இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

லேவியராகமம் - அதிகாரம் 06

தெரிந்து செய்த பாவத்தினிமித்தம் செய்ய வேண்டிய பலிகளின் விஷயத்திலே குருக்கள் செய்ய வேண்டிய தொழில்
1. பின்னுங் கர்த்தர் மோயீசனை நோக்கி:

2. யாதாமொருவன் பாவியாகிக் கர்த்தரை நிந்தித்துப் பிறத்தியான் தன்னை நம்பித் தன் வசத்தில் ஒப்புவித்த பொருளைத் தான் வாங்கவில்லை என்று மறுதலித்தாவது, யாதொரு வஸ்துவைப் பலாத்காரமாகப் பறித்தாவது, தன் அயலான மாறாட்டம் பண்ணியாவது,

3. காணாமற்போன பொருளைக் கண்டடைந்தும் இல்லையென மறுதலித்து அதைக் குறித்துப் பொய்ச் சத்தியம் செய்தாவது, அல்லது மனிதர்கள் வழக்கமாய்ச் செய்யும் பற்பல பாவங்களிலே யாதொன்றையாகிலும் செய்திருப்பானாகில்,

4. அவன் குற்றவாளியென்று ரூபிக்கப் பட்டதின் பிறகு,

5. அவன் வஞ்சகமாய்க் கைக்கொள்ளத் தேடியவைகளையெல்லாம் முழுதுமே திரும்பிக் கொடுக்க வேண்டியதன்றி, அதனோடு கூட ஐந்தில் ஒரு பங்கு அதிகமாகக் கூட்டி நஷ்டப்பட்ட உடையவனுக்குக் கொடுத்து உத்தரிக்கக் கடவான்.

6. தன் பாவ நிவாரணமாகவோவென்றால், செய்த குற்றத்தின் கனத்துக்கும், மதிப்புக்கும் தக்காப்போல், மந்தையினின்று பழுதற்ற ஆட்டுக்கடாவைக் கொண்டு வந்து அதைக் குருவிடம் ஒப்புக்கொடுப்பான்.

7. இவன் கர்த்தருடைய சமூகத்தில் அவனுக்காகப் பிரார்த்திக்க, அவன் குற்றமாய்ச் செய்ததெல்லாம் மன்னிக்கப் படும்.

8. கர்த்தர் பின்னும் மோயீசனை நோக்கி:

9. நீ ஆரோனுக்கும் அவன் குமாரர்களுக்கும் கட்டளையிட வேண்டியதாவது: சர்வாங்கத் தகனப் பலிக்கடுத்த சட்டப் பிரமாணமெதெனில்: தகனப்பலி இரா முழுவதும் விடியற்கால பரியந்தம் பீடத்தின் மேல் எரிய வேண்டியதன்றி, அதன் அக்கினி அதே பீடத்தின் அக்கினியாயிருக்க வேண்டியது.

10. ஆசாரியன் மெல்லிய சணல் நூலால் நெய்யப் பட்ட அங்கியையும், சல்லடத்தையும் உடுத்திக் கொண்டவனாய், அக்கினியலி எரிந்த தகனப்பலியின் சாம்பலை எடுத்துப் பீடத்தண்டையில் கொட்டிப் பின்பு,

11. முந்தின வஸ்திரங்களைக் கழற்றி வேறு (வஸ்திரங்களை) உடுத்திக் கொண்டு அந்தச் சாம்பல்களைப் பாளையத்திற்குப் புறம்பே கொண்டு போய், அதி பரிசுத்தமான இடத்திலே (கொட்டி) அது காணாமல் துVளாய்த்தானே அவிந்து போக விடுவான்.

12. அக்கினியோவெனில் எப்பொழுதும் பீடத்திலே எரியும். குரு நாடோறும் காலையில் விறகுகளை இட்டு அதைக் காப்பாற்றி, அதின்பேரில் தகனப் பலியையும் அதின்மேல் சமாதானப் பலிகளின் கொழுப்புகளையும் வைத்துத் தகனிக்கக் கடவான்.

13. அவ்வக்கினியே ஒருக்காலமும் அவிந்து போகாமல் எப்பொழுதும் பீடத்தின்மேல் இருக்க வேண்டிய நெருப்பாமே.

14. ஆரோனின் குமாரர்கள் கர்த்தருடைய சமூகத்திலும், பலிபீடத்திற்கு முன்னும் படைக்க வேண்டிய பலிக்கும், பான போஜனப் பலிகளுக்கும் அடுத்த சட்டப் பிரமாணம் இதுவே.

15. குருவானவர் எண்ணையால் தெளிக்கப் பட்ட மெல்லிய மாவில் தன் கைப்பிடி நிறைய எடுத்து, அதையும் மாவின்மேல் வைக்கப் பட்ட தூபவர்க்கம் யாவையும் பீடத்தின்மேல் கர்த்தருக்கு அதிசுகந்த மணத்தின் திருஷ்டாந்தமாகத் தகனிக்கக் கடவான்.

16. மாவில் மீதியானதையோ ஆரோனும் அவன் குமாரர்களும் புளிப்பில்லாமல் புசிப்பார்கள். கூடார மண்டபமாகிய பரிசுத்த ஸ்தலத்திலே அதைப் புசிப்பார்கள்.

17. அது புளிப்பில்லாதிருக்க வேண்டிய முகாந்தரமேதெனில்: அதில் ஒரு பாகம் கர்த்தருக்குத் தகனப்பலியாகப் படைக்கப் படுகின்றதினாலேயாம். அது பாவ நிவாரணப் பலியைப் போலும், குற்ற நிவாரணப் பலியைப் போலும் மகா பரிசுத்தமானது.

18. ஆரோனுடைய வமிசத்தாராகிய ஆடவர் மாத்திரம் அதைப் புசிப்பார்கள். கர்த்தருக்கு இடப்படும் பலிகளில் அது உங்கள் தலைமுறைகள் தோறும், சட்டப் பிரமாணமாயும் நித்தியமாயுமிருக்கும். அதைத் தொடுகிறவன் எவனும் பரிசுத்தனாகக்கடவான் என்றருளினார்.

19. பின்னும் கர்த்தர் மோயீசனை நோக்கி:

20. ஆரோனும் அவன் குமாரர்களுந் தங்கள் அபிஷேக நாளில் கர்த்தருக்குப் படைக்க வேண்டிய காணிக்கை என்னவென்Vல், ஏப்பி (அளவில்) பத்தில் ஒரு பங்கு மெல்லிய மாவைக் காலையில் பாதியாகவும், மாலையில் பாதியாகவும் நித்தியப் பலியாய்ச் செலுத்தக் கடவார்கள்.

* 20-ம் வசனம். இதிலும் இதைப் போன்ற வசனங்களிலும் இன்று கடங்குகளாவது பிரமாணமாவது நித்தியம் ஆயிருக்குமென்று சொல்லியிருக்கின்றமையால் உலகம் முடியுமட்டும் அவ்விதச் சடங்குகள் நடந்தேற வேண்டுமென்று நினைக்க வேண்டாம். திவ்ய இரட்சகர் ஆகமன காலமட்டும் அதுகள் கற்பித்திருக்கின்றனவென்று கண்டுபிடிக்க வேண்டியது.

21. அது எண்ணையால் தெளிக்கப் பட்டுச் சட்டியிலே பொரிக்கப்படும். அதைக் கர்த்தருக்கு அதி சுகந்த வாசனையாகச் சுடச்சுடப் படைக்க வேண்டியவன் (யாரென்றால்)

22. தன் தகப்பனுடைய ஸ்தலத்திலே சுதந்தரமாய் அபிஷேகம் பண்ணப் பட்ட ஆசாரியனே. (மேற்படி) காணிக்கையோ பீடத்தின்மேல் முழவதும் தகனிக்கப் படக்கடவது.

23. ஏனென்றால் குருக்களின் பலியெல்லாம் நெருப்பிலே தகிக்கப்படுமொழிய அது எவனாலேயும் புசிக்கப் படாது என்றருளினார்.

24. மீளவுங் கர்த்தர் மோயீசனை நோக்கி: 

25. நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் சொல்ல வேண்டியதாவது: பாவ நிவாரணப் பலியின் பிரமாணம் என்னவெனில், தகனப்பலி எந்த ஸ்தலத்தில் ஒப்புக் கொடுக்கப் படுவதோ அந்த ஸ்தலத்தில்தான் அதுவும் ஒப்புக் கொடுக்கப்படும். அது பரிசுத்தத்திலும் பரிசுத்தமானது.

26. ஒப்புக் கொடுக்கிற குருவானவன் பரிசுத்த ஸ்தலத்திலே கூடார மண்டபத்தில் அதைப் புசிப்பான்.

27. அதின் மாமிசத்தில் படுகிறது எதுவோ அது பரிசுத்தமுள்ளதாகும். அதின் இரத்தத்திலே கொஞ்சம் ஒரு வஸ்திரத்தில் தெறித்ததானால் அந்த வஸ்திரம் ஒரு பரிசுத்தமான ஸதலத்தில் கழுவப்பட வேண்டும்.

28. இது சமைக்கப்பட்ட கண்பாண்டம் உடைக்கப் படவேண்டும். வெண்கலப் பாத்திரத்தில் சமைக்கப்பட்டதானாலோ அது விளக்கப் பட்டுத் தண்ணீரால் கழுவப் பட வேண்டும்.

29. குரு வமிசத்தைச் சேர்ந்த ஆண்மக்கள் யாவரும் அதின் இறைச்சிகளைப் புசிப்பார்கள். ஏனெனில் அது பரிசுத்தத்திலும் பரிசுத்தம்.

30. ஆனால் எந்தப் பால நிவாரணப் பலியின் இரத்தத்திலே கொஞ்சம் பால விமோசனத்தின் பொருட்டுப் பரிசுத்த ஸ்தலத்திற்குள் சாட்சியக் கூடாரத்தில் கொண்டுவரப் பட்டதோ, அந்தப் பலி புசிக்கப்படலாகாது. அக்கினியில் தகனிக்கப்பட வேண்டும்.