இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

யாத்திராகமம் - அதிகாரம் 17

இராப்பிதிமில் ஜனங்கள் தண்ணீர் அகப்படாமல் முறுமுறுத்ததும் - தேவன் கன்மலையினின்று தண்ணீர் சுரக்கப் பண்ணினதும் - அமலேசித்தார் தோற்றுப் போனதும்.

1. பிறகு இஸ்றாயேல் புத்திரர்களின் சபை முழுவதுமே சின்னென்னும் வனாந்த ரத்திலிருந்து புறப்பட்டுக் கர்த்தருடைய கட்டளையின்படியே பற்பல ஸ்தலங்களிலே தங்கிய பின்னர், இராப்பிதிமிடத்திற்கு வந்து பாளையம் இறங்கினர். அங்கு ஜனங்களுக் குக் குடிக்கத் தண்ணீர் இல்லை.

2. அப்பொழுது அவர்கள் மோயீச னோ டே வாதாடி: நீர் எங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் தரவேண்டுமென, மோயீசன்: நீங்கள் என்னோடே ஏன் வாதாடுகிறீர்கள்? கர்த்தரை ஏன் பரீட்சைப் பண்ணுகிறீர்கள்? என்றான்.

3. உள்ளபடி அவ்விடத்திலே தண்ணீர் இல்லாமையினாலே தாக வேதனைப்பட்ட ஜனங்கள் மோயீசனுக்கு விரோதமாய் முறு முறுத்து: நீர் எங்களையும் எங்கள் பிள்ளை களையும் ஆடு மாடு முதலிய ஜீவன்களையும் தண்ணீர் தாகத்தினால் கொன்றுபோடத் தானோ எங்களை எஜிப்த்திலிருந்து அழைத்து வந்தீரென்று குறை சொல்லக் கேட்டு,

4. மோயீசன் ஆண்டவரை நோக்கிக் கூப்பிட்டு: அடியேன் இப்பிரஜைக்கு என்ன செய்வேன்? இன்னுங் கொஞ்சத்திலே என் னைக் கல்லாலெறிவார்களே என்றனன்.

5. அப்போது கர்த்தர் மோயீசனை நோ க்கி: நீ பிரஜைகளுக்கு முன்னிலையில் சென்று இஸ்றாயேலியப் பெரியவர்களில் சில பேர்க ளை உன்னுடன் சேர்த்து நதியை அடித்த கோலை உன் கையிலேந்தி நடந்து போவாய்.

6. அதோ நாம் அவ்விடத்திலே ஓரேப் என்கிற பாறையின்மீது உன் முன் நிற்போம். நீ அந்தப் பாறையை அடி, அடிக்கவே ஜனங்கள் குடிக்கச் ஜலம் புறப்படும் என்றார். மோயீசன் இஸ்றாயேலியரில் பெரியோர்களின் பார்வைக்கு முன்பாக அவ் விதமே செய்தான்.

7. இஸ்றாயேல் புத்திரர்கள் வாதாடியது மன்றி, ஆண்டவர் நம்மோடே இருக்கிறாரோ இல்லையோவென்று அவர்கள் கர்த்தரைப் பரீட்சை பண்ணின முகாந்தரமாய் மோயீசன் இந்த ஸ்தலத்திற்குச் சோதனை என்று பெயரிட்டனன்.

8. ஆனால் அமலேசித்தார் வந்து இராப் பிதிமிலே இஸ்றாயேலித்தாரோடே யுத்தம் பண்ணினார்கள்.

9. அப்போது மோயீசன் ஜோசுவாவை நோக்கி: நீ (வேண்டிய) வீரர்களைத் தெரிந்து கொண்டு அமலேசித்தாரோடே போராடு: நாளைக்கு நான் பாறையுச்சியிலே தேவன் கொடுத்த கோலை என் கையிலே பிடித்துக் கொண்டு நிற்பேன்.

10. ஜோசுவா தனக்கு மோயீசன் சொன் னபடி செய்து அமலேசித்தாரோடு யுத்தம் பண்ணினான். மோயீசன், ஆரோன், ஊர் இவர்கள் மலையுச்சியிலே ஏறிப்போனார் கள்.

11. மோயீசன் தன் கையை ஏறெடுத்திருக் கையில் இஸ்றாயேலியர் வெற்றி பெறு வார். அவன் சற்றாகிலும் தன் கையைத் தாழ விட்டாலோ அந்நேரத்தில் அமலேசித்தார் மேற்கொள்ளுவார்கள்.

12. ஆனால் மோயீசனுடைய கைகள் அசந்து போயிற்றென்று கண்டு அவர்கள் ஓர் கல்லைக் கொண்டுவந்து அவன் கீழே வைத் தார்கள். அவன் அதின்மேல் உட்கார்ந்த பின்பு, ஆரோனும் ஊரும் இருபுறமாய் அவ னது கைகளைத் தாங்கிக்கொண்டார்கள். அதினால் சூரியன் அஸ்தமிக்குமட்டும் அவனுடைய கைகள் அசந்துபோகவில்லை.

13. ஜோசுவா அமலேக்கையும் அவன் ஜனங்களையும் பட்டயக் கருக்கினாலே வெட்டிச் சிதறவடித்தான்.

14. கர்த்தர் மோயீசனை நோக்கி: இதை ஞாபகமாக நீ புத்தகத்தில் எழுதி ஜோசுவா கேட்கும்படி வாசிப்பாய், ஏனென்றால் நாம் அமலேக்கின் அடையாளத்தை அழித்து அது வானத்தின் கீழ் எங்கும் இல்லாதபடிக்குச் செய்வோமென்று திருவுளம்பற்றினார். 

* 13,14-ம் வசனம். சுவாமி அமலேசித்தாரைப் பகைத்த முகாந்திரம் என்னவென்றால், அவர்கள் நியாயமின்றி இஸ்றாயேலியரை விரோதித்து வாக்குத்தத்த பூமியிடம் போகாதபடிக்கு அவர்களை எதிர்த்ததுமல்லாமல் போர்க்களத்திலே சோர்ந்து பலனற்று விழுந்த எபிறேயரைக் கொடூரமாய்க் கொன்றார்கள். (உபாகமம் 15:18). இவ்வசனத்திள்ள தீர்க்கத்தரிசனம் நிறைவேறிற்று. அவர்களின் மட்டில் சவுல் தேவகட்டளை மீறி அவர்களைச் சங்கரியாததினால் இராஜாங்கத்தை இழந்தான் (1 அரசர் 15:26). தாவீது இராஜாவோ அவர்களைக் குறைவின்றிச் சங்காரம் பண்ணினார் (1 அரசர் 30:17).

15. அப்பொழுது மோயீசன் ஒரு பலி பீடத்தைக் கட்டித் தேவன் என்னை உயர்த்தினாரென்று அதற்குப் பெயரிட்டு,

16. கர்த்தருடைய சிம்மாசன வல்லமையும் கர்த்தருடைய பகையும் தலைமுறை தலைமுறையாக அமலேசித்தாரை விரோதிக்குமென்று சொன்னான்.