இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சேசு கிறீஸ்துவின் அதிமிக மகிமை

222. இந்தப் பக்தி முயற்சியைப் பிரமாணிக்கத்துடன் கைக் கொண்டால், மற்ற எந்த, எவ்வளவு கடினமான பக்தி முயற்சியாலும் பல ஆண்டுகளில் சேசு கிறீஸ்துவுக்குக் கொடுக்கும் மகிமையை விட அதிக மகிமையை உன்னால் ஒரு மாதத்தில் கொடுக்க முடியும், இப்படி நான் கூறு வதற்குரிய காரணங்கள் இதோ:

(i) இப்பக்தி முயற்சி கற்பிக்கிறபடி நீ உன்னுடைய எல்லாக் கிரியைகளையும் மரியாயின் வழியாகச் செய்கிறாய் எனவே உன் மனதறிந்த நல்ல கருத்துக்களையெல்லாம் நீ மாதாவுக்குக் கையளித்துக் கொடுத்து விடுகிறாய். மரியா யின் கருத்துக்களுள் உன்னையே இழந்து விட்டது போல் உன்னை அறியாமலேயே அவர்களிடம் அவற்றைக் கொடுத்து விடுகிறாய். இதனால் நீ மாதாவின் கருத்துக் களின் உயர்வில் பங்கடைகிறாய் அவர்களின் கருத்துக் கள் எவ்வளவு தூயனவாயிருந்தனவென்றால் அர்ச். லாரென்ஸ் நெருப்பிடப்பட்ட இரும்புக் கட்டிலில் கொடிய வேத சாட்சியம் அடைந்து கடவுளுக்கு அளித்த மகிமை யை விட அதிக மகிமையை அவர்கள் தன் தையல் குச் சியைச் சுற்றுவதனால் அல்லது ஊசியின் ஒரு தையலி னால் அளித்தார்கள். இதுமட்டுமல்ல, எல்லா அர்ச்சிஷ்டவர் களும் தங்கள் மிகப் பெரும் புண்ணியச் செயல்களினால் கடவுளுக்கு அளிக்கும் மகிமையை விட அதிகமான மகிமையை மாதா அளித்தார்கள். இதனாலேயே மாதா தன் உலக வாழ்க்கையில் எவ்வளவு மிகுதியான பேறு பலன்களையும் வரப்பிரசாதங்களையும் அடைந்தார்களென் றால், அவைகளை , எண்ணுவதைவிட வானத்தின் விண் மீன்களையும் சமுத்திர நீரின் துளிகளையும் கடற்கரையின் மணலையும் எண்ணுவது எளிதாயிருக்கும் இதினிமித்தமா -கவே மரியன்னை எல்லா சம்மனசுக்களும் எல்லா அர்ச்சிஷ்டவர்களும் இதுவரை கடவுளுக்கு அளித்த மகிமை, இனி அளிக்கப் போகும் மகிமை எல்லாவற்றையும் விட அதிகமான மகிமையை அளித்தார்கள்.
ஓ மரியாயே! எத்தகைய அற்புதப் பிறவியாக இருக் கின்றீர்! உம்மிடம் தங்களை முழுவதும் ஓப்படைத்துவிடும் ஆன்மாக்களில் அற்புதங்களையன்றி வேறு எதைத்தான் உம்மால் செய்யக் கூடும்!

223. (ii) இப்பக்தி முயற்சியில் ஆன்மா தன்னுடைய சொந்த நினைவுகளையும் செயல்களையும் ஒன்றுமில்லை என்று மதிக்கிறது. சேசுவிடம் செல்வதற்கும் அவருடன் பேசு வதற்கும் கூட மரியாயின் தகுதியிலேயே ஊன்றி நிற்கி றது. இதனால் தாங்களாகவே செயல்படும் ஆன்மாக்களை விட அதிக தாழ்ச்சி கொள்கிறது. தாங்களாகவே செயல் படும் ஆன்மாக்கள் தங்களை அறியாமலே தங்களிடம் ஊன்றிக் கொண்டு தங்கள் தகுதியில் திருப்தியடைகிறார் கள். எனவே மரியாயிடம் ஊன்றி நிற்கும் ஆன்மா கட வுளுக்கு அதிகமான மகிமையை அளிக்கிறது. இருதயத் தில் தாழ்ச்சியும் சாந்தமுமுள்ளவர்களால்தான் கடவுள் உத்தமமான மகிமையை அடைகிறார்.

224. (iii) நம் தேவ அன்னை தன் அளவற்ற அன்பி னால் நம் செயல்களாகிய காணிக்கையைத் தன் கன்னிமை நிறைந்த கரங்களில் வாங்குகிறார்கள். அவற்றிற்கு வியக் கத்தக்க அழகையும் பொலிவையும் அளிக்கிறார்கள். தானே அவைகளை சேசு கிறீஸ்துவிடம் சமர்ப்பிக்கிறார்கள். அவற்றை நாம் நம்முடைய பாவம் நிரம்பிய கரங்களால் கொடுப் பதை விட நம் அன்னை இவ்வாறு கொடுப்பதால் நமதாண் டவர் அதிகமாய் மகிமைப்படுத்தப்படுகிறார் என்பதில் ஐயமே இருக்க முடியாது.

225. (iv) இறுதியாக, நீ மாதாவை நினைக்கும் போதெல்லாம் அவர்கள் உன் சார்பாகக் கடவுளை நினைக் காமல் இருப்பதில்லை. நீ மரியாயை வாழ்த்திப் புகழும் போதெல்லாம் அவர்கள் உன்னுடன் ஆண்டவரை வாழ்த் திப் புகழாமல் இருப்பதில்லை. மாதா முழுவதும் கடவுளைச் சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். சர்வேசுரன் மீது சார்பு என்றே அவர்களை நான் கூறுவேன், கடவுளாலேயே மாதா இருக்கிறார்கள். மாதா சர்வேசுரனின் எதிரொலி. அவர்கள் கடவுளையே உச்சரிக்கிறார்கள். கடவுள் பேசு வதையே திரும்பப் பேசுகிறார்கள். நீ மரியாயே!'' என்று கூறினால் அவர்கள் "கடவுளே!'' என்று கூறுகிறார்கள். அர்ச். எலிசபெத் மரியாயை வாழ்த்தினாள். கடவுளை விசு வசித்ததற்காக அவர்களை "ஆசீர்வதிக்கப்பட்டவள்'' என்று அழைத்தாள். கடவுளின் மாறா எதிரொலியான மாதா "என் ஆன்மா ஆண்டவரை மகிமைப்படுத்துகிறது” என்று பாடினார்கள் (லூக். 1, 46). அன்று அவர்கள் செய்ததை இன்றும் தினம் தினம் செய்து வருகிறார்கள். மாதா புகழப்படும் போது கடவுள் புகழப்படுகிறார். மாதா நேசிக்கப்படும் போது கடவுள் நேசிக்கப்படுகிறார். மாதா மதிக்கப்படும் போது கடவுள் - மதிக்கப்படுகிறார். மாதாவுக்கு ஏதாவது கொடுக்கப்படும் போது, அவர்கள் வழியாகவும் அவர்களிடத்திலும் கடவுள் அக்காணிக் கையைப் பெற்றுக் கொள்கிறார்.

மகிமைக்குரிய பாத்திரமே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்