இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இதை வெளியிட்டால் II...

கடவுளின் பெயரை அர்ச்சிப்பதைப் பற்றியும், கடவுளை மகிமைப்படுத்துவதைப் பற்றியும் நாம் பேசும்போது, அவரை நாம் மகிமைப்படுத்தக்கூடிய இன்னொன்றை, அதாவது திவ்விய பூசைப்பலியை நாம் மறந்து போகக்கூடாது.

கடவுள் யார்? அவர் மிகப் பரிசுத்தர், மகத்துவம் நிறைந்த கர்த்தர்; ஆனால் அதே கடவுள் பட்சமுள்ள நம் பரலோக தந்தை. இதை நாம் திவ்விய பூசை நேரத்தில் நன்கு உணரலாம் பூசை நேரத்தில் பெரி யோரும் சிறியோரும், வயோதிபரும் இளை ஞரும், பணக்காரரும் ஏழைகளும் தங்கள் மோட்சதந்தைக்கு முன் தலைவணங்கி, அகில திருச்சபையுடனும் ஒன் றித்து அவரை வாழ்த்துகிறார்கள்.

கடவுள் தூய்மையானவர். பாவம் நிறை மானிடர் தக்கவி தமாக ஒரு போதும் அவர் நாமத்தை அர்ச்சித் துப் புகழமுடியாது. ஆனால் அவருடைய பரிசுத்த குமாரன் கொடுக்கும் விலையேறப்பெற்ற, ஒப்புயர் வற்ற பலியினால்- திவ்விய பூசையினால் - அவருக்குத் தக்க வணக்கம் செலுத்தப்படுகிறது. கடவுளின் பெயரை மகிமைப்படுத்துவதற்கு கிறிஸ்துநாதரது பலியாகிய திவ்விய பூசையைப்போல் உன்னத வழி உலகில் எங்கும் கிடையாது. பரலோக பூலோக வாசி கள் யாவரும் சேர்ந்து கடவுளின் நாமத்துக்கு கொடுக்கும் மகிமையை விட ஒரே ஒரு திவ்விய பலி பூசை அதிக மகிமை வருவிக்கிறது.

அதனால் தான் நாம் ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடன் திருநாட்களிலும் திவ்விய பூசை காண வேண்டும் என்று திருச்சபை சட்டமியற்றியிருக்கி றது. திருச்சபை இருப்பதன் நோக்கம் என்ன? கடவுளின் பெயரை அர்ச்சிக்க, மகிமைப்படுத்த. அதற்கான மிகச் சிறந்த வழி திவ்விய பலி பூசையே.

ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடன் திருநாட்களி லும் பூசை காணாதவன், கடவுளது நாட்களை வந்தனை செய்யா தவன், கடவுளை மகிமைப்படுத்துவதில்லை. ஞாயிறு பூசைக்குப் போகாதவன், கர்த்தர் கற்பித்த முதல் மன்றாட்டை உண்மையுடன் சொல்ல முடி யாது; ஏனெனில் அவனே கடவுளின் நாமத்தை அர்ச்சிப்பதில்லை.

கோவிலுக்குப் போகாதிருக்கிறவர்கள், தாங்கள் தவறு செய்யவில்லை என்று எண்பிக்கிறதற்கு கிறிஸ்து நாதரது வார்த்தைகளை எடுத்துக்கூறுகிறார் கள் : ''நீயோவென்றால், ஜெபம் செய்யும்போது, உன் அறைக்குட் பிரவேசித்துக் கதவைச்சாத்தி, அந்தரங் கத்தில் உன் பிதாவைப் பிரார்த்தித்துக் கொள். அப் போது அந்தரங்கத்தில் காண்கிற உன் பிதா உனக் குச் சம்பாவனை அளிப்பார்.'' (மத். 66)

இந்த வார்த்தைகளை நம் நேச இரட்சகர் சொன் னது உண்மையே. பரிசேயர்களது வெளிப்பகட்டைக் கண்டிக்கும்படி அவ்விதம் சொன்னாரேயொழிய, கோவிலுக்குப்போவதை அவர் கண்டிக்கவே இல்லை. அவரது நடத்தையைப் பார்த்தாலே இந்த உண்மை வெளிப்படும். அவர் தம் அறையிலேயே உட்கார்ந் திருக்கவில்லை, ஆனால் அடிக்கடி கோவிலுக்குச் சென் றார்.

யேசுவுக்குப் பன்னிரண்டு வயது நடக்கையில் அவருடைய மாதாவும் புனித சூசையப்பரும் அவரை ஜெருசலேமிலுள்ள தேவாலயத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அவர்கள் மூவரும் ஜெபித்துக்கொண் டும் பாடிக்கொண்டும் ஜெருசலேமை நோக்கித் திரு யாத்திரை செய்வதைப் பார்க்கக் கொடுத்து வைத்த வர்கள் பாக்கியவான்கள். அது கண் கொள்ளாக் காட்சியாயிருந்திருக்கும். "ஆண்டவருடைய வீட்டுக் குப் போவோம் என்று எனக்குச் சொல்லப்பட்ட து களைப்பற்றிச் சந்தோஷப்பட்டேன்" (சங். 121/1) என்னும் தாவீதரசனின் வார்த்தைகளை அம்மூவரும் உலகுக்கு பகிரங்கப்படுத்திக்கொண்டே ஜெருசலே முக்குப் போனார்கள்.

“தேவாலயம் செல்ல நான் கடமைப்பட்டவனல்ல. தேவாலயம் எனக்குத் தேவையில்லை. என் பரலோக பிதாவை நோக்கி நான் ஜெபிக்க விரும்பினால், எங்கும் எந்தநேரத்திலும் நான் ஜெபிக்கக்கூடும், ஏனெனில் நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்'' என யேசு சொல்லக்கூடும். ஆனால் அவர் அவ்விதம் சொல்ல வில்லை. எல்லோருக்கும் அவர் ஒரு நன்மாதிரியா யிருந்தார். தேவாலயத்துக்குப் போகத் தேவையில்லை என்போர் அவரது வார்த்தைகளைக் கவனிப் பார்களாக.

எல்லோருக்கும் அவர் ஒரு மேல்வரிச் சட்ட மானார். ஆண்டவராகிய யேசுநாதர் ஜெபித்தும் பாடிக்கொண்டும் தேவாலயத்துக்குப்போய், பர லோக பிதாவை பகிரங்கமாக ஆராதித்து எல்லோ ருக்கும் நன்மாதிரியானார்.

ருஷியாவில் ஒரு தொழிலாளி இருந்தான். வேத விரோதிகளின் கூட்டத்துக்கு ஒருநாள் அவன் போய் விட்டு வீட்டுக்குத் திரும்பினான். வந்ததும் தன் பிள் ளைகளைப் பார்த்து, "உங்கள் கழுத்தில் தரித்திருக்கும் சிலுவையை எடுத்து விடுங்கள். இனி நீங்கள் ஜெபிக் கக் கூடாது. நான் சொல்வது உங்களுக்குப் புரி கிறதா?” என்றான்.

தகப்பன் சொன்னது அவர்களுக்கு விளங்கினது. வார்த்தைகளை விட அவனது பார்வை அதிக குரூ ரமாயிருந்தது. அந்தத் தொழிலாளியின் சிறு மக ளுக்கு ஒரு சிநேகிதி இருந்தாள். சில நாட்கழித்து அவள் அந்த சிநேகிதியைப் பார்த்து: “நீ என்னைக் காட்டிக் கொடுப்பதில்லை என்று சொல். நான் உனக்கு ஒரு இரகசியம் சொல்வேன். நாங்கள் ஜெபிக் கக்கூடாதென அப்பா உத்தரவிட்டதிலிருந்து நாங் கள் படுக்கையில் போர்வையால் நன்றாக மூடிக் கொண்டு ஜெபித்துவருகிறோம்'' என சிறுமி கூறி னாள்.

சிறுவர்கள் ஜெபிக்க விரும்பினால் ஒளிந்து ஜெபிக்க வேண்டியிருக்கிறது. இது விசனிக்கத்தக் கது. ஆனால் இதைவிட விசனத்துக்குரியதும் உண்டு-வயது வந்தவர்கள் முதலாய் ஒளிந்து கொண்டு ஐெபிக்கிறார்கள். ருஷியாவில் மாத்திரம் இவ்விதம் செய்வதில்லை; இங்கும் நம் நாட்டிலும், பலர் இவ்விதம் செய்துவருகிறார்கள். இப்பேர்ப்பட்ட கிறிஸ்தவர்கள் கடைக்குப்போய், “ஜெபப் புத்தகங் கள் இருக்கின்றனவா? பார்ப்போம். ஆனால் சிறு புத் தகமாயிருக்க வேண்டும். பிறர் பார்க்க முடியாத படி பையில் போட்டுக்கொள்ளக் கூடியதாயிருக்க வேண்டும். இந்தக் காலத்தில் ஜெபப்புத்தகங்களைக் கொண்டு போகிறதைப் பிறர் பார்த்தால் கேலிபண் ணுவார்கள். எனக்கு ஜெபமாலையும் வேண்டும். சிறிதாயிருக்க வேண்டும். பிறர் கவனிக்க முடியாத அளவு சிறிதாயிருக்க வேண்டும்" என்கிறார்கள்.

கத்தோலிக்கக் கோவிலைக் கடந்து செல்கையில் இப்பேர்ப்பட்டவர்கள் சிலுவை அடையாளம் வரைந்து கொள்கிறார்கள். "பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே'' என்று சொல்லி சிலுவை வரைகிறார்கள். ஆனால் அவர்கள் சிலுவை வரை வதைப் பார்த்தால், உடையிலிருக்கும் தூசியை அகற்றுகிறாப் போல் அல்லது கொசுவை விரட்டுகி றாப்போல் இருக்கிறது. இவர்கள் கோவிலில் நுழைந் ததும் முழந்தாளிட்டு வணக்கம் செய்கிறார்கள். ஆனால் திவ்விய நற்கருணை இருக்கும் திசையை நோக் கிப் பணியாது வேறு எந்தத் திசைக்கோ வணக்கம் செலுத்துகிறார்கள்; ஏதோ தவறி விழுகிறாப் போல், தரையைத் தொட்டும் தொடாமலும் முழங்கால் பணிகின்றார்கள். ''உம்முடைய நாமம் அர்ச்சிக்கப் படுவதாக'' என நாள் தோறும் இவர்கள் சொல்கிறார் கள். ஆனால் பகிரங்கமாக கடவுளின் பெயரை மகிமைப்படுத்த இவர்கள் பின் வாங்குகின்றனர்.

கடவுளது திருப்பெயரை நாம் பகிரங்கமாக அர்ச்சித்து வரவேண்டும். அதைப் பற்றி பிறருக்கு முன் வெட்கப்படலாகாது. கோழைகளாயிருக்கக் கூடாது. நம் திரு வேதத்தைப் பற்றி ஏன் வெட்கப் படவேண்டும்? மெய்யங்கடவுளை மகிமைப்படுத்தக் கிடைப்பது பெரும் பாக்கியம் என்றல்லவா நினைக்க வேண்டும்.

ஆதிகாலத்தில் பலர் திருச்சபையை விரோ தித்து அதை அழிக்கக் கங்கணம் கட்டினார்கள், சிம்பிளிசியானுஸ் கிறிஸ்தவன். வேதத்துக்காக பிடி பட்டவன்; விக்டொரீனுஸ் பிற மறையினன், பெரும் பேச்சாளன். இவர்கள் இருவரும் பேசிக் கொண்டி ருந்தனர். ''ஒன்று நிச்சயம், நான் சாகுமுன் கிறிஸ்தவ வேதத்தில் சேர்ந்து கொள்வேன்'' என விக்டொரீனுஸ் கூறினான்.

"நான் அவ்வார்த்தையை நம்ப மாட்டேன். உம்மைக் கோவிலில் நான் என் கண்களால் பார்த்தாலொழிய நான் ஒரு போதும் அதை நம்பமாட்டேன்'' என்னும் பதில் வந்தது.

“ஏன் நம்பக்கூடாது? கோவிற் சுவர்கள் தான் ஒருவனைக் கிறிஸ்தவனாக்குகின்றனவோ?'' என விக்டொரீனுஸ் வினவினான்

"அப்படி நான் சொல்லவில்லை! 'ஆனால் மனிதன் முன்னிலையில் என்னை மறுதலிப்பவன் எவனோ அவனை நானும் பரமண்டலங்களிலிருக்கிற என் பிதா வின் முன்னிலையில் மறுதலிப்பேன்' என ஆண்டவர் கூறியிருக்கிறாரே'' என சிம்பிளிசியானுஸ் மொழிந் தான்.

இதைக் கேட்டதும் விக்டொரீனுஸ் சிந்தனையி லாழ்ந்தான். சிம்பிளிசியானுஸ் கூறியது உண்மை யென உணர்ந்தான். கிறிஸ்துநாதர் நம் கடவுள் என்பதை வெளியரங்கமாக ஒத்துக்கொள்ள வேண டும். கிறிஸ்துநாதருடைய திருநாமத்துக்காக கிறிஸ்தவன் போரிட தயாராக நிற்க வேண்டும், ஆதிக்கிறிஸ்தவர்கள் தங்கள் இரத்தத்தைச் சிந்தி அதற்குச் சாட்சி பகர்ந்தார்கள். நாமோ இரத்தம் சிந்த இன்னும் தேவை ஏற்படவில்லை; ஆனால் தேவ காரியங்களில் தைரியத்துடன் பங்கு பற்றி, நாம் கிறிஸ்தவர்கள் எனக் காண்பித்து, நம் வேதத்துக் காக உழைத்து கிறிஸ்துநாதரின் நாமத்துக்குச் சாட்சி சொல்ல வேண்டும்.

நம் வேத விசுவாசம் பெரும் திரவியம், ஆனால் பரிசேயர்களைப் போல் தெருச் சந்திகளில் நின்று அதைப் பறையறைந்து கூவவேண்டுமென்று நான் சொல்லவில்லை : நாம் எந்த மதத்தைச் சேர்ந்தவர் கள் என நாம் காண்பிக்க வாய்ப்பு ஏற்படலாம். எல்லோரும் குறிப்பிட்ட கருத்துக்காக திவ்விய நன்மை வாங்கி ஒப்புக் கொடுக்க வேண்டிய நாள், வேத சம்பந்தமான சுற்றுப் பிரகாரம், கத்தோலிக்கக்கூட்டம், இவற்றில் பங்கு பற்றியும், கத்தோலிக் கப் பத்திரிகைகளுக்கு சந்தாதாராகச் சேர்ந்தும், இது போன்ற பல வழிகளில் நாம் கிறிஸ்தவர்கள் என உலகுக்கு அறிவித்து, கிறிஸ்துநாதரின் நாமத் துக்குச் சாட்சி பகரலாம். "உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக'' என்னும் மன்றாட்டில் இவை யாவும் அடங்கியிருக்கின்றன. இதை நம்ப விருப்ப மில்லாதவன், நம் ஆண்டவரது வார்த்தைகளைப் பற்றி சிந்திப்பானாக. “மனிதர் முன்னிலையில் என்னை அங்கீகரித்து ஒத்துக் கொள்பவன் எவனோ, அவனை நானும் பரமண்டலங்களிலிருக்கிற என் பிதாவின் முன்னிலையில் அங்கீகரித்து ஒத்துக் கொள்வேன். ஆனால் மனிதர் முன்னிலையில் என்னை மறுதலிப்பவன் எவனோ, அவனை நானும் பரமண்டலங்களிலிருக்கிற என் பிதாவின் முன்னிலையில் மறுதலிப்பேன்.'' (மத். 10 | 32. 33.)

யேசுக்கிறிஸ்துநாதர் புகழப்படுவாராக. இந்த வாழ்த்து மொழிகள் வத்திக்கான் ரேடியோ நிலையத் திலிருந்து ஒவ்வொரு நாளும் உலகெங்கும் ஒலிக்கின் றன. ஒலிபரப்பின் முடிவில், கடைசி மொழிகளாக இந்த வாழ்த்து உரைக்கப்படுகிறது. யேசுக்கிறிஸ்து நாதர் புகழப்படுவாராக என்னும் மொழிகளே என் வாழ்வின் கடைசி வார்த்தைகளாயிருக்க நான் ஆசிக் கிறேன்.

ஒரு நல்ல பெண் மரணப்படுக்கையில் கிடந்தாள். தன் வாழ்நாளெல்லாம் அவன் கடவுளுக்குத் தன்னா லான சேவை செய்து வந்தாள். இப்பொழுது அவளுக்கு ஒரு கவலை. அவளைப் பார்க்க வந்த குரு விடம் அவள் அதை வெளியிட்டாள் : "சுவாமி, நான் உயரப்போய் கடவுள் முன் நிற்கையில் என்ன சொல்வது என்றறியாமல் திகைப்பேனே. கடவுள் எவ்வளவோ பெரியவர் ! நான் படியாத கிழவி. பெரியவர்களுடன் இதுவரை நெருங்கிப் பழகின தில்லையே! கடவுளைப் பார்த்ததும் ஒரு வார்த்தை முதலாய் பேச தைரியம் வராதே!'' என்றாள்.

குரு சற்றுநேரம் மௌனமாயிருந்தார். நோயாளி யின் தாழ்ச்சியையும் விசுவாசத்தையும் பார்த்து அதிசயித்தார்." பாட்டி, பயப்படாதே: சர்வேசுரனின் சிம்மாசனத்துக்கு முன் போய்ச் சேர்ந்ததும், தாழ்ச் சியுடன் தலைவணங்கி, "பேசுக்கிறிஸ்துநாதர் புகழப் படுவாராக” என்று சொல். 'உடனே என்றென்றைக் கும் ஆமென், என்றென்றைக்கும் ஆமென்' என்ற சத்தம் மோட்சத்தின் நானாதிக்குகளிலும் கேட்கும்'' எனக் கூறினார்.

சகோதரரே, யேசுக்கிறிஸ்துநாதருடைய நாமத் தின் மகிமையையே நாம் நம் வாழ்வின் நோக்கமாகக் கொள்வோமாக.

நம் வாழ்க்கையால் கடவுளின் திருநாமத்தை நாம் மகிமைப்படுத்த அவர் அருள் புரிவாராக. அவ ரது மகிமைக்காக நம் வாழ்நாளைச் செலவழித்த பின், “யேசுக்கிறிஸ்துநாதர் புகழப்படுவாராக'' என்னும் வார்த்தைகளுடன் நாம் அவரது சிம்மாசனத்தின் முன் நின்று கூறுவோம். “என்றென்றைக்கும் ஆமென், என்றென்றைக்கும் ஆமென்'' என்னும் சத் தம் மோட்சத்தின் நாலா திக்குகளிலிருந்து வரு வதைக் கேட்கும் பாக்கியம் நம் எல்லோருக்கும் கிடைப்பதாக.