோ திகரான அனைவரும் வந்து தேவனுடைய சந்நிதியில் அவனோடு கூடப் போசனஞ் செய்தனர்.

13. மறுநாள் மோயீசன் ஜனங்களை நியா யவிசாரணை செய்ய உட்கார்ந்தான். ஜனங் கள் காலமே துவக்கிச் சாயரட்சை வரையி லும் மோயீசனுக்கு முன்பாக நின்றுகொண் டிருந்தார்கள்.

14. மோயீசன் இப்படி பிரஜைக்குச் சனு வாய்ச் செய்துவந்த யாவையுங் கண்ட ஜெத் திரோ: ஜனங்களைப்பற்றி நீர் ஏன் அவ் வாறு செய்கிறீர்? நீர் ஒன்றியாய் உட்கார்ந்து இருக்கிறதும், காலைமுதல் மாலைமட்டுஞ் ஜனங்கள் காத்திருக்கிறதும் சரிதானோவென,

15. மோயீசன் மாறுத்தாரமாக: ஜனங் கள் தேவனுடைய தீர்ப்புக்கு அபேட்சித் தே என்னிடத்தில் வருகின்றனர்.

16. எப்படியெனில், அவர்களுக்குள் யா தொரு வியாச்சியம் உண்டானால் நான் அவர் களுக்குள் நடுவனாயிருந்து தேவனுடைய கற்பனைகளையும் அவருடைய நியாயப் பிரமாணங்களையும் தெரிவித்துக் காட்டும் படி என்னிடத்திற்கு வருகிறார்கள் என்றான்.

17. அவனோ: நீர் இவ்வாறு செய்வது நல்லதல்ல.

18. அப்படிப்பட்ட விவேகமற்ற வேலை யால் நீரும் தொய்ந்துபோகிறீர், உம்மோடு இருக்கிற ஜனங்களும் வீணிலே கஷ்டப் பட்டுவருகிறார்கள்; இது உமக்குத் தாளாத வேலை; அதன் பாரத்தை ஒருவராய்த் தாங்க உம்மால் முடியாது.

19. இப்போது நான் சொல்லும் வார்த் தைகளையும் ஆலோசனைகளையும் கேட் டால் தேவன் உம்மோடு இருப்பார்; தேவ னைச் சேர்ந்த விஷயங்களிலே நீர் தேவ சந்நிதியிலிருந்து அவர்களுக்காகப் பேசும்.

20. பிரஜைக்குச் சடங்குகளையும், ஆராத னை முறைமையையும், அவர்கள் செல்ல வேண்டிய மார்க்கத்தையும், அவர்கள் செய்ய வேண்டிய கிருத்தியங்களையும் படிப்பித்துக் காட்டக்கடவீர்.

21. பின்னும் எல்லாச் ஜனங்களுக்குள்ளே எவர்களுக்குச் செல்வாக்கு, தேவபயம், உண்மைமொழி, உதாரகுணம் உண்டோ அவர்களைத் தெரிந்துகொண்டு ஆயிரம் பேருக்கு அதிபதிகளாகவும், நூறுபேருக்கு அதிபதிகளாகவும், ஐம்பது அல்லது பத்துப் பேருக்கு அதிபதிகளாகவும் ஏற்படுத்தும்.

22. இவர்களே எப்பொழுதும் நீதிநியா யங் கேட்டு விசாரிப்பார்கள்; கனத்த காரி யங்கள் யாவையும் உம்மிடத்தில் கொண்டு வரவும், அற்ப வழக்குகளை அவர்களே தீர்க் கவுங்கடவார்கள். இப்படி அவர்கள் உம் மோடுகூட இந்தப் பாரத்தைச் சுமந்தால் அது உமக்கு இலகுவாயிருக்கும்.

23. இந்தப்பிரகாரம் நீர் செய்வீராகில் தேவன் உமக்குக் கற்பித்த கட்டளைகளை நிறைவேற்றி அவருடைய சட்டதிட்டங்களை உம்மாலே செலுத்தக்கூடும். அதனாலே ஜனங்கள் எல்லோரும் தாங்கள் போக வேண்டிய இடத்திற்குச் சுகமாய்ப் போய்ச் சேரலாமென்றான்.

24. இந்தச் சொல் உற்றுக் கேட்டு மோயீசன் அவன் சொன்னபடி எல்லாம் நடந் தான்.

25. இஸ்றாயேலின் பூரண சபையில் இரு ந்த செல்வாக்குடைய பேர்களைத் தெரிந்து, அவர்களைச் ஜனங்களுக்குத் தலைவராக் கிச் சிலரை ஆயிரம்பேருக்கும், வேறு சிலரை நூறுபேருக்கும் மற்றுமுள்ள சிலரை ஐம்பது அல்லது பத்துப்பேருக்கும் அதிபதிகளாக நியமித்து ஸ்தாபித்தான்.

26. அவர்கள் எப்பொழுதும் ஜனங்களை நீதி நியாயம் விசாரித்துக் கனத்த காரியங் களை மோயீசனிடத்தில் கொண்டு வருவார் கள். சாமானிய வழக்குகளை மாத்திரந் தீர்ப்பார்கள்.

27. பின்பு மோயீசன் தன் மாமனை அனுப்பிவிட அவன் திரும்பத் தன் தேசத்துக்குப் போய்விட்டான்.

* 27-ம் வசனம். ஜெத்திரோ தன் தேசத்திற்குத் திரும்பிப் போகும்போது, தனது குமாரனாகிய ஒபாப் என்பவனை இஸ்றாயேலியருக்கு வனாந்தரத்தில் வழிகாட்டியாக விட்டு விட்டுப் போனான் என்று அறியவும் (எண்ணாகமம் 10:29).